Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவாக விடையளிக்கவும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II

   Posted On :  24.07.2022 06:19 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

விரிவாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: VI. விரிவாக விடையளிக்கவும். VII. செயல்பாடுகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

 

1. சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.

• தென்கிழக்குச் சீனாவில் உள்ள ஷனான் நகரில் மா சே துங் பிறந்தார்.

• தம் இளைய வயதில் புரட்சிப்படை ஒன்றை ஆரம்பித்தார்.

• நூலகர்-கல்லூரிப் பேராசிரியர் என அவரது வாழ்க்கை மலர்ந்தது.

• ஹனான் நகரை மையமாகக் கொண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் முழு பொதுவுடைமைவாதியாக மாறியிருந்தார்.

• சீனா முழுவதும் நீடித்த சச்சரவுகள் முடிவிற்கு வந்த பின் 1949-இல் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு பீகிங் நகரில் கூடியது.

• பொதுவுடைமை மற்றும் இடதுசாரி அமைப்புகள் மா சே துங்கை தலைவராக தேர்ந்தெடுத்து நடுவண் அரசு ஆட்சி பொறுப்பேற்றது.

• மா சே துங் தலைமையில் ஐந்தாண்டுகள் ஆட்சி நடைபெற்றது.

• மா சே துங்கின் தலைமையில் உருவான சீன மக்கள் குடியரசு செயல்பாடுகள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

• மா சே துங்கின் இளமைப்பருவ நீண்ட பயணம், இராணுவப்படை மற்றும் கொரில்லாப் போர் முறை அவரை சிறந்த தலைமைப் பண்பை தந்தது.

• இன்று உலகில் சீனா பெரும் சக்தியாய் உருவானதற்கு மா சே துங்கின் அரிய பணியே காரணமாகும்.

 

2. ஐரோப்பியக்குழுமம் எவ்வாறு ஐரோப்பிய இணைவானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.

ஐரோப்பியக் குழுமம்:

• இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஐரோப்பாவில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார ஒற்றுமை மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைக்க முடிந்தது.

• அதன் விளைவே 1949இல் மே மாதம் பத்து நாடுகள் இலண்டனில் கூடி ஐரோப்பிய சமூகத்தை முன்னெடுத்தது.

ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம்:

• ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தைச் சேர்ந்த ஆறு நாடுகள் (பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், ஹாலந்து, லக்ஸம்பர்க்) கூடி ரோம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது

ஐரோப்பியப் பொருளாதார சமூகம்

• சந்தைப் போட்டியைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்ற போது கொள்கைகளையும் தனியார் ஒப்பந்தங்களையும் புறக்கணித்தது.

• பொதுவான விவசாயக் கொள்கையையும் பொதுவான வெளிநாட்டு வணிகத்தையும் இவ்வமைப்பு உருவாக்கியது

ஒற்றை ஐரோப்பியச் சட்டம்:

• ஒற்றை ஐரோப்பியச் சட்டம் 1 ஜூலை1987 இல் நடைமுறைக்கு வந்தது.

• அது ஐரோப்பியப் பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கி அதற்கு சட்டவடிவம் கொடுத்தது.

ஐரோப்பிய ஒன்றியம்:

1992 பிப்ரவரி 7 இல் ஐரோப்பிய ஒன்றியத்தை நெதர்லாந்து மாஸ்டிரிக்ட்  ஒப்பந்தம் உறுதிப்படுத்தியது.

• இன்றளவில் ஐரோப்பிய இணைவில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன.

• பெல்ஜியத்தின் பிரெஸ்ஸல்ஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

 

VII. செயல்பாடுகள்

 

1. வகுப்பை இருபிரிவுகளாக பிரிக்கவும். ஒரு பிரிவை அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதரவாளர்களாகவும் மற்றொரு பிரிவை சோவியத் நாட்டின் ஆதரவாளர்களாகவும் கொண்டு பனிப்போர் அரசியலை விளக்க விவாதமேடையமைக்க.

வகுப்பறை மாணவர் செயல்பாடுகள்.

 

2. பேரழிவு, மக்கள் இறப்பு போன்ற கருக்களைக் கொண்டு மொத்த வகுப்பையும் பயன்படுத்தி கொரியப்போர், அரபு-இஸ்ரேல் போர், வியட்நாம் போர் போன்றவற்றின் படங்களைச் சேகரித்து ஒரு படத்தொகுப்பை உருவாக்கலாம்.

மாணவர்கள் படத்தொகுப்பு சேகரிப்பு செயல்பாடுகள்.

 

Tags : The World after World War II | History | Social Science இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 4 : The World after World War II : Answer in detail The World after World War II | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : விரிவாக விடையளிக்கவும். - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்