Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: திருக்கேதாரம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

சுந்தரர் | இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: திருக்கேதாரம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu

   Posted On :  15.07.2023 01:31 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது

கவிதைப்பேழை: திருக்கேதாரம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : கவிதைப்பேழை: திருக்கேதாரம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - சுந்தரர் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காட்டிலிருந்து வந்த ---------- கரும்பைத் தின்றன.

அ) முகில்கள்

ஆ) முழவுகள்

இ) வேழங்கள்

ஈ) வேய்கள்

[விடை : இ) வேழங்கள்]

 

2. 'களகச்சுனை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ) கனகச் + சுனை

ஆ) கனக + சுனை

இ) கனகம் + சுனை

ஈ) கனம் + சுனை

[விடை : இ) கனகம் + சுனை]

 

3. முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) முழவுதிர

ஆ) முழவுதிரை

இ) முழவதிர

ஈ) முழவுஅதிர

[விடை : இ) முழவதிர]

 

குறுவினா

தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

விடை

புல்லாங்குழல் மற்றும் முழவு ஆகியவற்றைத் தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக் கருவிகளாகச் சுந்தரர் கூறுகின்றார்.

 

சிறுவினா

திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

விடை

பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது, அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆன புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.

கண்களுக்கு இனிய குளிர்ச்சிதரும் ஒளியை உடைய பொன் வண்ண நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த் திவலைகளை வாரி இறைக்கும்.

நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மத யானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது தோன்றும் கிண் என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.

இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் என்று சுந்தரர் வருணனை செய்கிறார்.

 

சிந்தனை வினா

விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.

விடை

திருவிழாக் கூட்டத்தில் இரைச்சலைக் குறைக்கவும், திருவிழா நிகழ்வு நடக்கப் போகிறது என்பதை அறிவிக்கவும், இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அந்த உயிர்களைப் படைத்த இறைவன் இசையை விரும்புவான். அதனால் விழாக்களின்போது இசைக்கருவிகள் இசைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

இசைக்கருவிகளை இசைக்கும் போது உணர்ச்சிப் பெருக்கும், பக்திப்பெருக்கும் ஏற்படுவதாலும் விழாக்களின் போது இசைக் கருவிகளை இசைக்கும் வழக்கம் தோன்றியிருக்கும்.

 

கற்பவை கற்றபின்

 

 

தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டுக.

விடை

திருஞானசம்பந்தர் :

இயற்பெயர் ஆளுடைய பிள்ளை

பெற்றோர் சிவபாத இருதயர், பகவதி அம்மையார்.

ஊர் சீர்காழி

தேவாரத்தின் முதல் நூலைப் பாடியவர். பன்னிரு திருமுறைகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் திருமுறை இவர் பாடியவை.

சிறு வயதில் மூன்று வயதுவரை பேசாதிருந்தார். உமையம்மை கொடுத்த ஞானப்பாலை உண்ணும்போது தோடுடைய செவியன் எனும் முதல் பாடலைப் பாடினார்.

திருநாவுக்கரசர் :

இயற்பெயர் மருள்நீக்கியார்

சிறப்புப் பெயர்கள் திருநாவுக்கரசர், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர்

பெற்றோர் புகழனார், மாதினியார்.

தமக்கை திலகவதியார்

பிறந்த ஊர் திருவாமூர்

இவர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் 4, 5, 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சுந்தரர் :

பிறந்த ஊர் திருநாவலூர்

பெற்றோர் சடையனார், இசைஞானியார்.

இயற்பெயர் நம்பியாரூரர்

சிறப்புப் பெயர்கள் வன்தொண்டர், தம்பிரான் தோழர்.

இவருடைய பாடல்கள் ஏழாம் திருமுறையாகப் பன்னிரு திருமுறைகளுள் வைக்கப் பட்டுள்ளன.

Tags : by Sundarar | Chapter 5 | 8th Tamil சுந்தரர் | இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu : Poem: Thirukadharam: Questions and Answers by Sundarar | Chapter 5 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : கவிதைப்பேழை: திருக்கேதாரம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - சுந்தரர் | இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது