Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | பயிற்சி 2.3 ( அன்றாட வாழ்க்கையில் சதவீதம்)

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.3 ( அன்றாட வாழ்க்கையில் சதவீதம்) | 7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest

   Posted On :  08.07.2022 11:19 pm

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும்

பயிற்சி 2.3 ( அன்றாட வாழ்க்கையில் சதவீதம்)

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும் : அன்றாட வாழ்க்கையில் சதவீதம் : பயிற்சி 2.3 : புத்தக பயிற்சிகள் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.3 


1. ஒரு புத்தகக் கடையிலுள்ள 70 பத்திரிகைகளில் 14 பத்திரிகைகள் நகைச்சுவை பத்திரிகைகள் எனில், நகைச்சுவை பத்திரிகைகளின் சதவீதம் காண்க

விடை :

நகைச்சுவை பத்திரிக்கைகள் = 14 / 70

= 1 / 5 

நகைச்சுவை பத்திரிக்கைகளின் சதவீதம்

= (1 / 5) × (20 / 20)

= 20 / 100

= 20% 


2. ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை

விடை

கொள்ளளவு = 50 லிட்டர்கள் 

தற்போது, = 30% தண்ணீர் நிரம்பியது 50 லி.

= (30 / 100) × 50

= 15 லிட்டர்கள்

இன்னும் 50% தண்ணீர் நிரம்ப = 50% ல் 50

= (50 / 100) × 50 

= 25 லிட்டர்கள் 

தேவையான அளவு = 25 - 15 லிட்டர்கள்

= 10 லிட்டர்கள் 


3. கருண் என்பவர் ஒருசோடிக் காலனிகளை 25% விலையில் வாங்கினார். அவர் செலுத்திய தொகை ₹ 1000 எனில், குறிக்கப்பட்ட விலையைக் காண்க

விடை

x என்பது குறிக்கப்பட்ட விலை என்க

தள்ளுபடி விலை = x – x × (25 / 100)

தள்ளுபடி = ₹ 1000 

x – x × (25 / 100) = 1000

x (x/4) = 1000

(4x -x) / 4 = 1000

3x / 4 = 1000

x = (1000 × 4) / 3 

= 1333.33

x = ₹ 1334 


4. ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முகவர் அவர் சேகரிக்கும் அடிப்படை பிரிமியத்தில் 5% தரகாகப் பெறுகிறார். அவர் ₹ 4800 ஐப் பிரிமியமாக வசூலித்தார் எனில், அவர் பெறுகின்ற தரகுத் தொகை 

விடை

தரகு சதவீதம் 5% 

வசூலித்த தொகை = ₹ 4800 

பெற்ற தரகு தொகை = 4800 ல் 5%

= (5 / 100) × 4800 

= ₹ 240 


5. ஓர் உயிரியல் வகுப்பு மாணவர்கள் குழு உள்ளுரிலுள்ள ஒரு புல்வெளியில் ஆய்வு செய்தனர். அவற்றுள் 40 இல் 30 பூக்கள் வற்றாதவை எனில், வற்றாத பூக்களின் சதவீதம் காண்க

விடை

பூக்களின் எண்ணிக்கை = 40 

வற்றாத பூக்கள் = 30

வற்றாத பூக்களின் சதவீதம் = 30 / 40 

= (3 / 4) × (25 / 25)

= 75 / 100

= 75 % 


6. இஸ்மாயில் என்பவர் சில வகையான மணிகளை வாங்குவதற்காகச் சரக்கு அனுப்பாணையை அனுப்பினார். மொத்தம் 50 மணிகளில் 15 மணிகள் மட்டுமே பழுப்பு நிறம் எனில், பழுப்பு நிற மணிகளின் சதவீதத்தைக் காண்க

விடை

மணிகளின் எண்ணிக்கை = 50 

பழுப்பு நிற மணி = 15 

பழுப்பு நிற மணிகளின் சதவீதம் = 15 / 50 

= (15 / 50) × (2 × 2)

= 30 / 100

= 30% 


7. ராமு என்பவர் ஆங்கிலப் பாடத்தில் 25 இக்கு 20 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 40 இக்கு 30 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 80 இக்கு 68 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவர் எந்தப் பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்

விடை

i) ஆங்கிலத்தில் பெற்ற சதவீதம் = 20 / 25 

= (25 × 4) / (25 × 4)

= 80 / 100

= 80%

ii) அறிவியலில் பெற்ற சதவீதம் = 30 / 40

= (3 / 4) × (25 / 25)

= 75 / 100 

= 75% 

iii) கணிதத்தில் பெற்ற சதவீதம் = 68 / 80

= (17 / 20) × (5 / 5)

= 85 / 100 

= 85%

கணித பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்


8. பீட்டர் என்பவர் ஒரு தேர்வில் 280 மதிப்பெண்களைப் பெற்றுத் தோல்வி அடைந்தார். அவர் இன்னும் 20 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், மொத்த மதிப்பெண்களில் 50% பெற்று வெற்றி பெற்றிருப்பார் எனில், மொத்த மதிப்பெண்களைக் காண்க

விடை :

50% மதிப்பெண் = 280 + 20 = 300 

100% மதிப்பெண் = 50% மதிப்பெண் × 2

= 300 × 2 

= 600


9. கயல் என்பவர் முதல் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 225 மதிப்பெண்களும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 260 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவரது மதிப்பெண்கள் அதிகரிப்பின் சதவீதத்தைக் காண்க

விடை

முதல் திருப்புதல் = 225 / 500

முதல் திருப்புதலில் பெற்ற சதவீதம் = 225 / (5 × 100)

= 45 / 100

= 45%

இரண்டாம் திருப்புதல் = 225 / 500

இரண்டாம் திருப்புதலில் பெற்ற சதவீதம்

= 265 / 5

= 53 / 100

= 53%

அதிகரிப்பின் சதவீதம் = 53 - 45

= 8%


10. ரோஜா மாதச் சம்பளமாக ₹ 18,000 ஐப் பெறுகிறார். அவர் தனது சம்பளத்தில் முறையே கல்வி, சேமிப்பு, மற்றும் பிற செலவினங்களுக்கு 2 : 1 : 3 என்ற விகிதத்தில் செலவு செய்கிறார் எனில், அவரது செலவைச் சதவீதமாகக் கூறுக

விடை :

ராஜாவின் சம்பளம் = ₹ 18000 

மொத்த விகிதம் = 6 

கவ்வியின் விகிதம் = 2 / 6

சேமிப்பின் விகிதம் = 1 / 6

மற்ற செலவின் விகிதம் = 3 / 6

* கல்வியின் சதவீதம் = 18000 × (2 / 6)

= ₹ 6000

கல்வியின் சதவீதம் = 2 / 6 

= (1 / 3) × (100 / 100)

= 100 / 3 % 

= 33.33%

* சேமிப்பு = 18000 × (1 / 6)

= ₹ 3000 

சேமிப்பின் சதவீதம் = (1 / 6) × (100 / 100)

= 100 / 6 %

= 16.67% 

* பிற செலவு

= 18000 × (3 / 6)

= ₹ 9000 

* பிற செலவின சதவீதம் = 3 / 6

= (1 / 2) × (50 / 50)

= 50 / 100 

= 50%


விடை :

பயிற்சி  2.3

1. 20%

2. 10 லிட்டர்கள் 

3. ₹ 1334

4. ₹ 240

5. 75%

6. 30%

7. கணிதபாடத்தில்  85 %

8. 600

9. 8%

10. கல்வி  − ₹ 6,000 மற்றும்  33.33%; சேமிப்பு  – ₹ 3,000 மற்றும்  16.66%; பிற செலவினங்கள்  – ₹ 9,000 and 50%


Tags : Questions with Answers, Solution | Term 3 Chapter 2 | 7th Maths கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 2 : Percentage and Simple Interest : Exercise 2.3 (Percentage in Real Life) Questions with Answers, Solution | Term 3 Chapter 2 | 7th Maths in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும் : பயிற்சி 2.3 ( அன்றாட வாழ்க்கையில் சதவீதம்) - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | மூன்றாம் பருவம் அலகு 2 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : சதவீதமும் தனிவட்டியும்