Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

இனப்பெருக்கப் புறஅமைப்பியல் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm

   Posted On :  06.07.2022 09:21 pm

11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்கப் புறஅமைப்பியல்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

தாவரவியல் : இனப்பெருக்கப் புறஅமைப்பியல் - முன்பதிவு மற்றும் முக்கியமான கேள்வி பதில் - சுருக்கமான கேள்விகள் பதில்கள், குறுகிய கேள்விகளுக்கான பதில்கள்

11 வது தாவரவியல் : அலகு 4

இனப்பெருக்கப் புறஅமைப்பியல்

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

6. பூவடிச் செதிலுடைய, பூக்காம்புச் செதிலற்ற இருபால் மலர், முழுமையான ஐந்தங்கமலர், தனித்த புல்லி வட்டம், தனித்த அல்லிவட்டம் மேல்மட்டச் சூலகப்பை கொண்ட மலரின் மலர் சூத்திரத்தினை எழுதுக

Br, ebrl, , k(5), C(5), A5,G(5).

 

7. கீழ்க்கண்டவற்றுள் கலைச் சொற்கள் தருக

அ. ஒரு வளமற்ற மகரந்தத்தாள்

விடை: ஸ்டேமினோடு

ஆ. மகரந்தத்தாள்கள் ஒரு கட்டமாக இணைந்த மகரந்ததாள்கள்

விடை: ஒரு கற்றை மகரந்தத்தாள்

இ. அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல்

விடை: அல்லி ஒட்டியவை

 

8. சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக



சூல் ஒட்டுமுறை (Placentation)

விளிம்பு சூல் ஒட்டுமுறை (Marginal) : ஒற்றைச் சூலகத்தின் விளிம்பில் காணப்படும் சூல் ஒட்டுத்திசுவில் சூல்கள் ஒட்டியிருக்கும். எடுத்துக்காட்டு: ஃபேபேஸி

அச்சு சூல் ஒட்டுமுறை : சூல் ஒட்டுத்திசுவானது குறுக்குச்சுவருடைய பல சூலிலையுடைய இணைந்த சூலகப்பையின் மைய அச்சிலிருந்து தோன்றும். எடுத்துக்காட்டு: ஹைபிஸ்கஸ், தக்காளி, எலுமிச்சை

தடுப்புச் சுவர் சூல் ஒட்டுமுறை (Superficial) : சூல்கள் சூலகப்பை பிரிக்கும் குறுக்குச் சுவர்களின் புறப்பரப்பில் ஒட்டியிருக்கும் எடுத்துக்காட்டு: நிம்ஃபயேஸி

சுவர் சூல் ஒட்டுமுறை (Parietal) : ஓரறை கொண்ட பல சூலிலையுடைய இணைந்த சூலகப்பையின் சுவர்களின் மீது அல்லது சூலிலைகள் சந்திக்கும் இடங்களில் சூல் ஒட்டுத்திசு காணப்படும். எடுத்துக்காட்டு: கடுகு, அர்ஜிமோன், வெள்ளரி.

தனித்த மைய் சூல் ஒட்டுமுறை (Free central) : பல சூலிலை கொண்ட குறுக்குச் சுவர் அற்ற இணைந்த சூலகப்பை யின் மைய அச்சில் சூல் ஒட்டுத்திசு காணப்படும். எடுத்துக்காட்டு: கேரியாஃபில்லேஸி, டையாந்தஸ், பிரிம்ரோஸ்

அடிச்சூல் ஒட்டுமுறை : ஓரறை கொண்ட சூலகப்பையின் அடிப்புறத்தில் சூல் ஒட்டுத்திசு காணப்படும். எடுத்துக்காட்டு: சூரியகாந்தி (ஆஸ்ட்ரேஸி), மாரிகோல்டு.


 

9. கூட்டுக்கனியை திரள் கனியிலிருந்து வேறுபடுத்துக:

 

திரள் கனிகள்

வரையறை: ஒரு தனி மலரின் இணையாச் சூலகத்திலிருந்து உருவாகிறது

ஒவ்வொரு தனி சூலகமும் ஒரு எளிய சிறு கனியாகிறது

இத்தகைய சிறு கனிகளின் தொகுப்பு திரள் கனியை உண்டாக்கும் இதன் தனி சிறு கனியைப் பொறுத்து 4 வகைப்படும்

ஒருபுற வெடி கனித்தொகுப்பு - கலோட்ராபிஸ்

உறை ஒட்டா வெடியா கனித்தொகுப்பு - கிளிமெட்டிஸ்

உள் ஒட்டு சதைக்கனித் தொகுப்பு - ராஸ்பெர்ரி

சதைக்கனி தொகுப்பு - பாலியால்தியா 

கூட்டுக்கனிகள்

வரையறை: ஒரு முழு மஞ்சரியும் அதன் மஞ்சரிக் காம்பும் சேர்ந்து உருவாகும் பல் கூட்டுக்கனி

இது இரு வகைப்படும்.

அ.சோராஸிஸ் கதிர் (அ) மடல் கதிர்

மஞ்சரியிலிருந்து உருவாகிறது.சதைப்பற்று மிக்க பூவிதழ்களால் கனிகள் பிணைந்தும் அவற்றை தாங்கும் அச்சும் - சதைப்பற்றும் சாறுமிக்கதாக முழுமஞ்சரியும் கனியாகிறது எ.கா - அன்னாசி, பலா, மல்பெரி

ஆ. கைகோனஸ் - ஹைபந்தோடியம்

மஞ்சரியிலிருந்து தோன்றும் ஒருவகை கூட்டுக்கனி மஞ்சரியின் பூத்தளம் தொடர்ந்து வளர்ந்து சதைப்பற்றுடன் கூடிய கனியாகி, பல உண்மைக்கனிகள் (உறை ஒட்டா வெடியாக்கனிகளைச் சூழ்ந்து காணப்படுகிறது (மஞ்சரியின் பெண்மலர்களே கனியாகின்றன) எ.கா: ஃபைகஸ்

 

10. தகுந்த எ.காட்டுடன் சதைக்கனிகளை வகைப்படுத்து.

வரையறை - ஒற்றை மலரின் சூலகப்பையிருந்து உருவாகும் கனியாகும். எ.கா மா. இவற்றின் கனித்தோல் பெரிகார்ப் எனப்படும். இது வெளித்தோல் எபிகார்ப், நடுத்தோல் மீசோகார்ப், உட்தோல் எண்டோகார்ப் எனப்படும். 



Tags : Reproductive Morphology of Angiosperm | Botany இனப்பெருக்கப் புறஅமைப்பியல் - தாவரவியல்.
11th Botany : Chapter 4 : Reproductive Morphology of Angiosperm : Answer the following questions Reproductive Morphology of Angiosperm | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்கப் புறஅமைப்பியல் : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - இனப்பெருக்கப் புறஅமைப்பியல் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 4 : இனப்பெருக்கப் புறஅமைப்பியல்