Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி 1.2 (முழுக்களின் கழித்தல் பண்புகள்)

கேள்வி பதில்கள் | எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.2 (முழுக்களின் கழித்தல் பண்புகள்) | 7th Maths : Term 1 Unit 1 : Number System

   Posted On :  03.07.2022 01:22 am

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல்

பயிற்சி 1.2 (முழுக்களின் கழித்தல் பண்புகள்)

7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல் : பயிற்சி 1.2 : கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா, தவறா எனக் கூறுக, கீழுள்ளவற்றின் மதிப்பைக் காண்க, கொள்குறி வகை வினாக்கள், புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.2


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(i) -44 + _____ = -88 

[ விடை : -44 ]

(ii) _____ - 75 = - 45

[ விடை : 30 ] 

(iii) _____ - (+50) = -80 

[ விடை : -30 ]



2. சரியா, தவறா எனக் கூறுக.

(i) (-675) - (-400) = -1075 

[ விடை : தவறு ]

(ii) 15 - (-18) க்கு 15 + 18 சமமானது

[ விடை: சரி ]

(iii) (-45) - (-8) = -8 - (-45) 

[ விடை : தவறு ]


3. கீழுள்ளவற்றின் மதிப்பைக் காண்க.

(i) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க : -3 - (-4) 

தீர்வு

(-3) - (-4) = (-3) + 4 = 1

(ii) எண்கோட்டைப் பயன்படுத்தித் தீர்க்க : 7 - (-10) 

தீர்வு

7 - (-10) = 7 + 10 = 17

(iii) 35 - (-64)

35 - (-64) = 35 + 64 = 99

(iv) -200 - (+100)

= (-200) + (-100) = -300


4. கபிலன் தன்னிடம் 10 பென்சில்களை வைத்திருந்தார்.அதில் 2 பென்சில்களை செந்திலுக்கும், 3 ஐக் கார்த்திக்கும் கொடுத்து விட்டார். மறுநாள் அவருடைய தந்தை மீண்டும் 6 பென்சில்கள் தருகிறார். மொத்த பென்சில்களிலிருது 8 பென்சில்களை அவருடைய தங்கைக்கும் கொடுத்தால் அவரிடம் மீதம் உள்ள பென்சில்களின் எண்ணிக்கை யாது? 

தீர்வு

= 10 - (2) - (3) + 6 - 8

= 10 + (-2) + (-3) + 6 + (-8) 

= 16 + (-13)

= 3 

கபிலனிடம் 3 பென்சில்கள் மீதம் இருக்கும். 


5. ஒரு மின்தூக்கி தற்போது தரை தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்த தளத்தில் இருக்கும்? 

தீர்வு 

5 வது கீழ் தளம் = (-5)

10 மேல் தளம் = (+10) 

மின்தூக்கி இருக்கும் தளம் = (-5) + (+10) = +5 

5 வது மேல் தளத்தில் இருக்கும்.


6. காலை எழுந்திருக்கும் போது கலாவின் உடல் வெப்பநிலை 102°F ஆக இருந்தது. அவள் காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக் கொண்டாள். பிறகு 2 மணி நேரம் கழித்து உடல் வெப்பநிலை 2°F குறைந்தது எனில், கலாவின் தற்போதைய உடல் வெப்பநிலையைக் காண்க. 

தீர்வு 

102°F - 2°F

= 100°F


7. (-17) உடன் எந்த எண்ணைக் கூட்ட (-19) கிடைக்கும்? 

தீர்வு

-17 + x = -19

x = -19 + 17 

x = -2 


8. ஓர் மாணவரிடம் (-47) லிருந்து (-12) ஐக் கழிக்க கேட்கப்பட்டது. அவருக்கு விடை (-30) எனக் கிடைத்தது. அது சரியா / தவறா? நியாயப்படுத்துக. 

தீர்வு

(-47) – (-12) 

= (-47) + (+12) 

= - 35 

-35 -30

. தவறு (-35 என்பது சரி)



கொள்குறி வகை வினாக்கள்


9. -5 - (-18) = _______

(i) 23 

(ii) -13 

(iii) 13 

(iv) -23 

[ விடை iii. 13 ]


10. (-100) - 0 + 100 = 

(i) 200 

(ii) 0

(iii) 100

(iv) -200 

[ விடை : (ii) 0 ]


விடைகள் 

பயிற்சி  1.2

1. (i) −44 (ii) 30 (iii) −30

2. (i) தவறு  (ii) சரி  (iii) தவறு

3. (i) 1 (ii) 17 (iii) 99 (iv) −300

4. 3

5. 5 வது மேல் தளத்தில் இருக்கும்.

6. 100°F

7. −2

8. . தவறு (-35 என்பது சரி)


கொள்குறி வகை வினாக்கள்


9. (iii) 13

10. (ii) 0


Tags : Questions with Answers, Solution | Number System | Term 1 Chapter 1 | 7th Maths கேள்வி பதில்கள் | எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 1 Unit 1 : Number System : Exercise 1.2 (Subtraction of Integers) Questions with Answers, Solution | Number System | Term 1 Chapter 1 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல் : பயிற்சி 1.2 (முழுக்களின் கழித்தல் பண்புகள்) - கேள்வி பதில்கள் | எண்ணியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1 : எண்ணியல்