Home | 2 ஆம் வகுப்பு | 2வது கணிதம் | திட்டமற்ற ஒழுங்குக் கருவிகள் கொண்டு நீளத்தை அளத்தல்

அளவைகள் | பருவம்-1 அலகு 4 | 2வது கணக்கு - திட்டமற்ற ஒழுங்குக் கருவிகள் கொண்டு நீளத்தை அளத்தல் | 2nd Maths : Term 1 Unit 4 : Measurement

   Posted On :  30.04.2022 09:33 pm

2வது கணக்கு : பருவம்-1 அலகு 4 : அளவைகள்

திட்டமற்ற ஒழுங்குக் கருவிகள் கொண்டு நீளத்தை அளத்தல்

ஆசிரியருக்கான குறிப்பு : ஆசிரியர் மாணவர்களுக்குக் காலடியால் (திட்டமற்ற ஒழுங்கற்ற அளவுகள்) மற்றும் குச்சியால் (ஒழுங்குக் கருவிகள்) நீளத்தினை அளக்கும் போது ஏற்படும் வேறுபாட்டினை உணர உதவி புரியலாம்.

திட்டமற்ற ஒழுங்குக் கருவிகள் கொண்டு நீளத்தை அளத்தல்

 

பயணம் செய்வோம்

நீளம் தாண்டுதலில் நீளத்தை அளத்தல்


கலைச் சொல்: நீளம்

குதித்துத் தாண்டிய நீளம் 14 காலடி உள்ளது.

குதித்துத் தாண்டிய நீளம் 11 காலடி உள்ளது.

குதித்துத் தாண்டிய நீளம் 3 குச்சி அளவு உள்ளது.

குதித்துத் தாண்டிய நீளம் 3 குச்சி அளவு உள்ளது.

ஆசிரியருக்கான குறிப்பு

ஆசிரியர் மாணவர்களுக்குக் காலடியால் (திட்டமற்ற ஒழுங்கற்ற அளவுகள்) மற்றும் குச்சியால் (ஒழுங்குக் கருவிகள்) நீளத்தினை அளக்கும் போது ஏற்படும் வேறுபாட்டினை உணர உதவி புரியலாம்.

 

கற்றல்



இந்தப் கரிக்கோலின் நீளமானது எத்தனை அழிப்பான்களின் நீளத்திற்குச் சமமாகும்?

தோராயமாக 5 முறை இருக்கலாம்.

என் ஊகத்தின்படி 3 முறை இருக்கலாம்.

அப்படியா .... சரி, அளந்து பார்த்துவிடலாம்!

கரிக்கோலின் நீளமானது 4 அழிப்பான் நீளம் உள்ளது.

என்னுடைய ஊகம் அதிகம்.

என்னுடைய ஊகம் குறைவு.

ஆசிரியருக்கான குறிப்பு

அளவீடுகளை ஊகித்துப் பின்பு அதனை அளந்து சரிபார்க்க ஊக்கப்படுத்தவும். மேலும் சரியாக ஊகம் செய்வதற்குப் பல்வேறு பொருள்களை அளப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும்.

 

செய்து பார்

அளவீட்டுக் கருவிகளை உற்று நோக்கிக் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் நீளங்களை ஊகித்து எழுதுக. பிறகு, அளவீட்டுக் கருவிகளால் அளந்து எழுதுக.



ஆசிரியருக்கான குறிப்பு

மாணவர்களைத் தங்கள் சூழலில் உள்ள பொருள்களின் நீளத்தைத் திட்டமற்ற கருவிகள் வழியாக ஊகித்தும் அளந்தும் பார்க்க ஆசிரியர் உதவி செய்யலாம்.

 

முயன்று பார்

பொருளின் நீளத்திற்கு ஏற்ப கட்டங்களில் வண்ணம் தீட்டுக. வண்ணம் தீட்டப்பட்ட கட்டங்களை எண்ணிப் பார்த்து அவற்றின் எண்ணிக்கையை வட்டத்தினுள் எழுதுக.



மேலே உள்ள அட்டவணையை உற்றுநோக்கிக் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்க.

1. எந்த இரு பொருள்கள் ஒரே நீளம் கொண்டுள்ளன?

விடை : பேனா மற்றும் பென்சில்

2. அதிக நீளமுடைய பொருள் எது?

விடை : நிலையான பெட்டி

3. கரிக்கோல் மற்றும் வண்ண மெழுகுகோலின் மொத்த நீளம் எவ்வளவு?

விடை : ஆறு

4. கரிக்கோலை விட எழுது பொருள் பெட்டி நீளமானதா? ஆம். எனில், எவ்வளவு?

விடை : ஆம், இரண்டு

5. மிகக் குறைவான நீளமுடைய பொருள் எது?

விடை : அழிப்பான்

 

நீயும் கணித மேதை தான்

கொடுக்கப்பட்டுள்ள பொருளில் வட்ட மேசையின் விளிம்புப் பகுதியை அளக்கப் பொருத்தமான அளவீட்டுக் கருவி எது?



Tags : Measurement | Term 1 Chapter 4 | 2nd Maths அளவைகள் | பருவம்-1 அலகு 4 | 2வது கணக்கு.
2nd Maths : Term 1 Unit 4 : Measurement : Measuring length using uniform non standard tools Measurement | Term 1 Chapter 4 | 2nd Maths in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2வது கணக்கு : பருவம்-1 அலகு 4 : அளவைகள் : திட்டமற்ற ஒழுங்குக் கருவிகள் கொண்டு நீளத்தை அளத்தல் - அளவைகள் | பருவம்-1 அலகு 4 | 2வது கணக்கு : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2வது கணக்கு : பருவம்-1 அலகு 4 : அளவைகள்