Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: நோயும் மருந்தும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

நீலகேசிப் பாடல் | இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: நோயும் மருந்தும்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 3 : Udalai Ombhomin

   Posted On :  11.07.2023 03:11 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின்

கவிதைப்பேழை: நோயும் மருந்தும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் : கவிதைப்பேழை: நோயும் மருந்தும்: கேள்விகள் மற்றும் பதில்கள் - நீலகேசிப் பாடல் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உடல்நலம் என்பது --------- இல்லாமல் வாழ்தல் ஆகும்.

அ) அணி

ஆ) பணி

இ) பிணி

ஈ) மணி

[விடை : இ) பிணி]

 

2. நீலகேசி கூறும் நோயின் வகைகள்

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

[விடை : ஆ) மூன்று]

 

3. 'இவையுண்டார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இ + யுண்டார்

ஆ) இவ் + உண்டார்

இ) இவை + உண்டார்

ஈ) இவை + யுண்டார்

[விடை : இ) இவை + உண்டார்]

 

4. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) தாம்இனி

ஆ) தாம்மினி

இ) தாமினி

ஈ) தாமனி

[விடை : இ) தாமினி]

 

குறுவினா

1. நோயின் மூன்று வகைகள் யாவை?

விடை

மருந்தினால் நீங்கும் நோய்.

எதனாலும் தீராத தன்மையுடைய நோய் மற்றொரு வகை.

வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய்.

 

2. நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?

விடை

நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாக நீலகேசி கூறுகின்றது.

 

சிறுவினா

நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?

விடை

ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக.

மருந்தினால் நீங்கும் நோய்.

எதனாலும் தீராத தன்மையுடைய நோய் மற்றொரு வகை.

வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய்.

அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும்.

இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள்.

இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

 

சிந்தனை வினா

துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ளவேண்டிய நற்பண்புகள் யாவை?

விடை

தருமம் செய்தல், கோபத்தைத் தணித்தல், முயற்சி செய்தல், கல்வி கற்றல், உலக நடையை அறிந்து நடத்தல், நல்ல நூல்களைப் படித்தல், பொறாமை படாமல் இருத்தல், பொய்சாட்சி சொல்லாமல் இருத்தல், இனிமையாகப் பேசுதல், பேராசையைத் தவிர்த்தல், நட்புடன் பழகுதல், பெரியோர்களை மதித்தல், ஒழுக்கம் தவறாமல் இருத்தல், நன்றியை மறவாமல் இருத்தல், காலத்தைக் கடைபிடித்தல், களவு செய்யாதிருத்தல், இழிவானதைச் செய்யாதிருத்தல், இரக்கம் கொள்ளுதல், பொய் சொல்லாதிருத்தல், ஆணவம் கொள்ளாதிருத்தல், சுறுசுறுப்புடன் இருத்தல், உடற்பயிற்சி செய்தல், அதிகாலையில் எழுந்திருத்தல் போன்றவை கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் ஆகும்.

 


கற்பவை கற்றபின்



ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆகியவற்றின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.

விடை

ஐம்பெருங்காப்பியங்கள்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

சீவகசிந்தாமணி

வளையாபதி

குண்டலகேசி

ஐஞ்சிறுகாப்பியங்கள்

சூளாமணி

நீலகேசி

உதயண குமார காவியம்

யசோதர காவியம்

நாககுமார காவியம்

Tags : by Neelakasi padal | Chapter 3 | 8th Tamil நீலகேசிப் பாடல் | இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 3 : Udalai Ombhomin : Poem: Noyum marundhum: Questions and Answers by Neelakasi padal | Chapter 3 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் : கவிதைப்பேழை: நோயும் மருந்தும்: கேள்விகள் மற்றும் பதில்கள் - நீலகேசிப் பாடல் | இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின்