Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

கனிம ஊட்டம் - தாவரவியல் - பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 11th Botany : Chapter 12 : Mineral Nutrition

   Posted On :  06.07.2022 11:12 pm

11 வது தாவரவியல் : அலகு 12 : கனிம ஊட்டம்

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்

தாவரவியல் : கனிம ஊட்டம் - முன்பதிவு மற்றும் முக்கியமான கேள்விகளுக்கான பதில்கள் - சுருக்கமான கேள்விகள் பதில்கள், குறுகிய கேள்விகளுக்கான பதில்கள்

11 வது தாவரவியல் : அலகு 12

கனிம ஊட்டம்



6. நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரங்கள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லைஏன்?

விடை :

தாவரங்கள் மண்ணிலுள்ள கனிமங்களை,. தண்ணீரோடு சேர்த்து உப்புக்களாக வேர்கள் மூலம் உறிஞ்சுகின்றன.

நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிக அளவு காணப்பட்டாலும்வாயு வடிவ நைட்ரஜன் நைட்ரஜன் உப்புக்களாக மாறிய பின்னரே நீருடன் கரைந்த சரைசலாக வேர்களால் உள் உறிஞ்சப்பட இயலும்.

இவ்வாறு நடைபெறும் நைட்ரஜன் நிலைநிறுத்தம் இருவகையில் நடைபெறுகிறது.

(உயிரி அல்லாத) பௌதிக - நைட்ரஜன் நிலை நிறுத்தம்

தொழிற்சாலையில் இரசாயன முறையின் மூலம் நடைபெறும்.

மின்னல் உருவாகும் போது வெளியேற்றப்படும் மின்னாற்றலினால் வளிமண்டலத்தில் நடைபெறும்

இயற்கையான நைட்ரஜன் நிலைநிறுத்தம்.

உயிரியல் நைட்ரஜன் நிலைநிறுத்தம் :

பாக்டீரியங்கள் மூலம் நைட்ரஜன் நிலைநிறுத்தம்

(கூட்டுயிரி மற்றும் கூட்டுயிரி அல்லாதவை) சயனோ பாக்டீரியங்கள் மூலம் நடைபெறும்

நைட்ரஜன் நிலைநிறுத்தம்

ஆகவே உயர் தாவரங்கள் வளிமண்டல நைட்ரஜனை நேரடியாக பயன்படுத்த இயலாது.

 

 

7. ஏன் சில தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் முடிவில் இளம் இலைகளில் தோன்றுகிறதுபிற தாவரங்களில் முதிர்ந்த பாகங்களில் தோன்றுகிறது?

விடை :

தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் தெரியத் தொடங்கும் போதுஇளையமுதிய இலைகளில் அவற்றின் வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகிறது - இது பொதுவாக தனிமங்களின் வேறுபட்ட இடப்பெயர்ச்சியைப் பொருத்தும்அறிகுறிகள் தோன்றுமிடத்தை வைத்து முதிர்ந்த மற்றும் இளம் இலைகளில் வேறுபாடு காணப்படுகிறது.

தனிமங்கள் இதனடிப்படையில் இருவகைப்படும். 

1) விரைவாக இடம் பெறும் தனிமங்கள்:

நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், குளோரின், சோடியம், துத்தநாகம்

மற்றும் மாலிப்டினம் இவை விரைவாக இடம் பெயர்வதால் முதலில் இளம் இலைகளை நோக்கி இடம் பெயர்வதால்பற்றாக்குறை அறிகுறிகள் முதிர்ச்சியடைந்த உதிரும் நிலையில் உள்ள இலைகளில் தோன்றுகிறது.

2) ஒப்பீட்டளவில் இடம் பெயராத தனிமங்கள்:

கால்சியம், கந்தகம், இரும்பு, போரான் மற்றும் தாமிரம் போன்ற தனிமங்கள் எளிதில் இடம் பெயர்வதில்லை எனவே பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் இளம் இலைகளில் தோன்றுகிறது.


 

8. தாவரம் சாட்டைவால் நோய்தாவரம் சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. AB யின் கனிமக் குறைபாட்டினைக் கண்டறிக.



 

9. நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி?

நைட்ரஜன் நிலைப்படுத்தும் இச்செயல் முறைக்கு நைட்ரோஜினஸ் என்ற நொதி கூட்டமைப்பு அவசியம் அப்போது தான் வளிமண்டல நைட்ரஜன் நைட்ரைட் மற்றும் நைட்ரேட்டாக நிலைநிறுத்த இயலும்.

நைட்ரோஜினஸ் நொதியானது காற்றில்லா நிலையின் போது மட்டுமே செயல்படக்கூடியது.

காற்றில்லா நிலையை ஏற்படுத்த வேர் முடிச்சுகளில் உருவாகும் லெஹீமோகுளோபின் எனும் நிறமி ஆக்ஸிஜன் நீக்கியாக செயல்பட்டு ஆக்ஸிஜன் இல்லாச் சூழல் ஏற்படுகிறது. 

நைட்ரஜன் நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள் இளம் சிவப்பு நிறத்துடன் காணப்படுவதற்கும் இந்நிறமியே காரணம் ஆகும்.


 

10. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் பூச்சியுண்ணும் உணவூட்ட முறையினை விவரி? நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள இடங்களில் வாழும் சில வகை தாவரங்கள்பூச்சிகளைப் பிடிக்கும் தகவமைப்புகளைப் பெற்று அதன் மூலம் நைட்ரஜன் சத்துக்களைப் பெற்று தங்கள் நைட்ரஜன் பற்றாக்குறையை சரி செய்கின்றன.

அ. நெப்பந்தஸ் - Pitcher Plant

இலைத்தாள் - குடுவையாக மாற்றுரு அடைந்துள்ளது.

குடுவை செரிமான நொதிகளை உருவாக்கும் வளரிகள் உள்ளன.

குடுவை வாய் விளிம்பில் தேன் சுரப்பிகளும்குடுவை மூடி பூச்சிகளைக் கவரும் வண்ணங்களும் காணப்படுகிறது.

குடுவைக்குள் விழுந்த பூச்சிகளை புரத செரிமான நொதிகள் செரிக்கின்றன.

ஆ. ட்ரஸீரா - கரண்டி வடிவ இலைகளில் நீண்ட தடித்த உணர்நீட்சிகள் உள்ளன.

இவை ஒட்டக் கூடிய சூரிய பனித்துளி போன்ற செரிமான திரவத்தைச் சுரந்து பூச்சிகளை ஈர்க்கிறது.

. யுட்ரிகுலேரியா - நீரில் மூழ்கி காணப்படும் இவற்றின் இலைகள் பை போன்ற மாற்றுரு அடைந்து பூச்சிகளை சேகரித்து செரிக்கிறது.

ஈ. டயோனியா - (Venus fly trap)  

இவற்றின் இரு மடல்களாலான இலைகள் வண்ணமயமான பொறியாக மாற்றமடைந்துள்ளது.

இலைகளின் உள்ளே உணர் இழைகள் உள்ளன. பூச்சிகள் உடல் உணர் இழைகளைத் தொட்டதும் இலைகள் மூடி அவை சிறைப்பட்டு பின் செரிக்கப்படுகின்றன.


Tags : Mineral Nutrition | Plant Physiology (Functional Organisation) | Botany கனிம ஊட்டம் - தாவரவியல்.
11th Botany : Chapter 12 : Mineral Nutrition : Answer the following questions Mineral Nutrition | Plant Physiology (Functional Organisation) | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 12 : கனிம ஊட்டம் : பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் - கனிம ஊட்டம் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 12 : கனிம ஊட்டம்