Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | பாடல் : உழவுப் பொங்கல் - நாமக்கல் வெ. இராமலிங்கனார்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - பாடல் : உழவுப் பொங்கல் - நாமக்கல் வெ. இராமலிங்கனார்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 5th Tamil : Term 2 Chapter 3 : Tholil, vanigam

   Posted On :  22.07.2023 02:20 am

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்

பாடல் : உழவுப் பொங்கல் - நாமக்கல் வெ. இராமலிங்கனார்: கேள்விகள் மற்றும் பதில்கள்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் : பாடல் : உழவுப் பொங்கல் - நாமக்கல் வெ. இராமலிங்கனார்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 

. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. வையகம் என்பதன் பொருள்

) ஊர்

) வயல்

) உலகம்

) கிராமம்

[விடை : ) உலகம்]

 

2. நலனெல்லாம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

) நலன் + எல்லாம்

) நல + னெல்லாம்

) நலன் + னெல்லாம்

) நலம் + எல்லாம்

[விடை : ) நலன் + எல்லாம்]

 

3. நிறைந்தரம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

) நிறைந்து + அறம்

) நிறைந்த + அறம்

) நிறை + அறம்

) நிறை + தறம்

[விடை : ) நிறைந்து + அறம்]

 

4. 'இன்பம்' - இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்

) மகிழ்ச்சி

) களிப்பு

) கவலை

) துன்பம்

[விடை : ) துன்பம்]

 

. பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எழுதுக.

விடை

பொங்குகவே  உணவுதரும்  உணர்ந்திடுவோம்

தங்குகவே    அணியவரும்   துணிந்திடுவோம்

 

. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.

விடை

பொங்குக தங்குகவே  உணவு  பழகும்

பொங்கல்  எங்கணும்  பணமும்  உழவு

பொங்குகவே  தங்கமும்

 

. பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

விடை

பொங்குக  பொங்கல்  பொங்குகவே

உணவு  உயிரோடிருப்பது  உழவு உடையும்

பழகும் பயிர்தொழில்

 

. வினாக்களுக்கு விடையளிக்க.

1. உழவுத்தொழிலால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?

விடை

(i) எங்கும் யாவரும் இன்பமாய் வாழ்வதற்கு உழவுத்தொழில் பயன்படுகிறது.

(ii) பயிர்கள் விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உடையும் தரும்.

 

2. அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் எது?

விடை

அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் உழவுத்தொழில்.

 

3. பொங்கலை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டுமெனக் கவிஞர் கூறுகிறார்?

விடை

பொருளில்லாதவரும் செல்வமுடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் பொங்கல் நாளே. ஆகையால், ஏற்றம் தரும் ஏர்த்தொழிலின் பெருமையை உணர்ந்து அனைவரும் உழவு பொங்கலிட்டுப் பயிர்வளம் பெருக்க வேண்டுமென கவிஞர் கூறுகிறார்.

 

. சிந்தனை வினா

'உழவர், சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்கமுடியும்' இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

விடை

உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நாம் உணவின்றிதான் வாழ வேண்டும். உழவர்கள், பயிர்களை விளைவிப்பதால் செல்வம் சேரும்; உணவு கிடைக்கும்; உணவுப் பயிர்களே நமக்கு உணவாக அமைகிறது. எனவே, உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்தாகும்.

 


கற்பவை கற்றபின்



. உழவுத் தொழிலின் பெருமையை உணர்ந்து போற்றுக.

பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க.

பாடலிலுள்ள நயங்களைப் பாராட்டுக.

விடை

எதுகை நயம் :

பொங்குக எங்கணும்

உணவு பணம்

உழவு பழகு

தங்கம் இங்கிதன்

உழவே உழவை

ஏழையும் வாழிய

 

மோனை நயம் :

பொங்குக புதுவனம்

எங்கணும் ஏர்த்தொழில்

உணவு உயிரோ

பணமும் பயிர்கள்

உழவும் உடையும்

தங்கம் தானியம்

 

இயைபு :

பொங்குகவே தங்குகவே

உணவுதரும் அணியவரும்

உணர்ந்திடுவோம் துணிந்திடுவோம்

உழவு நடக்கும் இடத்திற்குச் சென்று, செய்தி திரட்டுக.

Tags : Term 2 Chapter 3 | 5th Tamil பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 2 Chapter 3 : Tholil, vanigam : Poem: Ulavup Pongal - Namakkal ve. Ramalinganar: Questions and Answers Term 2 Chapter 3 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் : பாடல் : உழவுப் பொங்கல் - நாமக்கல் வெ. இராமலிங்கனார்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்