Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

திசு மற்றும் திசுத் தொகுப்பு - தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 9 : Tissue and Tissue System

   Posted On :  06.07.2022 10:34 pm

11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத் தொகுப்பு

சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவரவியல் : திசு மற்றும் திசுத் தொகுப்பு - மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள்

11 வது தாவரவியல் : அலகு 9

திசு மற்றும் திசுத் தொகுப்பு

 

மதிப்பீடு

 

1. கீழ்கண்ட படத்தினை உற்று நோக்கிச் சரியான விடையைத் தேர்ந்தெடு.


i) A, B மற்றும் C தண்டு நுனியின் ஹிஸ்டோஜென் கொள்கை ஆகும்.

ii) A- மெடுல்லா, கதிர்களை உருவாக்குகிறது.

iii) B- புறணியை உருவாக்குகிறது.

iv) C- புறத்தோலை உருவாக்குகிறது.

அ) I மற்றும் II மட்டும்

ஆ) II மற்றும் III மட்டும்

இ) I மற்றும் III மட்டும்

ஈ) III மற்றும் IV மட்டும்

 

 

2. கீழ்கண்டவற்றை படித்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

i) எக்ஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு வெளியே புரோட்டோசைலம் அமைந்துள்ளது.

ii) எண்டார்க் எனப்படுவது புரோட்டோசைலம் மையத்தை நோக்கி அமைந்துள்ளது.

iii) சென்ட்ரார்க் எனப்படுவது புரோட்டோ சைலத்திற்கு நடுவில் மெட்டாசைலம்

அமைந்துள்ளது.

iv) மீஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு நடுவில் புரோட்டோசைலம் அமைந்துள்ளது.

அ) I, II மற்றும் III மட்டும்

ஆ) II, III மற்றும் IV மட்டும்

இ) I,II மற்றும் IV மட்டும்

ஈ) இவை அனைத்தும்

 

 

3. ஜிம்னோஸ்பெர்ம்களில் சல்லடை செல்களைக் கட்டுப்படுத்துவது எது?

அ) அருகாமையில் உள்ள சல்லடை குழாய்கள்.

ஆ) ஃபுளோயம் பாரங்கைமா செல்கள்.

இ) துணைச்செல்களின் உட்கருக்கள்.

ஈ) அல்புமீனஸ் செல்களின் உட்கருக்கள்.


 

4. இரு விதையிலை தண்டில் வாஸ்குலக் கற்றையிலிருந்து இலை இழுவை நீட்டிக்கப்படும் பொழுது, இலை நரம்பின் வாஸ்குலத் திசுக்கள் எவ்வாறு அமைந்து இருக்கும்?

அ) சைலம் மேல்புறத்திலும் ஃபுளோயம் கீழ்புறத்திலும் இருக்கும்.

ஆ) ஃபுளோயம் மேல் புறத்திலும் சைலம் கீழ்புறத்திலும் இருக்கும்.

இ) சைலம் ஃபுளோயத்தை சூழ்ந்திருக்கும்.

ஈ) ஃபுளோயம் சைலத்தை சூழ்ந்திருக்கும்.

 

 

5. இருவிதையிலைத் தாவரங்களில் ஒட்டுப் போடுதல் வெற்றிகரமாக உள்ளது. ஆனால் ஒரு விதையிலைத் தாவரங்களில் அவ்வாறு இல்லை ஏனென்றால், இருவிதையிலை தாவரங்களில்.

அ) வளையமாக வாஸ்குலக் கற்றைகள் அமைந்திருப்பது.

ஆ) இரண்டாம் நிலை வளர்ச்சிக்கான கேம்பியம் அமைந்துள்ளது.

இ) சைலக்குழாய் கூறுகள் ஒருமுனையில் இருந்து அடுத்த முனை வரை இணைந்து

அமைந்திருப்பது.

ஈ) கார்க் கேம்பியம் அமைந்திருப்பது. 


Tags : Tissue and Tissue System | Botany திசு மற்றும் திசுத் தொகுப்பு - தாவரவியல்.
11th Botany : Chapter 9 : Tissue and Tissue System : Choose the Correct Answers Tissue and Tissue System | Botany in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத் தொகுப்பு : சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் - திசு மற்றும் திசுத் தொகுப்பு - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத் தொகுப்பு