Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு: கேள்விகள் மற்றும் பதில்கள்

குமரகுருபரர் | இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila

   Posted On :  12.07.2023 03:24 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில

கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு: கேள்விகள் மற்றும் பதில்கள் - குமரகுருபரர் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கற்றவருக்கு அழகு தருவது.

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வைரம்

ஈ) கல்வி

[விடை : ஈ) கல்வி]

 

2. 'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கலன் + லல்லால்

ஆ) கலம் + அல்லால்

இ) கலன் + அல்லால்

ஈ) கலன் + னல்லால்

[விடை : இ) கலன் + அல்லால்]

 

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. அழகு - கல்வியே உண்மையான அழகு.

2. கற்றவர் - கல்வி கற்றவரே உலகில் உயர்ந்தவர்.

3. அணிகலன் - மனிதனுக்கு உண்மையான அணிகலன் கல்வி ஆகும்.

 

குறுவினா

யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

விடை

கல்வி கற்றவருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை.

 

சிறுவினா

நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

விடை

ஒளிவீசும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு மேலும் அழகுபடுத்த வேறு அணிகலன்கள் தேவையில்லை.

அதுபோலக் கல்வி கற்றவருக்கு அக்கல்வியே அழகு தரும்.

அதனால் அழகுபடுத்தும் அணிகலன்கள் கற்றவருக்குத் தேவையில்லை.

 

சிந்தனை வினா

கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

விடை

நம்முள் புதைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும்.

பகுத்து அறியும் அறிவைத் தரும்.

துன்பம் வரும் முன் தடுத்து நிறுத்தும் அறிவைத் தரும்.

மெய்ப்பொருள் காணும் அறிவினைத் தரும்.

 

கற்பவை கற்றபின்

 

 

1. கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.

விடை

கல்வி கரையில கற்பவர் நாள் சில.

கல்வி அழகே அழகு.

கத்த (கற்ற) வித்த(வித்தை) காலத்துக்கு உதவும்.

நூறு நாள் கத்தது (கற்றது), ஆறு நாள் விடப்போகும்.

கற்க கசடற.

இளமையில் கல்.

நூல் பல கல்.

 

2. கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம்பெற்ற பாடல்களைத் தொகுத்து எழுதுக.

விடை

கண்ணுடையோர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு

புண்ணுடையார் கல்லா தவர். திருக்குறள்

 

நிறைகுடம் நீர்தளும்பல் இல். பழமொழி

 

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கில்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னர்க்கு

தன்தேச மல்லால் சிறப்பில்லை

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. மூதுரை

 

3. பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.

கல்வி கரையில கற்பவர் நாள்சில

மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து

Tags : by Kumarakurubarar | Chapter 4 | 8th Tamil குமரகுருபரர் | இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila : Poem: Kalvi azhage azhagu: Questions and Answers by Kumarakurubarar | Chapter 4 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : கவிதைப்பேழை: கல்வி அழகே அழகு: கேள்விகள் மற்றும் பதில்கள் - குமரகுருபரர் | இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில