Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : வினா விடை

புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் - உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : வினா விடை | 12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population

   Posted On :  13.04.2022 11:09 pm

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்

உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : வினா விடை

விலங்கியல் : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்: புத்தக வினாக்கள் / சரியான விடையைத் தேர்ந்தெடு / குறுகிய விரிவான வினா விடை

மதிப்பீடு

புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு 


1. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டமும் இவ்வாறு வரையறுக்கப்படுகிறது. 

அ) உயிர்த் தொகை

ஆ) சூழல் மண்டலம் 

இ) எல்லை

ஈ) உயிர் காரணிகள் 

விடை : அ) உயிர்த் தொகை 



2. வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் என அழைக்கப்படும். 

அ) எக்டோதெர்ம்கள்

ஆ) மிகைவெப்ப வேறுபாட்டு உயிரிகள் 

இ) எண்டோதெர்ம்கள்

ஈ) ஸ்டீனோதெர்ம்கள்

விடை : ஆ) மிகைவெப்ப வேறுபாட்டு உயிரிகள் 



3. இயற்கையில் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்திலிருந்து நன்மை பெறும் உயிரினச் சார்பு 

அ) வேட்டையாடும் வாழ்க்கை

ஆ) ஒன்றுக்கொன்று உதவும் வாழ்க்கை 

இ) கேடு செய்யும் வாழ்க்கை

ஈ) உதவி பெறும் வாழ்க்கை

விடை : ஈ) உதவி பெறும் வாழ்க்கை 



4. வேட்டையாடுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை முறை எந்த வகை உயிரினச் சார்பு 

அ) (+, +) 

ஆ) (+, 0) 

இ) (-- -)

ஈ) (+, -)

விடை : ஈ) (+,



5. சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக ஏற்படுவது 

அ) உயிரின மறைவு

ஆ) திடீர்மாற்றம் 

இ) தொந்தரவு வாழ்க்கை

ஈ) கூட்டுயிரி வாழ்க்கை 

விடை : அ) உயிரின மறைவு 



6. கீழ்க்கண்டவற்றுள் r - சிற்றினத்துக்கு உதாரணம் 

அ) மனிதன்

ஆ) பூச்சிகள் 

இ) காண்டாமிருகம்

ஈ) திமிங்கலம்

விடை : ஆ) பூச்சிகள் 



7. கீழ்க்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க. 

பத்தி I     பத்தி II 

அ. பகிர்ந்து வாழும் வாழ்க்கை -  1. சிங்கம் மற்றும் மான் 

ஆ. உதவி பெறும் வாழ்க்கை -  2. உருளைப் புழு மற்றும் மனிதன்  

இ. ஒட்டுண்ணி வாழ்க்கை – 3. பறவைகளும் அணில்களும் உணவிற்குப் போட்டியிடுதல் 

ஈ. போட்டி வாழ்க்கை  - 4.  கடல் அனிமோன் மற்றும் துறவி நண்டு  

உ. கொன்றுண்ணி வாழ்க்கை  5.  பறவைகளும் பாலூட்டிகளும் விதை பரவுதலுக்கு உதவுதல்

அ) அ - 4, ஆ - 5, இ - 2, ஈ - 3, உ -1 

ஆ) அ - 3, ஆ - 1, இ - 4, ஈ - 2, உ - 5 

இ) அ - 2, ஆ - 3, இ - 1, ஈ -- 5, உ - 4

ஈ) அ - 5, ஆ - 4, இ - 2, ஈ - 3, உ -1

விடை : அ) அ -- 4, ஆ - 5, இ - 2, ஈ - 3, உ -1



8. கீழ்க்காணும் வரைபடம் சுற்றுச்சூழல் உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்களின் எதிர்வினையைக் குறிக்கிறது. இதில் அ, ஆ மற்றும் இ எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றைக் கண்டறிக.


விடை : 

அ) ஒத்தமைவான், ஒழுங்கமைவான், பகுதி ஒழுங்கமைவான்



8. உறிஞ்சு மீனுக்கும் சுறா மீனுக்கும் உள்ள தொடர்பு 

அ) போட்டி

ஆ) உதவி பெறும் வாழ்க்கை 

இ) வேட்டையாடும் வாழ்க்கை

ஈ) ஒட்டுண்ணி வாழ்க்கை

விடை : ஆ) உதவி பெறும் வாழ்க்கை 



10. கீழ்க்கண்ட வயது கூம்பில் எவ்வகை மனித மக்கள் தொகை குறிக்கப்படுகிறது? 


அ) அழிந்து வரும் மக்கள் தொகை

ஆ) நிலைத்த மக்கள் தொகை 

இ) குறையும் மக்கள் தொகை

ஈ) அதிகரிக்கும் மக்கள் தொகை

விடை : ஆ) நிலைத்த மக்கள் தொகை 



11. கீழ்க்கண்டவற்றுள் 1-வகை தேர்வு செய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்துக்கள்

அ) அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம் 

ஆ) அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம் 

இ). குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம் 

ஈ) குறைவான எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் பெரிய உருவம்

விடை : அ) அதிக எண்ணிக்கையில் சந்ததிகள் மற்றும் சிறிய உருவம்



12. நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? 

அ) ஸ்டீனோதெர்மல்

ஆ) யூரிதெர்மல் 

இ) கட்டாட்ராமஸ்

ஈ) அனாட்ராமஸ் 

விடை : இ) கட்டாட்ராமஸ் 



13. சில இயற்பிய செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள்

அ) ஒத்தமைவான்கள் எனப்படுகின்றன 

ஆ) ஒழுங்கமைவான்கள் எனப்படுகின்றன 

இ) வலசைபோகின்றன

ஈ) செயலற்ற நிலையில் உள்ளன

விடை : ஆ) ஒழுங்கமைவான்கள் எனப்படுகின்றன 



14. வாழிடம் என்றால் என்ன?

* ஒரு உயிரினத்தின் வாழிடம் என்பது அவ்வுயிரினத்தின் 'முகவரி' எனலாம். 

* ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழும் உயிரிகள் தங்களுக்குள் இசைந்து வாழ்வதோடு, ஊட்ட நிலையின் ஒரு பகுதியாக இருந்து உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலையை உருவாக்குகின்றன.



15. வரையறு - சூழலியல் ஒதுக்கிடம் / சிறுவாழிடம் 

* ஒவ்வொரு உயிரினமும் தனித்துவமிக்க வாழிடத்தைப் பெற்றிருப்பது போல் சுற்றுச் சூழலில் சிறு வாழிடத்தையும் பெற்றுள்ளது. 

* ஒரு உயிரினத்தின் சுற்றுச் சூழல் சிறுவாழிடம் என்பது அவ்வுயிரினம் வாழும் சிறு இடத்தைச் சார்ந்து மட்டுமல்லாமல் அதன் சுற்றுச் சூழல் தேவைகள் அனைத்தையும் உள்ளடக்கியதுமாகும்.



16. புதிய சூழலுக்கு இணங்கல் என்றால் என்ன?

விலங்குகள் சுற்றுச் சூழலில் ஏற்படும் மாறுபாடுகளுக்கேற்ப, தங்கள் எதிர்வினையை குறுகிய காலத்திற்குள் மாற்றியமைத்துக் கொள்கின்றன. இதற்கு இணங்கமாதல் என்று பெயர். 



17. மண்ணின் தோற்றம் என்றால் என்ன?

மண்ணின் தாய்ப்பொருளான பாறைகளிலிருந்து மண் உருவாகின்றது. பாறைகள், காலநிலைக் காரணிகளால் சிதைவுற்று மண்ணாக மாறுகிறது. இவை மூல மண் எனப்படும். 



18. அழுத்தமற்ற நிலை என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தில் உள்ள தாவரயினங்கள் சுற்றுச் சூழல் காரணிகளின் தாக்கத்தினால், காடுகளின் (அ) தாவர உற்பத்தி பாதிப்படையாமலும் அல்லது குறையாமலும் இருப்பின் அது அழுத்தமற்ற நிலை எனப்படும்.


மண்ணின் ஊடுருவ விடும் தன்மை : 

* புரைவெளி ஊடாக நீர் மூலக்கூறுகள் நகர்வதை தீர்மானிக்கும் மண்ணின் தன்மை, மண்ணின் ஊடுருவ விடும் தன்மை எனப்படும். 

* மண்ணின் ஊடுருவ விடும் தன்மை புரைவெளியின் அளவினை நேரடியாகச் சார்ந்துள்ளது. 

* மண்ணின் நீரைப் பிடித்து வைக்கும் திறன் மண்ணின் ஊடுருவ விடும் தன்மைக்கு எதிர் விகிதத்தில் உள்ளது.



20. வேறுபடுத்துக: மிகை வெப்ப வேறுபாடு உயிரிகள் (யூரிதெர்ம்கள்) மற்றும் குறை வெப்ப வேறுபாட்டு உயிரிகள் (ஸ்டீனோதெர்ம்கள்) 

மிகை வெப்ப வேறுபாடு உயிரிகள்

1. உயிரினங்கள் அதிக வெப்பநிலையை தாங்கி வாழும் தன்மையுடையவை.

2. (எ.கா. பூனை, நாய், புலி மற்றும் மனிதன்.

குறை வெப்ப வேறுபாடு உயிரிகள் 

1. உயிரினங்கள் குறைவான அளவு வெப்பநிலை வேறுபாடுகளை மட்டுமே தாங்கி கொள்ளும் திறன் பெற்றவை. 

2. எ.கா. மீன்கள், தவளைகள், பல்லிகள் மற்றும் பாம்புகள்.



21. குளிர் உறக்கம் மற்றும் கோடை உறக்கம் ஆகிய நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரி. 

* சில சமயம், விலங்கினங்கள் இடம்பெயர்ந்து செல்ல இயலாத சூழலில், சூழல் அழுத்தத்திலிருந்து விடுபட செயலற்ற நிலைத் தன்மையை மேற்கொள்கின்றன. 

* சில கரடிகள் குளிர் காலங்களில் குளிர் உறக்கத்தை மேற்கொள்கின்றன. 

* சில நத்தைகள் மற்றும் மீன்கள் போன்றவை வெப்பம் மற்றும் வறட்சி போன்ற வெப்பம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட கோடைகால உறக்கத்தை மேற்கொள்கின்றன. 



22. உயிர்த்தொகையின் பண்புகளை எழுதுக.

உயிர்த்தொகையின் பண்புகள் : 

1. இருப்பிடம் / புவியியல் நிலை 

2. காலநிலை மற்றும் இயற்பியல் - வேதியியல் சூழல் 

3. முதன்மையாகக் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் 

4. உயிர் தொகைகளுக்கிடையே உள்ள எல்லையைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாது. புல்வெளி மற்றும் வன உயிர்த்தொகையில், சந்திக்கும் இடைநிலைப் பகுதிகள் உள்ளன.. 



23. புவியில் காணப்படும் நீர் சார்ந்த உயிர்த்தொகையை வகைப்படுத்துக.

புவியில் உள்ள நீர் உயிர்த்தொகை :  

1. நன்னீர் (ஏரிகள், குளங்கள், ஆறுகள்) 

2. உவர் நீர் (கழிமுகப் பகுதி, ஈரநிலங்கள்)

3. கடல் நீர் (பவளப் பாறைகள், மேற்கடற் பகுதிகள் மற்றும் ஆட்கடல் பகுதிகள்) 



24. உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்கள் எந்தெந்த வழிகளில் எதிர்வினை புரிகின்றன என்பதை விளக்கு. 

* ஒவ்வொரு உயிரினமும் அதன் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வினைபுரிகின்றன. உயிரினங்கள் பல்வேறு வகைகளில் உயிரற்ற காரணிகளுக்கேற்ப துலங்கல்களை வெளிப்படுத்துகின்றன. 

* சில உயிரினங்கள் மாறாத உடல் செயலியல் மற்றும் புறத்தோற்ற நிலைகளைப் பராமரிக்கின்றன. 

* சில உயிரினங்கள் சுற்றுச் சூழல் மாற்றங்களைத் தாங்கிக் கொள்வதற்கான செயல்களைச் செய்கின்றன. இதுவும் ஒரு துலங்கல் வினையாகக் கருதப்படும்.



25. உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப் பண்புகளை வகைப்படுத்துக.

விடை : தகவமைப்புப் பண்புகளின் வகைகள் மூன்று வகைப்படும். 

* உடல் அமைப்பு சார்ந்தவை, 

* நடத்தை சார்ந்தவை,

* உடற்செயலியல் சார்ந்தவை. 



26. பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம் என்றால் என்ன?

பிறப்பு வீதம் : 

* பிறப்பு வீத அதிகரிப்பால் இனக்கூட்ட அளவு அதிகரிக்கின்றது. 

* பிறத்தல், பொரித்தல், முளைத்தல் அல்லது பிளவுறுதல் ஆகிய செயல்களின் காரணமாக புதிய உயிரினங்கள் உருவாவதை வெளிப்படுத்துவதே பிறப்பு வீதம் ஆகும். 

* இனப்பெருக்கத்தின் இரண்டு முக்கிய காரணிகள் கருவுறும் திறன் மற்றும் இனப்பெருக்கத் திறன் ஆகியவை ஆகும். 

* பிறப்பு வீதத்தை சீரமைக்கப்படாத பிறப்பு வீதம் மூலம் வெளிப்படுத்தலாம். சீரமைக்கப்படாத பிறப்பு வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பெண் உயிரிக்குப் பிறக்கும் உயிரிகளின் எண்ணிக்கை ஆகும்.

* பிறப்பு வீதம் = குறிப்பிட்ட காலத்திய பிறப்பு எண்ணிக்கை / சராசரி இனக்கூட்டம் 


இறப்பு வீதம் : 

* இறப்பு வீதம் என்பது பிறப்பு வீதத்துக்கு எதிரான இனக்கூட்டத் தொகை குறைப்புக் காரணி ஆகும். 

* இறப்பு வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் இழக்கப்படும். உயிரினங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். 

* பொதுவாக இறப்பு வீதம் என்பது குறித்த இறப்பு வீதமாக வெளிப்படுத்தப்படும். 

* அதாவது குறிப்பிட்ட கால கட்டம் கடந்த பின்பு ஒரு மூல இனக்கூட்டத்தில் இறந்து விட்ட உயிரினங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். 

* சீரமைக்கப்படாத இறப்பு வீதத்தை கீழ்க்கண்ட சூத்திரத்தால் கணக்கிடலாம்.

* இறப்பு வீதம் = குறிப்பிட்ட காலத்திய இறப்பு எண்ணிக்கை / சராசரி இனக்கூட்டம் 



27. J வடிவ மற்றும் S வடிவ வளைவுகளை வேறுபடுத்துக. 

J வடிவ வளைவு

1. ஒரு இனக்கூட்டத்தின் அளவு விரைந்து பெருகிக்கொண்டிருக்கும்போது, சுற்றுச்சூழல் தடை அல்லது திடீரெனத் தோன்றும் கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகியவற்றால் வளர்ச்சி விகிதம் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது.

2. வளர்ச்சி விகிதம் வேகமாக காணப்படும். 

3. இவை பொதுவாக பூச்சியினங்களில் காணப்படுகிறது.


S வடிவ வளைவு 

1. சில இனக்கூட்டங்களில் தொடக்கத்தில் உயிரினங்களின் எண்ணிக்கை மிக மெதுவாகவும் பின் வேகமாகவும் உயர்ந்து, பின்பு சுற்றுச்சூழல் தடைகளின் அதிகரிப்பால் மெதுவாகக் குறைந்து வளர்ச்சி வேகம் சமநிலையை எட்டி தொடர்ந்து  பராமரிக்கப்படுகிறது. 

2. சீரான வளர்ச்சியை கொண்டுள்ளது.

3. இவை பொதுவாக சிறிய பாலூட்டிகளில் காணப்படுகிறது. 



28. இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் குறித்து எழுதுக. 

1. அனைத்து விலங்கினக் கூட்டத்தின் உள்ளார்ந்த நோக்கம் எண்ணிக்கை அதிகரிப்பதே ஆகும்.  ஆனால் எண்ணிக்கை எல்லையில்லாமல் அதிகரிப்பதில்லை. 

2. சுற்றுச்சூழல் தாங்குதிறன் எல்லையை எட்டியவுடன், இனக்கூட்டத்தின் எண்ணிக்கை நிலையாகவோ, சுற்றுச்சூழல் நிலைகளுக்கேற்ப ஏற்ற இறக்கமாகவோ காணப்படும். 

3. இனக்கூட்டத் தொகையை பல காரணிகள் நெறிப்படுத்துகின்றன. அவை :

i) அடர்த்தி சாராதது - புறக் காரணிகள்

ii) அடர்த்தி சார்ந்தது - அகக் காரணிகள் 

i) உயிரினத்திற்கு கிடைக்கும் இடப்பரப்பு, வசிப்பிடம், தட்பவெப்பம், உணவு ஆகியன புறக் காரணிகள் ஆகும். 

ii) போட்டி, கொன்றுண்ணுதல், வெளியேற்றம், உள்ளேற்றம் மற்றும் நோய்கள்' ஆகியவை அகக் காரணிகள் ஆகும்.



29. சுற்றுச்சூழல் அடர்வு, ஒழுங்கற்ற அடர்வு மற்றும் இனக்கூட்ட அடர்வு என்றால் என்ன?

அடர்த்தியின் உள்ளடக்கம்

1. சுற்றுச்சூழல் அடர்வு 

2. ஒழுங்கற்ற அடர்வு (அல்லது) கச்சா அடர்த்தி

3 இனக்கூட்ட அடர்த்தி

விளக்கம்

1. குறிப்பிட்ட அளவிலான மொத்த வாழிடப்பரப்பில் உள்ள, எண்ணிக்கை அடிப்படையிலான உயிரினத் தொகையின் அளவு. எ.கா குறிப்பிட்ட கொள்ளளவு நீரில் வாழும் 1000 மீன்கள். 

2. மொத்த பரப்பை அலகாக் கொண்ட எண்ணிக்கை அடிப்படையிலான இனக்கூட்ட அளவு. எ.கா : 1000 மீன்கள் குளம். 

3. ஒரு அலகுப் பரப்பில் (அல்லது) கொள்ளளவில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை. எ.கா : 100 மரங்கள் /ஏக்கர்.



30. மண்ணின் பண்புகள் குறித்து குறிப்பு வரைக. 

1. மண்ணின் நயம் :

மண்ணில் உள்ள துகள்களின் அளவைப் பொறுத்து மண்ணின் நயம் அமைகிறது. மண் துகள்களின் அளவின் அடிப்படையில் மணல், வண்டல் மற்றும் களிமண் என பல மண் வகைகள் காணப்படுகிறது. 

2. மண் புரைமை : 

ஒரு குறிப்பிட்ட கன அளவு உள்ள மண்ணின், துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி புரைவெளி எனப்படும். அதாவது புரைவெளிகளால் நிரம்பியுள்ள மண்ணினுடைய கன அளவின் ஒட்டுமொத்த பருமனின் சதவீதமே மண் புரைமை ஆகும். 

3. மண்ணின் ஊடுருவ விடும் தன்மை :

புரைவெளி ஊடாக நீர் மூலக்கூறுகள் நகர்வதை தீர்மானிக்கும் மண்ணின் தன்மை, மண்ணின் ஊடுருவ விடும் தன்மை எனப்படும். மண்ணின் ஊடுருவ விடும் தன்மை புரைவெளியின் அளவினை நேரடியாகச் சார்ந்துள்ளது. மண்ணின் நீரைப் பிடித்து வைக்கும் திறன் மண்ணின் ஊடுருவ விடும் தன்மைக்கு எதிர் விகிதத்தில் உள்ளது. 

4. மண் வெப்பநிலை :

மண் சூரியனிடமிருந்தும், சிதையும் கரிமப்பொருட்களிலிருந்தும் மற்றும் புவியின் உட்புறத்திலிருந்தும் *வெப்ப ஆற்றலைப் பெறுகிறது. மண்ணின் வெப்பநிலை, விதைகள் முறைப்பதையும், வேர்கள் வளர்வதையும் மற்றும் மண்ணில் வாழும் நுண்ணிய மற்றும் பெரிய உயிரினங்களின் உயிரியல் செயல்களையும் பாதிக்கிறது.

5. மண் நீர் :

மண்ணில் காணப்படும் நீர் முக்கியமான கரைப்பானாகவும், கடத்தும் காரணியாகவும் செயல்படுவது மட்டுமல்லாது மண்ணின் நயம், மண் துகள்களின் கட்டமைப்பு ஆகியவற்றையும் பராமரித்து, பல்வேறு பல தாவரங்களும் விலங்குகளும் வாழத் தகுதியான வாழிடங்களாக மாற்றுகின்றன.



31. பனிச் சமவெளி உயிரினத் தொகை மற்றும் பசுமை மாறா ஊசியிலைக் காடுகள் உயிரினக்குழுமங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுக. 

பனிச் சமவெளி உயிரினத் தொகை 

1. குறுகிய பகல் பொழுதைக் கொண்ட குளிர்காலம் நீண்டதாகவும், நீண்ட பகல் பொழுதைக் கொண்ட கோடைக்காலம் குறுகியதாகவும் உள்ளது.

2. மழையளவு ஆண்டுக்கு 250 மி.மீக்கும் குறைவாக உள்ளது.

3. குட்டையான வில்லோ மரங்கள், பூச்ச மரங்கள், பாசிகள், புற்கள், கோரைகள் ஆகியவை இங்கு காணப்படக் கூடிய தாவர இனங்கள் ஆகும்.

4. கலைமான்கள், ஆர்டிக் முயல்கள், கஸ்தூரி எருது மற்றும் லெம்மிங்குகள் ஆகியவை இங்கு காணப்படக் கூடிய தாவர உண்ணிகளாகும்.

5. ஆர்டிக் நரி, ஆர்டிக் ஓநாய், சிவிங்கி பூனை மற்றும் பனி ஆந்தை இங்கு வாழும் விலங்குண்ணிகளாகும்.

பசுமை மாறா ஊசியிலைக் காடுகளின்  உயிரினத்தொகை 

1. இப்பகுதி அதிகக் குளிர்ப்பிக்க, நீடித்த குளிர்காலம் கொண்டது.

2. இங்கு ஆண்டு மழையளவு 380-1000 மி.மீ. ஆகும். 

3. ஸ்புரூஸ், ஃபிர் மற்றும் பைன் போன்ற ஊசியிலை மரங்கள் இங்கு பொதுவாகக் காணப்படுகின்ற தாவரயினங்களாகும். 

4. அணில்கள் மற்றும் வெண்பனி முயல்கள் இங்கு காணப்படக் கூடிய தாவர உண்ணிகளாகும். 

5. பைன் மார்டென்கள், மர ஓநாய்கள், பழுப்பு நிறக் கரடிகள், சிவிங்கிப் பூனை மற்றும் ஓநாய்கள் இங்கு வாழும் விலங்குண்ணிகளாகும்.



32. நிலவாழ் உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புகளை விளக்குக. 

* மண்புழு மற்றும் நிலவாழ் பிளேனரியாக்கள் போன்றவை வளை தோண்டுதல், சுருளுதல், சுவாசம் போன்ற பிற செயல்பாடுகளுக்காக ஈரப்பதம் மிக்க சூழலைத் தருவதற்காக உடலின் மேற்பரப்பில் கோழையைச் சுரக்கின்றன. 

* கணுக்காலிகளில் சுவாசப் பரப்புகளுக்கு மேல் வெளிப்புப் போர்வையும், நன்கு வளர்ச்சி பெற்ற மூச்சுக்குழல் மண்டலமும் காணப்படுகின்றன. 

* முதுகெலும்பிகளின் தோலில் நன்கு பாதுகாக்கப்பட்ட சுவாசப் பரப்புகளுடன் பல செல் அடுக்குகளும் உள்ளன. இவை நீரிழப்பைத் தடுக்க உதவுகின்றன.

* சில விலங்குகள், கழிவு நீக்கத்தின் போது ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்ய உணவிலிருந்து நீரைப் பெறுகின்றன.  

* பறவைகள் அதிக உணவு கிடைக்கும் மழைகாலம் துவங்கும் முன்பே கூடுகட்டுதல் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றன. வறண்ட காலத்தில் பறவைகள் அரிதாகவே இனப்பெருக்கம் செய்கின்றன. 

* தோல் மற்றும் சுவாச மண்டலம் உதவியினால் ஆவியாக்கிக் குளிர வைப்பதன் மூலமும் அதிக sad அடர்த்தியுள்ள சிறுநீரை உருவாக்குவதன் மூலமும் அதன் எடையில் 25 % நீரிழப்பைத் தாங்கும் திறன் பெற்றிருப்பதன் மூலமும் ஒட்டகங்கள் நீர்ச் சமநிலையைப் பராமரிக்கின்றன.



33. இனக்கூட்ட வயதுப் பரவலை விளக்குக. 

* இனக்கூட்டத்தில் உள்ள உயிரினங்களின் வெவ்வேறு குழுவின் வயது விகிதம் (இனப்பெருக்கத்திற்கு முந்தைய வயது, இனப்பெருக்க வயது மற்றும் இனப்பெருக்கத்திற்கு பிந்தைய வயது) அதன் வயதுப் பரவலைக் குறிக்கிறது. 

* இது ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு இனக்கூட்டத்தின் இனப்பெருக்க நிலையை நிர்ணயிக்கிறது. இது எதிர்கால இனக்கூட்ட அளவைத் தீர்மானிக்கும் காரணியும் ஆகும். 

* பொதுவாக வேகமாக வளரும் இனக்கூட்டத்தில் இளம் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும். 

* ஒரு நிலைத்த இனக்கூட்டத்தில் வெவ்வேறு வயதுடைய உயிரினக் குழுக்களின் பரவல் சீராக இருக்கும். 

* இனக்கூட்டத்தின் அளவு குறையும் நிலையில் முதிர்ந்த உயிரினங்கள் அதிகமாகக் காணப்படும்.




34. வளர்ச்சி மாதிரிகள் / வளைவுகளை விளக்கு. 

இனக்கூட்டத்தின் வளர்ச்சி ஒரு தனித்துவமான குறிப்பிட்ட வடிவங்களில் அமைகிறது. வரைபடத்தில் இதனை வரையும் போது J வடிவ வளர்ச்சி மற்றும் S வடிவ வளர்ச்சி என இரு வடிவங்கள் கிடைக்கின்றன. 


'J' வடிவிலான வளர்ச்சி வடிவம் : 

i) ஒரு இனக்கூட்டத்தின் அளவு விரைந்து பெருகிக் .. கொண்டிருக்கும்போது, சுற்றுச்சூழல் தடை அல்லது திடீரெனத் தோன்றும் கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகியவற்றால் வளர்ச்சி விகிதம் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. 

ii) இவை 'J' வடிவிலான வளர்ச்சியைக் கொடுக்கின்றன. மழைக்காலங்களில், நிறைய பூச்சி வகைகளின் எண்ணிக்கை உடனடியாக அதிகரிக்கும், மழைக்காலங்களின் முடிவில் அவை மறையும். 

'S' வடிவிலான வளர்ச்சி வடிவம் : 

i) சில இனக்கூட்டங்களில் தொடக்கத்தில் உயிரினங்கள் எண்ணிக்கை மிக மெதுவாகவும், பின் வேகமாகவும் உயர்ந்து, பின்பு சுற்றுச்சூழல் தடைகளின் அதிகரிப்பால் மெதுவாகக்குறைந்து வளர்ச்சிவேகம் சமநிலையை எட்டி தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. இவ்வகை வளர்ச்சி S வடிவத்தைக் கொடுக்கின்றது.




Tags : Book Back Important Questions Answers | Choose the Correct Answers | Short, brief Answers | Zoology புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல்.
12th Zoology : Chapter 11 : Organisms Reproductive and Population : Organisms Reproductive and Population: Questions and Answers (Evaluation) Book Back Important Questions Answers | Choose the Correct Answers | Short, brief Answers | Zoology in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் : வினா விடை - புத்தக வினாக்கள் | சரியான விடையைத் தேர்ந்தெடு | குறுகிய வினா விடை | விலங்கியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 11 : உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்