Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் | வரலாறு | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II

   Posted On :  24.07.2022 06:17 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும். II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும். IV. பொருத்துக. - புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள்

அலகு 4

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

 

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

 

1. எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?

) உட்ரோ வில்சன்

) ட்ரூமென்

) தியோடர் ரூஸ்வெல்ட்

) பிராங்களின் ரூஸ்வெல்ட்

[விடை: () ட்ரூமென்]

 

2. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?

) செப்டம்பர் 1959

) செப்டம்பர் 1949

) செப்டம்பர் 1954

) செப்டம்பர் 1944

[விடை: () செப்டம்பர் 1949]

 

3. அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் -------------- ஆகும்.

) சீட்டோ

) நேட்டோ

) சென்டோ

) வார்சா ஒப்பந்தம்

[விடை: () நேட்டோ]

 

4. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969 இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

) ஹபீஸ் ஆல்-ஆஸாத்

) யாசர் அராபத்

) நாசர்

) சதாம் உசேன்

[விடை: () யாசர் அராபத்]

 

5. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

) 1975

) 1976

) 1973

) 1974

[விடை : () 1976]

 

6. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

) 1979

) 1989

) 1990

) 1991

[விடை : () 1991]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் டாக்டர் சான்யாட் சென் ஆவார்.

2. 1918 இல் பீகிங் பல்கலைக்கழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைப்பு நிறுவப்பட்டது.

3. டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமிங்டாங் கட்சியின்  தலைவராக இருந்தவர் ஷியாங்-கை-ஷேக் ஆவார்.

4. அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் சென்டோ / பாக்தாத் ஒப்பந்தம் ஆகும்.

5. துருக்கிய அரபுப் பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம்  வெர்செயில்ஸ் ஆகும்.

6. ஜெர்மனி நேட்டோவில் 1955 ஆம் ஆண்டு இணைந்தது.

7. ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ஸ்ட்ராஸ் பர்க் நகரில் அமைந்துள்ளது.

8. ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மாஸ்டிரிக்ட் - நெதர்லாந்து ஆகும்.

 

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

 

1. i) கற்றறிந்த சிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1898) இளம் பேரரசர் துவக்கிய  சீர்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறியப்படுகிறது.

ii) கோமிங்டாங் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும்  பிரதிநிதித்துவப்படுத்தியது.

iii) மஞ்சூரியா மீதும் ஷாண்டுங் மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதிக்க யுவான் ஷி – கே உடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.

iv) சோவியத் நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்தது.

) i) மற்றும் ii) சரி

) ii) மற்றும் iii) சரி

) i) மற்றும் iii) சரி

) i) மற்றும் iv) சரி

[விடை : () i) மற்றும் iii) சரி]

 

2.  i) கிழக்கு ஐரோப்பாவில் 1948 இல் சோவியத் நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளை சோவியத் இராணுவம் விடுதலை செய்தது.

ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.

iii) சீட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.

iv) ஜப்பானுக்கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப் பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும் திறனை எடுத்துக்காட்ட விரும்பியது.

) i), iii) மற்றும் iv) சரி 

) i) மற்றும் ii) சரி

) iii) மற்றும் iv) சரி

) i), ii) மற்றும் iii) சரி

[விடை : () i) மற்றும் ii) சரி]

 

3. கூற்று : அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மறுநிர்மாணத்திற்காக முன்வைக்கப்பட்டது.

காரணம் : அமெரிக்க நாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கின் கீழ் கொண்டு வர நினைத்தது.

) கூற்றும், காரணமும் இரண்டுமே சரி. ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

) கூற்றும் காரணமும் தவறானவை.

) கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.

) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

[விடை: () கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றை சரியாக விளக்குகிறது.]

 

IV. பொருத்துக.

 

1. டாக்டர் சன் யாட் சென்தெற்கு வியட்நாம்

2. சிங்மென் ரீ - கோமிங்டாங்

3. அன்வர் சாதத் - கொரியா

4. ஹோ சி மின் - எகிப்து 

5. நிகோ டின் டியம் - வடக்கு வியட்நாம்

விடை:

1. டாக்டர் சன் யாட் சென் - கோமிங்டாங்

2. சிங்மென் ரீ - கொரியா

3. அன்வர் சாதத் - எகிப்து

4. ஹோ சி மின் - வடக்கு வியட்நாம்

5. நிகோ டின் டியம் - தெற்கு வியட்நாம்

 

Tags : The World after World War II | History | Social Science இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 4 : The World after World War II : One Mark Questions Answers The World after World War II | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்