Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | கவிதைப்பேழை: எதனாலே, எதனாலே?: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: எதனாலே, எதனாலே?: கேள்விகள் மற்றும் பதில்கள் | 5th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal tholilnuppam

   Posted On :  21.07.2023 09:14 pm

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம்

கவிதைப்பேழை: எதனாலே, எதனாலே?: கேள்விகள் மற்றும் பதில்கள்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம் : கவிதைப்பேழை: எதனாலே, எதனாலே?: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 

. பொருத்துக

1. விண்மீன் உதிரும்

2. ரோஜாப்பூ பறக்கும்

3. மேகம் ஒளிரும்

4. இலை சிவக்கும்

5. பறவை கறுத்திருக்கும்

விடை :

1. விண்மீன் ஒளிரும்

2. ரோஜாப்பூ சிவக்கும்

3. மேகம் கறுத்திருக்கும்

4. இலை உதிரும்

5. பறவை பறக்கும்

 

. வினாக்களுக்கு விடையளிக்க.

1. வானவில் எப்படி தோன்றுகிறது?

விடை

வானில் உள்ள நீர்த்துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும் போது, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானவில் தோன்றுகிறது.

 

2. கடலில் ஏன் அலைகள் உண்டாகின்றன?

விடை

பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன.

 

. சிந்தனை வினா

நாம் வாழும் பூமி, சுழன்று கொண்டேயிருக்கிறது. ஆனால், அதில் வாழும் நாம் சுழல்வதில்லை. ஏன்? விடை காண்போமா?

விடை

(i) நாமும், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் (பெருங்கடல்கள் மற்றும் காற்று மண்டலம் உட்பட) பூமியுடனேயே சேர்ந்து, பூமி சுழலும் அதே வேகத்திலேயே சுழல்வதால், நமது சுழற்சியை நாம் உணர்வதில்லை.

(ii) நாம் ஒரு காரில் வேகமாகச் செல்லும் போது, நாம் நமது இருக்கையிலிருந்து நகர்கிறோமா? பூமி சட்டென்று சுழல்வதை நிறுத்தினால் மட்டுமே, நம்மால் அதை உணர முடியும். ஆனால் அது முடியாத செயல்.

 

அறிந்து கொள்வோமா?

மோட்டார் வண்டி உருவான கதை

தந்தையுடன் சிறுவன் ஒருவன் தெருவில் சென்று கொண்டிருந்தான். எதிரில், ஒரு வண்டி மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. அந்த வண்டியை மாடும் இழுக்கவில்லை; குதிரையும் இழுக்கவில்லை. அதைப் பார்த்த சிறுவனுக்கு வியப்பு ஏற்பட்டது. அப்பாவிடம் அதைப் பற்றிக் கூறினான். அதுமட்டுமின்றி, அந்த வண்டியோட்டியிடமும் சென்று வண்டியைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டான். அந்த வண்டியின் பெயர் ரோடு - என்ஜின் எனவும் அது, நீராவியால் ஓடுகிறது எனவும் அறிந்துகொண்டான். அன்றே அந்தச் சிறுவனுக்கு ஓர் ஆசை உண்டாயிற்று. மனிதர்களை ஓட்டிச் செல்லக்கூடிய வண்டிகளைச் செய்து, அவை மிக வேகமாக ஓடுமாறு செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

பெரியவனானதும் ஓர் இயந்திரத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான். பகலில் அங்கு வேலை செய்வான். இரவில், வேகமாக ஓடும் வண்டியை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிடுவான். பல நாள் செய்த முயற்சி ஒரு நாள் வெற்றி பெற்றது. ஆம். 1983இல் மோட்டார் வண்டி கண்டுபிடிக்கப்பட்டது. அன்று மோட்டார் வண்டியைக் கண்டுபிடிக்க அயராது முயற்சி செய்து வெற்றி கண்ட அந்தச் சிறுவன்தான், அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி போர்ட் என்பவர். தாமே சொந்தமாக மோட்டார் தொழிற்சாலையொன்றை நிறுவி, ஆயிரக்கணக்கான மோட்டார்களை உருவாக்கினார். 'மோட்டார் மன்னன்' என்று உலகமே அவரைப் புகழ்ந்தது. அவருடைய தொழிற்சாலையில் உருவான மோட்டார் கார்கள் உலகப் புகழ் பெற்றன.

இளம் வயதிலிருந்தே புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என எண்ணும் எண்ணத்தை நாம் வளர்த்துக்கொண்டால், முடியாததனையும் முடித்துக்காட்டலாம். விடாமுயற்சியும் கடின உழைப்பும் நம்மை மென்மேலும் உயர்த்தும்.

 


கற்பவை கற்றபின்



பாடலைப் புரிந்துகொண்டு பாடுக.

அறிவியல் சிந்தனையைத் தூண்டும் வினாக்களுக்கு விடை அறிந்துகொள்க,

பாடலில் உள்ளதுபோல், வேறு சில வினாக்களுக்குரிய விடைகளை அறிய முயல்க.

Tags : Term 2 Chapter 1 | 5th Tamil பருவம் 2 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal tholilnuppam : Poem: Ethanalae, ethanalae: Questions and Answers Term 2 Chapter 1 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம் : கவிதைப்பேழை: எதனாலே, எதனாலே?: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல், தொழில்நுட்பம்