Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: மழைச்சோறு: கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: மழைச்சோறு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam

   Posted On :  15.07.2023 03:56 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்

கவிதைப்பேழை: மழைச்சோறு: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : கவிதைப்பேழை: மழைச்சோறு: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக.

1. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள்

அ) பெருமழை

இ) எடைமிகுந்த மழை

ஆ) சிறு மழை

ஈ) எடை குறைந்த மழை

[விடை : அ) பெருமழை]

 

2. 'வாசலெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வாசல் + எல்லாம்

இ) வாசம் + எல்லாம்

ஆ) வாசல் + எலாம்

ஈ) வாசு + எல்லாம்

[விடை : அ) வாசல் + எல்லாம்]

 

3. 'பெற்றெடுத்தோம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பெறு + எடுத்தோம்

இ) பெற்ற + எடுத்தோம்

ஆ) பேறு + எடுத்தோம்

ஈ) பெற்று + எடுத்தோம்.

[விடை : ஈ) பெற்று + எடுத்தோம்]

 

4. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

ஆ) காலிறங்கி

அ) கால்லிறங்கி

இ) கால் இறங்கி

ஈ) கால்றங்கி

[விடை : ஆ) காலிறங்கி]

 

குறுவினா

1. மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறுப்படுகிறது?

விடை

(i) கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது. பெற்றெடுத்த குழந்தைகளின் பசியைத் தீர்க்க முடியவில்லை .

(ii) கலப்பை பிடிப்பவரின் கை சோர்ந்து விட்டது, ஏற்றம் இறைப்பவரின் மனம் தவிக்கிறது என்றும் இதற்குக் காரணம் மழை இல்லாமையே இன்று உழவர் வேதனைப் படுகின்றனர்.

 

2. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

விடை

மழை இல்லாததால் உழவுத் தொழில் செய்ய முடியவில்லை. எனவே மக்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர்.

 

சிறுவினா

1. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?

விடை

வாளியில் கரைத்த மாவால் வாசலில் கோலம் போட்டனர்.

இந்தக் கோலத்தைக் கரைக்க மழை வரவில்லை !

பானையில் மாவைக் கரைத்து, பாதை எல்லாம் கோலம் போட்டனர்.

அந்தக் கோலம் கரைக்கவும் மழை வரவில்லை.

 

2. மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.

விடை

கல் இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை பெய்யவில்லை.

முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை .

கருவேலங்காடும் மழையில்லாமல் பூக்கவில்லை.

மழை இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை.

 

3. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?

விடை

மழைச் சோறு எடுத்தபின், பேய் மழையாக ஊசிபோல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது.

சிட்டுப் போல மின்னி மின்னி ஊரெங்கும் பெய்கிறது.

ஊரெங்கும் செல்ல மழை பெய்கிறது.

 

சிந்தனை வினா

மழைவளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை?

விடை

மழை வளம் பெருக அதிகப்படியான மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மரங்களை நட்டால் மட்டும் போதாது. அதனை நன்கு பராமரிக்க வேண்டும். எங்காவது மரங்கள் வெட்டப்படும் போது, அதனைத் தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டி கட்டாயம் வைக்க வேண்டும். மழை பெய்யும் காலங்களுக்கு முன் குளங்கள் குட்டைகளை தூர்வார வேண்டும்.

 

கற்பவை கற்றபின்

 

உங்கள் பகுதியில் பாடப்படும் மழை தொடர்பான நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து எழுதுக.

விடை

பாடல் 1

ஆத்தா மகமாயி வந்திடம்மா

ஆத்தா மகமாயி வந்திடம்மா

உனக்கு எத்தனையோ பூச செஞ்சோம்

உனக்கு எத்தனையோ பூச செஞ்சோம்

வாம்மா வாம்மா வந்து மழைய குடும்மா

குடும்மா கருத்தம்மா

பசி வயிறு புடுங்கு தம்மா

மழை பெய்யச் சொல்லம்மா

மழை பெய்யச் சொல்லம்மா

 

பாடல் 2

மழையப்பா மழையப்பா

கொஞ்சம் வாப்பா

இத்தனை நாள் வயல்

காணாதது போதாதா?

என்ன அப்பா கோபம்

மகன்கள் பண்ண

தப்ப மன்னிக்க மாட்டியா?

மன்னிச்சு வாப்பா

மானங்காக்க வாப்பா

மனமிரங்கி வாப்பா

மழையப்பா மழையப்பா

Tags : Chapter 6 | 8th Tamil இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam : Poem: Mazhai soru: Questions and Answers Chapter 6 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : கவிதைப்பேழை: மழைச்சோறு: கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்