Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பயிற்சி வினா விடை

நிலவரைபடத்தை கற்றறிதல் | மூன்றாம் பருவம் அலகு -2 | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பயிற்சி வினா விடை | 7th Social Science : Geography : Term 3 Unit 2 : Map Reading

   Posted On :  14.05.2022 01:13 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -2 : நிலவரைபடத்தை கற்றறிதல்

பயிற்சி வினா விடை

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -2: நிலவரைபடத்தை கற்றறிதல்: புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
பயிற்சி 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நிலவரைபடம் உருவாக்குதலின் அறிவியல் பிரிவு என அழைக்கப்படுகிறது ......

அ) புவியியல் (ஜியோகிராஃபி) 

ஆ) கார்டோகிராஃப்ட் 

இ) பிஸியோகிராபி

ஈ) பௌதீக புவியியல்

விடை: ஆ) கார்டோகிராஃப்ட் 


2. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கும் ......... திசைகள் ஆகும். 

அ) முக்கியமான

ஆ) புவியியல் 

இ) அட்சரேகை

ஈ) கோணங்கள் 

விடை: அ) முக்கியமான 


3. கலாச்சார நிலவரை படங்கள் என்பன ......... அமைப்புகளைக் காட்டுகின்றன. 

அ) இயற்கையான

ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட 

இ) செயற்கையான

ஈ) சுற்றுச்சூழல்

விடை: ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட 


II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக ......... அமைகிறது. 

விடை: நிலவரைபடம் 

2. முதன்மை திசைகளுக்கு இடையே உள்ள திசைகள் இடைநிலை .......... எனப்படும். 

விடை: திசைகள்

3. நிலவரைபடத்தில் உள்ள ...... வரைபடத்தில்பயன்படுத்தப்பட்டுள்ள  வண்ணங்கள் மற்றும் சின்னங்களை விளக்குகிறது. 

விடை: குறிப்பு

4. காடாஸ்ட்ரல் நிலவரைபடங்கள்......... என அழைக்கப்படுகின்றன 

விடை: கிராமம் (அல்லது) நகர்ப்புற நிலவரைபடம் 

5. சிறிய அளவை நிலவரைபடங்கள் ......... மற்றும் ......... போன்ற  அதிக பரப்பளவு இடங்களைக் காட்ட உதவுகின்றன.

விடை: கண்டங்கள், நாடுகள்


III. பொருந்தாதவற்றை வட்டமிட்டுக் காட்டுக ‘

1. வடகிழக்கு, அளவை, வடமேற்கு மற்றும் கிழக்கு.

விடை: அளவை 

2. வெண்மை , பனி, உயர்நிலம் மற்றும் சமவெளி.

விடை: வெண்மை 

3. நில அமைப்பு நிலவரைபடம், மண் நிலவரைபடம், இயற்கை அமைப்பு நிலவரைபடம் மற்றும் நிலவரைபட நூல்.

விடை: நிலவரைபட நூல் 

4. வானிலை முன்னறிவிப்பு, காலநிலை, மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை. 

விடை: காலநிலை


IV. பொருத்துக

       I                   II

1. மேல் வலது மூலை – அ. அடர்த்தி மற்றும் வளர்ச்சி 

2. குறிப்பு – ஆ. மாவட்டம் அல்லது நகரம்

3. பெரிய அளவை நிலவரைபடம் – இ. இயற்கை நில அமைப்பு

4. இயற்கை அமைப்பு வரைபடம் - ஈ. வண்ணங்கள் மற்றும் சின்னங்கள்

5. மக்கள் தொகை வரைபடம் – உ. 'N' எழுத்து

விடைகள் 

1. மேல் வலது மூலை – உ. 'N' எழுத்து

2. குறிப்பு – ஈ. வண்ணங்கள் மற்றும் சின்னங்கள்

3. பெரிய அளவை நிலவரைபடம் – ஆ. மாவட்டம் அல்லது நகரம்

4. இயற்கை அமைப்பு வரைபடம் - இ. இயற்கை நில அமைப்பு

5. மக்கள் தொகை வரைபடம் – அ. அடர்த்தி மற்றும் வளர்ச்சி


V. பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க

1. i. நிலவரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நிலவரைபடங்கள் கட்டமைக்கப்பட்ட தொகுதி ஆகும். 

ii. நிலவரைபட நூலின் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன. 

iii. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. 

அ) i மற்றும் iii சரி

ஆ) மற்றும் iii சரி 

இ) 1 மற்றும் 11 சரி

ஈ) 1, 11 மற்றும் iii சரி 

விடை : ஈ) i, ii மற்றும் iii சரி 


2. கூற்று 1 : உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமாண மாதிரி. 

கூற்று 2 : இதனை இது கையாள்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும் எளிது. சுருட்டியோ அல்லது மடித்தோ கையில் எடுத்துச் செல்வதற்கும் எளிது. 

அ) கூற்று 1 சரி, 2 தவறு 

ஆ) கூற்று 1 தவறு. 2 சரி 

இ) இரண்டும் சரி

ஈ) இரண்டும் தவறு 

விடை: அ) கூற்று 1 சரி, 2 தவறு


VI. பின்வருவனவற்றிற்கு பெயரிடுக 

1. தட்டையான பரப்பில் பூமியைக் குறிப்பது.

நிலவரைபடம் 

2. நிலவரைபடத்தில் உள்ள தூரத்திற்கும் நிலத்தில் உள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம்.

அளவை 

3. தரைவழி மற்றும் சாலைவழி போக்குவரத்தினைக் காட்ட உதவும் குறியீடு.

போக்குவரத்து நிலவரைபடம் 

4. வேறுபட்ட நிலவரைபடங்களை உள்ளடங்கிய புத்தகம்.

நிலவரைபட நூல் 

5. நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலவரைபடம்.

அரசியல் நிலவரைபடம்


VII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க 

1. நிலவரைபடம் என்றால் என்ன? 

நிலவரைபடம்: 

* நிலவரைபடம் என்பது புவியின் முழு பகுதி அல்லது ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவையில் வரையப்படுவதாகும். 

* நிலவரைபடமானது கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள், மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் விவரங்களைக் காட்டுவதாக வரையப்படுகிறது. 


2. கார்டோகிராஃபி என்றால் என்ன? 

கார்டோகிராஃபி: 

* ‘நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல் என்பது கார்டோகிராஃபி என அழைக்கப்படுகிறது. (கார்டே - நிலவரைபடம்; கிராபிக் - வரைதல்) 


3. முதன்மை திசைகள் யாவை? 

முதன்மை திசைகள்: 

* வடக்கு 

* கிழக்கு 

* மேற்கு 

* தெற்கு 


4. நிலவரைபட நூல் என்பது என்ன? 

நிலவரைபட நூல்:

* நிலவரைபட நூல் என்பது பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம் ஆகும். 

* நிலவரைபட நூல் படங்கள் அதிக பரப்பளவிலான கண்டங்கள் மற்றும் நாடுகளைக் காட்டும் சிறிய அளவை வரைபடங்களைக் கொண்டது. 


5. நிலவரைபட நூலின் வகைகளைக் குறிப்பிடுக. 

நிலவரைபட நூலின் வகைகள்:

* பள்ளி நிலவரைபட நூல் 

* மேம்படுத்தப்பட்ட நிலவரைபட நூல் 

* பிராந்திய நிலவரைபட நூல் 

* தேசிய நிலவரைபட நூல் 


6. நிலவரைபடத்தின் பயன்கள் யாவை?

நிலவரைபடத்தின் பயன்கள்: 

* ஓர் இடத்தினை நேரில் சென்று பார்க்காமல் நிலத்தோற்றம் மற்றும் நில அமைப்புகளின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. 

* நிலவரைபடங்கள் இராணுவத்தின் திட்டமிடல் பணியில் மகத்தான செயல்களுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. 

* விமானங்கள் குறிப்பிட்ட இடத்தை சேரவும், கப்பல் கடலில் பாதுகாப்பாக செல்லவும் உதவுகின்றது. 

* நிலவரைபடங்கள் வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.


VIII. விரிவான விடையளிக்க 

1. நில வரைபடத்தின் முக்கிய கூறுகள் யாவை? அவற்றைப் பற்றி எழுதுக? 

நில வரைபடத்தின் முக்கிய கூறுகள்: 

* தலைப்பு 

* திசை 

* அளவை

* குறிப்பு (அல்லது) சின்னங்களின் விளக்கங்கள் போன்றவை நிலவரைபடத்தின் அடிப்படைக்கூறுகள் ஆகும்.

தலைப்பு: 

* ஒவ்வொரு நிலவரைபடமும் அப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை விவரிக்கும் தலைப்பினை கொண்டிருக்கும். 

* இந்திய நதிகள் என்ற தலைப்பு கொண்ட நிலவரைபடம் இந்திய நதிகளைப் பற்றி விளக்குவதாகும். 

திசைகள்: 

* வரைபடங்கள் பொதுவாக வடக்கு நோக்கிய நிலையில் வரையப்படுகிறது. வடக்கு என்பது 'N' எனும் எழுத்தால் அம்புக்குறியீட்டுடன் குறிக்கப்படுகிறது. அது நிலவரைபடத்தில் மற்ற திசைகளை (கிழக்கு, மேற்கு, தெற்கு) கண்டறிய உதவுகிறது. 


* அட்சரேகைகள் மற்றும் தீர்க்கரேகைகள் விளிம்புகளில் வரையப்படுகிறது. 

அளவை: 

* நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரத்திற்கும் நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையேயுள்ள தூரத்திற்கும் உள்ள விகிதம் நிலவரைபடத்தின் அளவை எனப்படும். 

* 1 செ.மீ. = 10 கி.மீ (நிலவரைபடத்தில் 1 செ.மீ. = நிலத்தில் 10 கி.மீ.) 


குறிப்பு: 

* நிலவரைபடத்தில் வேறுபட்ட இயற்கை மற்றும் கலாச்சார அம்சங்களைக் காட்ட பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் மற்றும் குறியீடுகளைக் குறித்து விளக்குவது. 

* தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சின்னம் மற்றும் குறியீடுகள் மரபுக்குறியீடுகளின் சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன. 


2. நில வரைபடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வழிகள் யாவை? 

நில வரைபடத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று வழிகள்:  

* நிலவரைபடம் என்பது புவியின் முழு பகுதி (அல்லது) ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவையில் வரையப்படுவதாகும். 

* அவை கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள், மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் உட்பட சில குறிப்பிட்ட விவரங்களைக் காட்டுவதாக வரையப்படுகிறது. 

* நிலவரைபடங்கள் அமைப்புகள் குறித்து புரிந்து கொள்ள வழி வகுக்கின்றது.

- இயற்கை அமைப்புகள் (மலைகள், பீடபூமிகள், சமவெளிகள்) 

- நீர்நிலை அமைப்புகள் (ஆறு, ஏரி, கடல்)

- கலாச்சார அமைப்புகள் (சாலைகள், குடியிருப்புகள்) 


3. கருத்தின் அடிப்படையில் வரைபடத்தை வகைப்படுத்தவும்? 

* நிலவரைபடம் புவியின் முழு பகுதி (அல்லது) ஒரு பகுதியின் காட்சியினை ஒரு தட்டையான மேற்பரப்பில் வரையப்பட்டதாகும்.  

* ஒவ்வொரு நிலவரைபடமும் அதன் வடிவமைப்பு, பொருளடக்கம் மற்றும் கட்டமைப்பில் தனித்துவமுடையது. 

* பொதுவான சில அமைப்புகளின் அடிப்படையில் நிலவரைபடங்கள் பலவகைப்படும். (அளவை, கருத்து) 

கருத்தின் அடிப்படையிலான நிலவரைபடங்கள்: 

* நிலத்தோற்ற வரைபடம்

* புவியியல் வரைபடம் 

* காலநிலை வரைபடம்

* மண் நிலவரைபடம் 

* கலாச்சார நிலவரைபடம்

* அரசியல் நிலவரைபடம் 

* மக்கள் தொகை நிலவரைபடம் 

* பொருளாதார நிலவரைபடம் 

* போக்குவரத்து நிலவரைபடம் 

* கருத்து நிலவரைபடம்


4. நில வரைபடம் மற்றும் புவி மாதிரிகளை வேறுபடுத்தி எழுதுக? 


நில வரைபடம்

1. நிலவரைபடம் புவியின் இரு பரிமாண அமைப்பு.

2. சிறிய மற்றும் பெரிய பரப்பளவைக் காட்டுகிறது. 

3. ஓர் இடத்தின் அதிகப்படியான தகவல்களை வழங்க இயலும்.

4 கையில் எடுத்துச் செல்ல ஏதுவானது.


புவி மாதிரி 

1. புவி மாதிரி புவியின் முப்பரிமாண அமைப்பு. 

2. புவியின் மாதிரி அமைப்பு, 

3. ஓர் இடத்தின் அதிகப்படியான தகவல்களை வழங்க இயலாது. 

4. கையில் எடுத்துச் செல்ல இயலாது. 


5. அளவையின் அடிப்படையில் நில வரைபடத்தின் வகைகளை விரிவாக எழுது? 


நிலவரைபடத்தின் அளவை = நிலவரைபடத்தில் இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரம் : நிலத்தில் அதே இரண்டு இடங்களுக்கிடையே உள்ள தூரம். 

அளவையின் அடிப்படையில் நிலவரைபடங்கள்: 

* பெரிய அளவை நிலவரைபடம் 

* நிலஅளவைப் படங்கள் 

* தலவரைபடம் 

* சிறிய அளவை வரைபடங்கள் 

* சுவர் வரைபடங்கள் 

* நிலவரைபட நூல் 

பெரிய அளவை நில வரைபடம்: 

* குறைந்த பரப்பு இடங்கள் குறித்த அதிக விவரங்கள். 

* ஒப்பீட்டளவில் பெரிய பகுதிகளில் வரையப்படுகிறது. 

நிலஅளவைப் படங்கள்: 

* கிராமம் மற்றும் நகர்ப்புற நிலம் மற்றும் வீடு இருப்பிடம் குறித்து விளக்கம். 

தல வரைபடம்: 

* சிறிய பரப்பளவு குறித்து அதிக விவரங்கள் தருவன. இந்திய நில ஆய்வு மையத்தால் (சர்வே ஆப் இந்தியா) தயாரிக்கப்படுகிறது. (அமைப்புகள் - குன்றுகள். பள்ளத்தாக்குகள், கட்டடங்கள், சாலைகள், கால்வாய்கள்). 

சிறிய அளவை வரைபடங்கள்: 

* பெரிய அளவிலான பகுதிகள் (கண்டங்கள் அல்லது நாடுகள்) 

* அளவை : 1 செ.மீ = 1000 கி.மீ. 

சுவர் வரைபடங்கள்:

வகுப்பறைகளிலும், அலுவலகங்களிலும் பயன்படுகிறது. குறைந்த அளவு விவரங்களுடன் அதிக பரப்பளவு இடங்கள். 

நிலவரைபட நூல்: பல வகையான நிலவரைபடங்களின் தொகுப்பு புத்தகம்.


IX. உயர் சிந்தனை வினா 

1. பயணிகளின் முதன்மை கருவி நிலவரைபடம் ஏன்?

பயணிகள் முதன்மை கருவி நிலவரைபடம் 

ஏனெனில் 

* நிலவரைபடத்தினை வாசித்தல் என்பது புவியியல் ரீதியான இருப்பிடம், இயற்கை அமைப்புகள், நீர்நிலை அமைப்புகள் மற்றும் கலாச்சார அமைப்புகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள வழிவகுக்கின்றது. வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை காட்டுகின்றன. 

* நிலவரைபடம் கண்டங்கள், நாடுகள், பெருநகரங்கள் மற்றும் சிறிய உள்ளூர் பகுதிகள் பற்றிய விவரங்களைக் காட்டுகிறது.

* போக்குவரத்து நிலவரைபடங்கள் சாலைகள், இருப்புப்பாதை, இரயில்வே நிலையம், விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றைக் காட்டுகின்றன. 

* மின்னணு வரைபடங்கள் உலகம் முழுவதும் அமைந்துள்ள புவியியல் பகுதிகள் மற்றும் தலங்களைக் குறித்து அதிகப்படியான தகவல்களை வழங்குகிறது.


X. செயல்பாடு (மாணவர்களுக்கானது) 

1. இந்திய நிலவரைபடத்தில் பின்வரும் அமைப்புகளை உரிய சின்னங்கள் மற்றும் வண்ணங்களைக் கொண்டு குறித்துக் காட்டுக. 

அ) ஏதேனும் இரண்டு மாவட்டத் தலைநகரங்களைக் குறித்துக்காட்டுக. 

ஆ) ஏதேனும் ஒரு ஆற்று வழிப்பாதையை வரைந்திடுக. 

இ) ஏதேனும் ஒரு மலையைக் குறித்துக்காட்டு,

(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்) 








2. கொடுக்கப்பட்டவற்றிற்கு மரபுச் சின்னங்கள் மற்றும் குறியீடுகளை வரைந்திடுக. 

அ) பாலம் 

ஆ) கால்வாய்

இ) அணைக்கட்டு 

ஈ) கோவில் 

உ) காடு

ஊ) இரயில்வே நிலையம் 




Tags : Map Reading | Term 3 Unit 2 | Geography | 7th Social Science நிலவரைபடத்தை கற்றறிதல் | மூன்றாம் பருவம் அலகு -2 | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : Geography : Term 3 Unit 2 : Map Reading : Exercises Questions with Answers Map Reading | Term 3 Unit 2 | Geography | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -2 : நிலவரைபடத்தை கற்றறிதல் : பயிற்சி வினா விடை - நிலவரைபடத்தை கற்றறிதல் | மூன்றாம் பருவம் அலகு -2 | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -2 : நிலவரைபடத்தை கற்றறிதல்