Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | கவிதைப்பேழை: ஆசாரக்கோவை: கேள்விகள் மற்றும் பதில்கள்

பெருவாயின் முள்ளியார் | பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஆசாரக்கோவை: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal

   Posted On :  30.06.2023 07:20 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்

கவிதைப்பேழை: ஆசாரக்கோவை: கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல் : கவிதைப்பேழை: ஆசாரக்கோவை: கேள்விகள் மற்றும் பதில்கள் - பெருவாயின் முள்ளியார் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறரிடம் நான் --------- பேசுவேன்.

) கடுஞ்சொல்

) இன்சொல்

) வன்சொல்

) கொடுஞ்சொல்

[விடை : ஆ) இன்சொல்]

 

2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது

) வம்பு

) அமைதி

) அடக்கம்

) பொறை

[விடை : ஈ) பொறை]

 

3. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஆகும்.

) அறிவுடைமை

) அறியுடைமை

) அறிவு உடைமை

) அறிஉடைமை

[விடை : அ) அறிவுடைமை]

 

4. இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்

) இவை எட்டும்

) இவையெட்டும்

) இவ்வெட்டும்

) இவ்எட்டும்

[விடை : ) இவையெட்டும்]

 

5. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

) நன்றி+யறிதல்

) நன்றி+அறிதல்

) நன்று+அறிதல்

) நன்று+யறிதல்

[விடை : ஆ) நன்றி+அறிதல்]

 

6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

) பொறுமை+உடைமை

) பொறு+யுடைமை

) பொறை +யுடைமை

) பொறை +உடைமை

[விடை : அ) பொறுமை+உடைமை]

 

குறுவினா

1. எந்த உயிருக்கும் செய்யக்கூடாதது எது?

விடை

நாம் எந்த உயிருக்கும் துன்பம் செய்யக்கூடாது

2. நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்?

விடை

நாம் நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் வேண்டும்.

 

சிறுவினா

ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை?

விடை

(i) பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்.

(ii) பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல்.

(iii) இனிய சொற்களைப் பேசுதல்.

(iv) எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்.

(v) கல்வி அறிவு பெறுதல்.

(vi) பிறருக்கு உதவுவதல்.

(vii) அறிவுடையவராய் இருத்தல்.

(viii) நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்.

 

சிந்தனை வினா

1. உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகளைப் பட்டியவிடுக.

விடை

(i) பிறருக்கு உதவும் பண்புடையவன்.

(ii) பிறரை மன்னிக்கும் குணம் கொண்டவன்.

(iii) நட்பின் சிறப்பை உணர்ந்தவன்.

(iv) சிறியவரையும் மதிக்கும் பெருங்குணம் உடையவன்.

(v) என் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாதவன்.

 

2. நல்ல ஒழுக்கங்களை வித்து எனக் கூறுவதின் காரணத்தைச் சிந்தித்து எழுதுக.

விடை

நல்ல ஒழுக்கங்களை வித்து எனக்கூறுவதின் காரணம் :

ஒரு விதையை விதைத்தோமானால் அது வளர்ந்து பல காய்கனிகளைத் தந்து பல தாவரங்களை உருவாக்குகிறது.

ஒழுக்கம் என்ற விதை

கல்வி

மரியாதை

பண்பு

கருணை

உயர்வு

முன்னேற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

 


கற்பவை கற்றபின் 

 

 

1. நாம் எந்தெந்த வகையில் பிறருக்கு உதவலாம் என்பது குறித்து நண்பர்களுடன் கலந்துரையாடுக.

விடை

மாணவன் 1 : என்னடா இங்கு தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறாய்?

மாணவன் 2 : என்னவென்று சொல்வது. இன்று என் அம்மா என்னை நன்றாகத் திட்டிவிட்டார்கள். அதனால் காலையில் சிற்றுண்டியே வேண்டாம் எனக் கூறிவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்து என்னைச் சமாதானப்படுத்திவிட்டு 3 அறிவுரையும் கூறினார்.

மாணவன் 1 : பிறகென்ன? அதுதான் சமாதானப்படுத்தி விட்டார்களே?

மாணவன் 2 : அதெல்லாம் சரிதான். அறிவுரை கூறினார்கள். அப்போது பிறருக்கு 5 உதவியாய் இல்லை என்றாலும் உபத்திரமாக இருக்காதே என்று கூறினார். அதைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டு உள்ளேன். எவ்வாறு பிறருக்கு உதவலாம் என எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டே உள்ளேன்.

மாணவன் 1 : நல்ல சிந்தனைதான். பிறருக்கு என்று கூறுவது நம் வீட்டில் உள்ள உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று மட்டும் இல்லை. பொது இடங்களில் உள்ள எவருக்கேனும் உதவி தேவைப்பட்டால் உதவி செய்ய வேண்டும்.

மாணவன் 2 : வீட்டில் என்ன உதவி செய்வது? அதுதான் அம்மா, அப்பாவே செய்து விடுகிறார்களே!

மாணவன் 1 : நீ செய்யாமல் இருப்பதால் அவர்களே செய்து விடுகிறார்கள். இனிமேல் நீ தினமும் காலையும் மாலையும் அம்மாவிற்கு உதவும் பொருட்டு கடைக்குச் செல்லுதல், வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகள் செய்தல், வாரம் ஒருமுறை புத்தகங்களை அடுக்கி வைத்தல், உன்னுடைய காலணி, காலுறைகளைத் தூய்மையாக்குதல், சன்னல், கதவுகளைத் துடைத்தல், அப்பாவின் இரு சக்கர வாகனத்தினைத் தூய்மை செய்தல் போன்றவை நம் வீட்டில் உள்ளவர்களுக்குச் செய்யும் வேலைகளாகும்.

மாணவன் 2 : இதையெல்லாம் நான் செய்ததே கிடையாது.

மாணவன் 1 : பொது இடங்களில் நீ பிறருக்கு உதவுதல் பற்றிக் கூறுகிறேன் கேள். பேருந்தில் பயணம் செய்யும்போது முதியோர், உடல் ஊனமுற்றோர், நோயாளி போன்றோர் இருக்கை இல்லாமல் நின்று கொண்டிருந்தால் அவர்களுக்கு இடம் கொடுப்பது, சாலையைக் கடக்க இயலாதவரைக் கையைப் பிடித்துக் கொண்டு சென்று சாலையைக் கடக்க உதவி செய்வது, வகுப்பில் சக மாணவர்களில் எவரேனும் மெல்லக் கற்போராக இருந்தாலும் அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்வது, அதாவது கணிதம் சொல்லித் தருவது, படிப்பதற்குச் சொல்லித் தருவது என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மாணவன் 2 : இதுவரை நான் இவ்வாறெல்லாம் நினைத்துக் கூட பார்த்ததில்லை. இனிமேல் வீட்டிலும் பொது இடங்களிலும் பிறருக்கு உதவியாக இருப்பேன். நன்றி கணேஷ்,

 

2. இந்தப் பாடலில் கூறப்படும் கருத்துக்களுக்குப் பொருத்தமான திருக்குறள் அதிகாரங்களின் தலைப்புகளைப் பட்டியலிடுக.

விடை

(i) செய்ந்நன்றியறிதல்

(ii) பொறையுடைமை

(iii) இனியவை கூறல்

(iv) இன்னா செய்யாமை

(v) கல்வி

(vi) ஒப்புரவு அறிதல்

(vii) அறிவுடைமை

(vii) நட்பு.

 

3. "கூடா நட்புக் கேடாய் முடியும்" என்னும் கருத்து அமைந்த கதை ஒன்று கூறுக.

விடை

வந்தவாசி கிராமத்தில் வசிக்கும் திவ்யா ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளுக்கு ஒரு தீய பழக்கமுடைய தோழி இருப்பதை அறிந்த திவ்யாவின் தாய், ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்துவிடும் எனவே அந்த நட்பைத் துண்டிக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

ஒருநாள் அவர் திவ்யாவை அழைத்தார். அவருடைய கையில் ஒரு பெரிய பெட்டியில் நிறைய மாம்பழங்கள் இருந்தன. அந்த பழங்களைக் கண்ட திவ்யாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தன. ஆர்வத்துடன் ஒரு பழத்தை எடுக்கப்போனவளிடம் தாய் தடுத்தார். அவற்றுள் நல்ல பழங்களாகத் தேர்ந்தெடுத்து இரண்டு கூடைகளில் வைக்கும்படி கூறினாள். அதன்படியே திவ்யா நல்ல பழங்களாகத் தெரிவு செய்து இரண்டு கூடைகளில் நிரப்பினாள். தாய் தனியே வைத்திருந்த ஓர் அழுகிய பழத்தை எடுத்தார். திவ்யா புரியாமல் பார்த்தாள். தாய் அந்த அழுகிய பழத்தை நல்ல பழங்கள் இருக்கும் ஒரு கூடையின் நடுவே வைத்தார்.

ஏம்மா நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீர்கள்?” என்றாள்.

எல்லாம் ஒரு காரணம்தான், இந்த இரண்டு கூடைகளையும் அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் வை. நான் சொல்லும் போது எடுத்து வா என்றார் தாய். அவளும் அப்படியே செய்தாள்.

சில நாட்களுக்குப் பின் திவ்யாவின் தாய் மறுபடியும் அழைத்தார். அந்தப் பழக் கூடைகளை எடுத்து வரச்சொன்னார். பழக் கூடைகளை எடுத்து வந்தாள். அழுகிய பழம் வைத்த கூடையில் இருந்த பழங்கள் எல்லாமே அழுகிப்போய் இருந்தன. மற்றக் கூடையில் இருந்த பழங்கள் பழுதடையாமல் அப்படியே இருந்தது. இதனைப் பார்த்த திவ்யா வருந்தினாள். நன்றாக இருந்த பழங்கள் கெட்டுப் போய்விட்டனவே என்று அவளுக்கு அழுகையே வந்து விட்டது.

தாய் அருகில் அமரவைத்து மெதுவாய்ச் சொன்னார்பார்த்தாயா? ஒரு அழுகிய மாம்பழம் ஒரு கூடை நல்ல பழங்களை அழுக வைத்துவிட்டது. தீய நட்பும் இப்படித்தான். கூடா நட்பு கேடாய் முடியும். எனவே நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. உண்மை நண்பர்கள் உங்களுடைய மகிழ்ச்சியின் போது காணாமல் போனாலும் உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள்.

Tags : by Peruvaen mulliyar | Term 2 Chapter 2 | 6th Tamil பெருவாயின் முள்ளியார் | பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal : Poem: AsaraKovai: Questions and Answers by Peruvaen mulliyar | Term 2 Chapter 2 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல் : கவிதைப்பேழை: ஆசாரக்கோவை: கேள்விகள் மற்றும் பதில்கள் - பெருவாயின் முள்ளியார் | பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்