Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: ஒன்றே குலம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

திருமூலர் | இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஒன்றே குலம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam

   Posted On :  16.07.2023 10:20 pm

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

கவிதைப்பேழை: ஒன்றே குலம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : கவிதைப்பேழை: ஒன்றே குலம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - திருமூலர் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ……………… க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

அ) புலனை

ஆ) அறனை

இ) நமனை

ஈ) பலனை

[விடை : இ) நமனை]

 

2. ஒன்றே -------- என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.

அ) குலம்

ஆ) குளம்

இ) குணம்

ஈ) குடம்

[விடை : அ) குலம்]

 

3. நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………

அ) நம் + இல்லை

ஆ) நமது + இல்லை

இ) நமன் + நில்லை

ஈ) நமன் + இல்லை

[விடை : ஈ) நமன் + இல்லை]

 

4. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………

அ) நம்பரங்கு

ஆ) நம்மார்க்கு

இ) நம்பர்க்கங்கு

ஈ) நம்பங்கு

[விடை : இ) நம்பர்க்கங்கு]

 

குறுவினா

1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?

விடை

மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை .

 

2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்யவேண்டியது யாது?"

விடை

உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின், “மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர், “உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே என்ற இக்கருத்துகளை மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைவிட வேறு நல்வழி இல்லை என்று நினைத்து ஈடேற வேண்டும்.

 

சிறுவினா

மக்களுக்குச் செய்யவேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?

விடை

மக்களுக்குச் செய்யவேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவன :

படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால், அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

 

சிந்தனை வினா

அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்?

விடை

அன்றாட வாழ்வில் நாம் பிறருக்குச் செய்யும் உதவிகள் :

மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறருக்கு உதவி செய்யும் போது பயனை எதிர்பார்க்காமல் உதவி செய்ய வேண்டும். நாம் வெளியில் செல்லும் போது நம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது தேவையா என்று கேட்டு அவர்களின் தேவையை நிறைவேற்றலாம்.

வீட்டில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அவர்கள் கூறும் சிறு வேலைகளைச் செய்து அவர்களின் வேலைச் சுமையைக் குறைக்கலாம். பள்ளியில் உடன் பயிலும் மாணவர்களுக்குப் புத்தகம், குறிப்பேடு, எழுதுகோல் போன்றவை தேவையேற்படின் கொடுத்து உதவலாம். பள்ளிக் கட்டணம் கட்ட இயலாத மாணவர்கள் இருந்தால் பெற்றோரிடம் கேட்டு பணம் கட்டலாம்.

படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்யலாம். சாலைகளில் நடந்து செல்லும்போது, மாற்றுத் திறனாளிகளைக் கண்டால், அவர்களுக்கு உதவலாம். இவ்வாறு நம்மைச் சுற்றியுள்ளவர்களின் சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்றலாம்.

 


கற்பவை கற்றபின்

 

பிறர் துன்பம் கண்டு வருந்தி அவர்களுக்குத் தொண்டுசெய்த சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.

விடை

1. வள்ளலார்

2. புத்தர்

3. விவேகானந்தர்

4. அன்னை தெரசா

5. திரு.வி.க.

6. பண்டித ரமாபாய்

7. நாராயண குரு

8. ரமணமகரிஷி

9. குருநானக்

 

Tags : by Thirumoolar | Chapter 8 | 8th Tamil திருமூலர் | இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam : Poem: Ondre kulam: Questions and Answers by Thirumoolar | Chapter 8 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : கவிதைப்பேழை: ஒன்றே குலம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - திருமூலர் | இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்