Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பயிற்சி வினா விடை

மாநில அரசு | இரண்டாம் பருவம் அலகு - 1 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் | - பயிற்சி வினா விடை | 7th Social Science : Civics : Term 2 Unit 1 : State Government

   Posted On :  14.05.2022 04:05 pm

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : இரண்டாம் பருவம் அலகு -1 : மாநில அரசு

பயிற்சி வினா விடை

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : இரண்டாம் பருவம் அலகு -1: மாநில அரசு : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
பயிற்சி 


I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க, 

1. மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது 

அ) 18 வயது

ஆ) 21 வயது 

இ) 25 வயது 

ஈ) 30 வயது

விடை : இ) 25 வயது 


2. இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 

அ) 26

ஆ) 27 

இ) 28

ஈ) 29

விடை : ஈ) 29 


3. மாநில அரசு என்பது 

அ) மாநில அரசின் துறைகள்

ஆ) சட்ட மன்றம் 

இ) (அ) மற்றும் (ஆ)

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : இ) (அ) மற்றும் (ஆ) 


4. மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர் 

அ) குடியரசுத் தலைவர்

ஆ) பிரதமர் 

இ) ஆளுநர்

ஈ) முதலமைச்சர் 

விடை : இ) ஆளுநர் 


5. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் 

அ) குடியரசுத் தலைவர்

ஆ) பிரதமர் 

இ) ஆளுநர்

ஈ) தேர்தல் ஆணையர் 

விடை : இ) ஆளுநர் 


6. முதலமைச்சர் என்பவர் 

அ) பெரும்பான்மை கட்சியின் தலைவர் 

ஆ) எதிர்க்கட்சி தலைவர் 

இ) அ மற்றும் ஆ

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : அ) பெரும்பான்மை கட்சியின் தலைவர் 


7. மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்

அ) மேயர், ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர் 

ஆ) ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி 

இ) கிராமம், நகரம், மாநிலம்

ஈ) சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை

விடை : ஈ) சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை 


II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. .............. ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.

விடை:  குடியரசுத் தலைவர் 

2. சட்டமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ------- ஆக நியமிக்கப்படுகிறார்.

விடை: முதலமைச்சர்

3. மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு .......

விடை:  உயர்நீதிமன்றம் 

4. ச.ம.உ என்பதன் விரிவாக்கம் ...

விடை: சட்ட மன்ற உறுப்பினர் 

5. ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த அனைத்து வாக்காளர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் ....................... ஆவார்

விடை: சட்டமன்ற உறுப்பினர் 

6. சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியை  சாராதவராக இருப்பின் ....................... என்று அழைக்கப்படுவர்

விடை:  எதிர்கட்சியினர்


III. பொருத்துக

1. சட்டமன்ற உறுப்பினர்கள் - தலைமைச் செயலகம்  

2. ஆளுநர் – ஆ. 7

3. முதலமைச்சர் – இ. மாநிலத்தின் தலைவர் 

4. யூனியன் பிரதேசங்கள் – ஈ. சட்டமன்றம்

5. புனித ஜார்ஜ் கோட்டை – உ. பெரும்பான்மை கட்சித் தலைவர்

விடைகள் 

1. சட்டமன்ற உறுப்பினர்கள் - ஈ. சட்டமன்றம் 

2. ஆளுநர் – இ. மாநிலத்தின் தலைவர் 

3. முதலமைச்சர் – உ. பெரும்பான்மை கட்சித் தலைவர் 

4. யூனியன் பிரதேசங்கள் – ஆ. 7  

5. புனித ஜார்ஜ் கோட்டை – அ. தலைமைச் செயலகம்


IV. கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியானவற்றை () டிக் செய்யவும் கீழ்காணும் வாக்கியங்களில் தவறானவை 

அ) ஆளுநராக இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். 

ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 

இ) நல்ல மனநலமுடையவராக இருத்தல் வேண்டும் 

ஈ) இலாபம் தரும் எந்த பதவியிலும் இருத்தல் கூடாது.

விடை : ஆ) 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் 


2. கீழ்காணும் வாக்கியங்கள் சரியா தவறா என்பதை ஆராய்க. 

அ) அரசு செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்.

விடை: சரி 

ஆ) ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை சாராத அனைத்து அரசியல் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவர். 

விடை : சரி 

இ) சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல

விடை: தவறு 


3. ஈரவை என்பதற்கு சரியான விளக்கத்தை தேர்ந்தெடு

அ) இரு முதலமைச்சர்களை கொண்ட சட்டமன்றம் 

ஆ) ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம் 

இ) மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம் 

ஈ) கவர்னரை தலைவராகவும் சட்ட மன்ற உறுப்பினர்களையும் கொண்ட அவை

விடை : இ) மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்


4. கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது 

காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

அ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது 

ஆ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கம் சரியல்ல 

இ) கூற்று சரி, விளக்கம் தவறு

ஈ) கூற்று மற்றும் விளக்கம் தவறு

விடை : அ) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது 


V. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்

1. மாநில ஆளுநராவதற்கான தகுதிகள் யாவை?

* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 

* 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 

* வாழ்வில் சிறந்த நிலையில் இருக்க வேண்டும் 

* எவ்வித வருவாய் தரும் அரச பதவியில் இருக்கக் கூடாது. 


2. எதிர்க்கட்சியினர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? 

பெரும்பான்மை கட்சிக்கு அடுத்த நிலையில் எந்தக் கட்சியில் அதிக உறுப்பினர்கள் உள்ளனரோ, அவர்களைக் கொண்டு சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சி உருவாகிறது. 


3. லோக் அதாலத் பற்றி எழுதுக. 

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இது மக்களிடையே எழும் சர்ச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்து வைக்கிறது.


4. சட்டமன்ற தொகுதி என்றால் என்ன?

* தேர்தலுக்காக நாடுமுழுவதும் மக்கள் தொகையைப் பொருத்து தொகுதிகள் பிரிக்கப்படுகின்றன.

* ஒவ்வொரு தொகுதியிலும் தங்கள் வேட்பாளரை அரசியல் கட்சிகள் நிறுத்துகின்றன. 


5. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் யார்?

* ஆளுநர் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக நியமிப்பார். 

* ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசித்து தம் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு அமைச்சரவையை உருவாக்குகிறார்.


VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும் 

1. ஆளுநரின் அதிகாரத்தை விவரிக்கவும்?

* மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக ஆளுநர் செயல்படுகிறார். இவர் மாநில நிர்வாகத் துறையின் தலைவராகவும், மகத்தான அதிகாரங்களை உடையவராகவும் திகழ்கிறார். 

* மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாகத்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரால் நடைபெறுகின்றன.

* மாநிலத்திலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் இருக்கிறார். 

* மாநில சட்டத்துறையால் இயற்றப்படுகிற அனைத்து சட்டமுன் வரைவுகளும் (மசோதாக்களும்) அவரின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாகின்றன. 

* மாநில தலைமை வழக்குரைஞர். மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர் மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர், அரசுப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் போன்றோரையும் ஆளுநரே நியமிக்கிறார். 


2. சட்டமன்ற உறுப்பினர் என்பவர் யார்? 

* மக்களின் பிரதிநிதிகளைக் சட்டமன்ற உறுப்பினர் என்கிறோம்.

* சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) எனவும் கூறுகிறோம். 

* சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுத்தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 


3. முதலமைச்சர் மற்றும் காபினெட் அமைச்சர்களின் பணிகள் யாவை?  

* மாநில நிர்வாகத்துறையின் உண்மையான தலைவராக முதலமைச்சர் செயல்படுகிறார்.

* முதலமைச்சர் தனது அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிறார். 

* அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மாநில சட்டசபைக்குப் பொறுப்புடையவர்களாக உள்ளனர். 

* இவர்கள் அனைவரும் முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றனர். 

* மக்களின் நலனுக்கானத் திட்டங்களையும் கொள்கைகளையும் முதலமைச்சர் வகுக்கிறார்.


VII. உயர்சிந்தனை வினாக்கள்

1. மாநில அரசின் சில துறைகளின் பெயர்களை குறிப்பிடுக. 

* வேளாண் துறை

* சிவில் துறை 

* சுரங்கத் துறை

* வணிக மற்றும் தொழில் துறை 

* தொழில்நுட்ப தகவல் தொடர்பு துறை  

* நுகர்வோர், உணவு வழங்கும் துறை 

* கல்வித்துறை

* போக்குவரத்துத் துறை 


2. அட்டவணைப்படுத்துக.

ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிகள், நியமனமுறை மற்றும் ஏதாவது இரண்டு அதிகாரங்கள்,


பதவி

ஆளுநர்

 தகுதிகள்

• இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்

• 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்

• எவ்விதவருவாய் தரும் அரசுபதவி வகிக்க கூடாது.

நியமனமுறை

• மாநில தலைமை வழக்குரைஞர்,மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், அரசு பல்கலைக்   கழகங்களின்  துணைவேந்தர்கள் போன்றோரையும் ஆளுநர் நியமிக்கிறார்

அதிகாரங்கள் 

• மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாகத்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின்  பெயரால் நடைபெறுகின்றன.

• மாநில சட்டத்துறையால் இயற்றப்படுகிற சட்டமுன் வரைவுகளும் (மசோதாக்களும்) அவரின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாகின்றன.

பதவி

முதலமைச்சர்

தகுதிகள்

•  முதலமைச்சராக ஆக விரும்பினால் 25 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். 

•  சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்

நியமனமுறை

 • முதலமைச்சர்  தனது அமைச்சர்களுக்கு  இலாகாக்களை ஒதுக்கீடு செய்கிறார்  

அதிகாரங்கள்

• முதலமைச்சரின் கீழ் அனைத்து அமைச்சர்களும்  ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றனர்.

• மக்களின் நலனுக்கானத் திட்டங்களையும் கொள்கைகளையும் முதலமைச்சர் வகுக்கிறார்

பதவி

சட்டமன்ற உறுப்பினர்

தகுதிகள்

• இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 

• 25 வயதுக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்

நியமனமுறை

• மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

அதிகாரங்கள்

 • சட்டமியற்றுதல் இவர்களின் முக்கிய பணியாகும். 

 • சட்டமன்ற உறுப்பினர்கள் தாம் சட்டசபைக்கு பொறுப்பானவர்கள் ஆவர்.



VIII. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது) 

1. தமிழ்நாட்டின் ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் பட்டியலை தயார் செய்க. 

2. நீவிர் மாநிலத்தின் முதல்வராக இருந்தால் கட்டுரை வரைக. 

3. வகுப்பறையில் மாதிரி சட்டமன்றத்தை நடத்துக.

(அமைச்சரவை துறைகளை ஓதுக்கீடு செய்து காலவாரியாக மீளாய்வு செய்க)



Tags : State Government | Term 2 Unit 1 | Civics | 7th Social Science மாநில அரசு | இரண்டாம் பருவம் அலகு - 1 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் |.
7th Social Science : Civics : Term 2 Unit 1 : State Government : Exercises Questions with Answers State Government | Term 2 Unit 1 | Civics | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : இரண்டாம் பருவம் அலகு -1 : மாநில அரசு : பயிற்சி வினா விடை - மாநில அரசு | இரண்டாம் பருவம் அலகு - 1 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் | : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : இரண்டாம் பருவம் அலகு -1 : மாநில அரசு