Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: படை வேழம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

செயங்கொண்டார் | கலிங்கத்துப்பரணி | இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: படை வேழம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu

   Posted On :  15.07.2023 07:38 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு

கவிதைப்பேழை: படை வேழம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : கவிதைப்பேழை: படை வேழம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - செயங்கொண்டார் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சிங்கம் ----------- யில் வாழும்.

அ) மாயை

ஆ) ஊழி

இ) முழை

ஈ) அலை

[விடை : இ) முழை]

 

2. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு.

அ) வீரம்

ஆ) அச்சம்

இ) நாணம்

ஈ) மகிழ்ச்சி

[விடை : ஆ) அச்சம்]

 

3. 'வெங்கரி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வெம் + கரி

ஆ) வெம்மை + கரி

இ) வெண் + கரி

ஈ) வெங் + கரி

[விடை : ஆ) வெம்மை + கரி]

 

4. 'என்றிருள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ) என் + இருள்

ஆ) எட்டு + இருள்

இ) என்ற + இருள்

ஈ) என்று + இருள்

[விடை : ஆ) எட்டு + இருள்]

 

5. போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) போன்றன

ஆ) போலன்றன

இ) போலுன்றன

ஈ) போல்உடன்றன

[விடை : இ) போலுன்றன]

 

குறுவினா

1. சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்?

விடை

தங்கள் உயிரைப் பறிக்க வந்த எமனோ என்று சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் நடுங்கினர்.

 

2. கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?

விடை

கலிங்க வீரர்கள் தம்மை அழிக்க வந்த தீயோ என்று அஞ்சி ஓடினர்.தங்கள் உயிரைப் பறிக்க வந்த எமனோ என்று சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் நடுங்கினர்.

 

3. சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை?

விடை

படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர்.

கடலில் தாவிக் குதித்துத் தப்பினர்.

யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர்.

எந்தத் திசையில் செல்வது என்று தெரியாமல் மலைக் குகை மற்றும் புதருக்குள் தப்பி ஒளிந்து கொண்டனர்.

 

சிறுவினா

சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப் படை வீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?

விடை

கலிங்க வீரர்கள் இது என்ன மாய வித்தையா என்று வியந்தனர். தம்மை அழிக்க வந்த தீயோ? உயிரைப் பறிக்க வந்த எமனோ? என்று அஞ்சினர்.

படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். யானைகள் பின்னே மறைந்து கொண்டனர்.

எந்தத் திசையில் செல்வது எனத் தெரியாமல், மலைக் குகை மற்றும் புதர்களில் ஓடி ஒளிந்தனர்.

ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தன்னுடைய நிழலைக் கூட எதிரிகள் துரத்தி வருவதாக எண்ணிப் பயந்தனர்.

யானை பிளிறியதைக்கேட்டு பயந்த வீரர்கள் குகைக்குள் சென்று மறைந்தனர். புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.

 

சிந்தனை வினா

ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை எவை எனக் கருதுகிறீர்கள்?

விடை

ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இயற்கையாக அமைந்த அரண்களும்,

நான்கு திசைகளின் எல்லைகளில் பாதுகாப்புப் படை வீரர்களும்,

வேறுபட்ட சிந்தனை கொண்ட படைத் தலைவர்களும்,

திறமையான படை வீரர்களும் தேவை எனக் கருதுகிறேன்.

 


கற்பவை கற்றபின்

 

1. உங்களுக்குத் தெரிந்த சிற்றிலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.

விடை

பரணி

கலம்பகம்

அந்தாதி

பள்ளு

கோவை

பிள்ளைத்தமிழ்

சதகம்

குறவஞ்சி

தூது

 

2. போர்க்கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.

விடை


Tags : by Ceyankontar | Kalingathuparani | Chapter 7 | 8th Tamil செயங்கொண்டார் | கலிங்கத்துப்பரணி | இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu : Poem: Padai vealam: Questions and Answers by Ceyankontar | Kalingathuparani | Chapter 7 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : கவிதைப்பேழை: படை வேழம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - செயங்கொண்டார் | கலிங்கத்துப்பரணி | இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு