Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | கவிதைப்பேழை: பாரதம் அன்றைய நாற்றங்கால்: கேள்விகள் மற்றும் பதில்கள்

தாராபாரதி | பருவம் 3 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பாரதம் அன்றைய நாற்றங்கால்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 3 Chapter 1 : Puthumaikal seium desamithu

   Posted On :  03.07.2023 05:44 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது

கவிதைப்பேழை: பாரதம் அன்றைய நாற்றங்கால்: கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது : கவிதைப்பேழை: பாரதம் அன்றைய நாற்றங்கால்: கேள்விகள் மற்றும் பதில்கள் - தாராபாரதி : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

) திருவாசகம்

) திருக்குறள்

) திரிகடுகம்

) திருப்பாவை

[விடை : ) திருக்குறள்]

 

2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்

) காவிரிக்கரை

) வைகைக்கரை

) கங்கைச்கரை

) யமுனைக்கரை

[விடை : ) காவிரிக்கரை]

 

3. கலைக்கூடமாகக் காட்சி தருவது

) சிற்பக்கூடம்

) ஓவியக்கூடம்

) பள்ளிக்கூடம்

) சிறைக்கூடம்

[விடை : ) சிற்பக்கூடம்]

 

4. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

) நூல்+ஆடை

) நூலா+டை

) நூல் + லாடை

) நூலா + ஆட

[விடை : ) நூல்+ஆடை]

 

5. எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

) எதிரலிக்க

) எதிர்ஒலிக்க

) எதிரொலிக்க

) எதிர்ரொலிக்க

[விடை : ) எதிரொலிக்க]

 

நயம் அறிக

1. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

விடை

எதுகை :

மெய்களை மெய்யுணர்வு

அன்னை அன்னிய

 

2. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

விடை

மோனை :

புதுமை பூமி

தெய்வ தேசம்

மெய்களை மெய்யுணர்வு

காளி காவிரி

கம்பனின் கங்கை

கன்னி காஷ்மீர்

புல்வெளி புன்னகை

கல்லை கட்டி

அன்னை அன்னிய அண்ணல் அறத்தின்

 

3. பாரதம் அன்றைய தாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

விடை

 

குறுவினா

1. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை

தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்கள் :

(i) திருவள்ளுவர்

(ii) காளிதாசர்

(iii) கம்பர்.

 

2. இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.

விடை

இந்தியாவின் மேற்குத் திசையில் தோன்றுகின்ற நதிகள் அனைத்தும் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.

 

சிந்தனை வினா

நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.

விடை

நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை :

(i) இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் மன்னர்கள் என்றும் நாட்டைத் தாங்கும் தூண்கள் என்றும் கூறிக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? போதாது. அதனை மெய்ப்படுத்த மாணவ சமுதாயம் முன்வர வேண்டும்.

(ii) ஆம் இந்தியாவின் வளர்ச்சியே மாணவர்களின் கையில்தான் உள்ளது. மாண்+ அவன் = மாணவன். மாண் என்றால் பெருமை. அதனால்தான் மாண்+அவர்கள் என்று இந்தப் பருவத்தினரை ஊக்கப்படுத்தி வருகின்றனர். மாணவர்களின் ஊக்கத்தில் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது.

(iii) மண்ணைக் குழைத்தால்தான் நாம் விரும்பிய வண்ணம் மட்பாண்டங்கள் செய்யவியலும். கல்லை உளியால் செதுக்கினால்தான் அழகான சிலை உருவாகும். அவற்றை போல மாணவர்ளைச் செம்மைப்படுத்தினால்தான் நம் நாடு வளரும்.

(iv) பூகோளப் பாடத்தில் இந்திய வரைபடம் வரையும் போது எந்த மாநிலங்களில் எந்தெந்த நதிகள் பாய்கின்றன? அவற்றிலிருந்து பிரியும் கிளை நதிகள் யாவை? அவற்றால் பயனடையும் நிலப்பரப்பு அளவு யாது? நம் நாட்டில் விளையும் பயிர்கள் யாவை? போன்ற விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். மாணவப் பருவத்தில் இவற்றையெல்லாம் அறிந்தால்தான் எதிர்காலத்தில் நாட்டைப் பற்றிய விழிப்புணர்வு அவனிடத்தில் தோன்றும்.

(v) ஒவ்வொரு மாணவனும், படித்த இளைஞனும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் முதலில் தன்னுடைய குடும்பத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதற்குப் பாடுபட வேண்டும். நாட்டை நல்வழிப்படுத்தவும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தவும் மாணவர்களின் மகத்தான பொறுப்பே முதலிடத்தில் உள்ளது.

(vi) படித்துவிட்டோம், வேலைக்குப் போகிறோம், வருவாயைப் பெற்றோரிடம் கொடுத்தோம் என்று இல்லாமல் பெற்றோருக்கு உதவுதல், வீட்டு வேலைகளைச் செய்தல், கிராமப்புற இளைஞர்கள் காலை, மாலை வேளைகளில் வயலுக்குச் சென்று தந்தைக்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்யலாம். ஒவ்வொரு மாணவனும் இதைக் கடைப்பிடித்தால் நாடு கண்டிப்பாக முன்னேறும்.

(vii) மனிதநேயம் வளர மாணவர்கள் பாடுபடுதல் அவசியம். சமூகத் தொண்டுகளில் பெயருக்காகவும், புகழுக்காகவும் இல்லாமல் ஆர்வத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் செயல்பட வேண்டும். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 


கற்பவை கற்றபின்



1. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை இசையோடு பாடுக.

 

2. நாட்டு முன்னேற்றத்தில் நம் பங்கு என்னும் தலைப்பில் பேசுக.

விடை

(i) இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்பது போல இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாய்த் திகழ்வது நம்மைப் போன்ற மாணவர்கள்தாம். * நாம் நமது சக்தியை நல்வழியில் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். நாம் பெற்றோர் கூறுவதனையும், ஆசிரியர் கூறுவதனையும் கேட்டு செயலாற்ற வேண்டும்.

(ii) நம்மைப் போன்ற மாணவர்கள் முயன்றால் எதிர்கால வரலாற்றையே சிறப்பாக மாற்றலாம். மாணவர்கள் இளம்வயதிலேயே பொதுத்தொண்டு செய்வதைப் பற்றி அறிய வேண்டும் என்பதற்காகவே பள்ளிகளில் சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி இயக்கம் ஆகிய இயக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்புகளில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இத்தொண்டு பதிலுதவி பாராத் தொண்டாக இருக்க வேண்டும்.

(iii) பொதுத்தொண்டு செய்ய முனையும் மாணவர்கள் தன்னலமற்றவராக இருத்தல் வேண்டும். ஆடம்பர வாழ்க்கையை எதிர்ப்பவராகவும் இருக்க வேண்டும். அடக்கத்துடன் இருக்க வேண்டும். ஏமாற்றம் ஏற்பட்டால் சகித்துக் கொள்பவராய் இருக்க வேண்டும். அளவற்ற பொறுமையுடனும், கீழ்ப்படியும் பண்புடனும் இருத்தல் அவசியம் ஆகும்.

(iv) அப்துல்கலாம் கூறியதைப் போல் வானம்தான் எல்லை, நான் பறந்து கொண்டே இருப்பேன்என்பதைப் போல் நம்முடைய வாழ்வில் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மையை நீக்கி திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

(v) ஆபத்துக் காலங்களில் மட்டும்தான் உதவி செய்ய வேண்டும் என்று இருக்கக்கூடாது. எந்நிலையிலும் பிறர் துயர் களைய நாம் உதவ வேண்டும். சாலை விபத்துகளில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்புதல், அவருடைய உறவினர்க்குத் தகவல் அனுப்புதல், தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்களின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்டவர்க்கு உதவுதல் போன்ற பணிகளைச் செய்யலாம்.

(vi) சுத்தமான குடிநீர், நல்ல உணவு போன்றவை ஏழை, எளியவர்களுக்குக் கிடைக்கும் வகையில் செயல்படும் எண்ணம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். சுகாதாரமற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான அவசியத்தைத் தெளிவுப்படுத்த வேண்டும். டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் வராமல் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

(vii) குளம், குட்டைகளை ஆழப்படுத்துதல், மரங்களை வெட்டாமல் பாதுகாத்தல், புதியதாக மரக்கன்றுகள் நடுதல், அனைத்து இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைக் கட்டுதல், – சுற்றுச்சூழல் பாதுகாத்தல் போன்றவை தற்கால தேவையாக உள்ளன. இவற்றை மாணவர்கள் நல்ல முறையில் செய்ய வேண்டும்.

(viii) விழாக்காலங்களில் பொது இடங்களில் மக்கள் செல்வதற்கு வரிசையை ஒழுங்குப்படுத்துதல், போக்குவரத்துக் காவலர்களுக்கு உதவுதல் போன்ற பணிகளையும் செய்யலாம்.

(ix) “துறவும் தொண்டும்தான் இந்தியாவின் இலட்சியங்கள் அந்த இருவழிகளில் நாட்டைச் செலுத்தினால் மற்றவை தாமாக சரியாகிவிடும்என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இவ்விரு வழிகளில் மாணவர்கள் தொண்டு செய்து நாடு வளம் பெற வழி செய்ய வேண்டும்.

Tags : by TaraBharathi | Term 3 Chapter 1 | 6th Tamil தாராபாரதி | பருவம் 3 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 3 Chapter 1 : Puthumaikal seium desamithu : Poem: Bharatham antraiya natrankal: Questions and Answers by TaraBharathi | Term 3 Chapter 1 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது : கவிதைப்பேழை: பாரதம் அன்றைய நாற்றங்கால்: கேள்விகள் மற்றும் பதில்கள் - தாராபாரதி | பருவம் 3 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது