Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: வளம் பெருகுக: கேள்விகள் மற்றும் பதில்கள்

தகடூர் யாத்திரைப் பாடல் | இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: வளம் பெருகுக: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam

   Posted On :  15.07.2023 03:44 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்

கவிதைப்பேழை: வளம் பெருகுக: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : கவிதைப்பேழை: வளம் பெருகுக: கேள்விகள் மற்றும் பதில்கள் - தகடூர் யாத்திரைப் பாடல் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய ------------ எல்லாம் முளைத்தன.

அ) சத்துக்கள்

ஆ) பித்துக்கள்

இ) முத்துகன்

ஈ) வித்துகள்

விடை : ஈ) வித்துகள்

 

2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு -------------- பெருகிற்று.

அ) காரி

ஆ) ஓரி

இ) வாரி

ஈ) பாரி

[விடை : இ) வாரி]

 

3. 'அக்களத்து' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அ + களத்து

இ) அக்க + அளத்து

ஆ) அக் + களத்து

ஈ) அம் + களத்து

[விடை : அ) அ + களத்து]

 

4. கதிர் + ஈௗ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கதிரென

ஆ) கதியீன

இ) கதிரீன

ஈ) கதிரின்ன

[விடை : இ) கதிரீன]

 

குறுவினா

1. பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது யாது?

விடை

தகுந்த காலத்தில் பெய்யும் மழையே பயிர்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானது ஆகும்.

 

2. உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?

விடை

நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் ஆரவார ஒலி எழுப்புவர்.

 

சிறுவினா

உழவுத்தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?

விடை

சேரனின் நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்குகிறது.

அகலமான நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளை விடுகின்றன.

முளைத்த விதைகள் செழிப்புடன் வளர தட்டுப்பாடின்றி மழை பொழிகின்றது.

தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டம் இன்றி கிளைத்து வளர்கிறது. செழித்த பயிர்கள் பால் முற்றிக் கதிர்களைப் பெற்றிருக்கின்றன.

அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் நெற்போர் காவல் இல்லாமலே இருக்கின்றது.

நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் (எடுக்கும்) காலத்தில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித் தம் பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய, சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புது வருவாயுடன் சிறந்து விளங்குகின்றது.

 

சிந்தனை வினா

உழவுத்தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?

விடை

உழவுத் தொழில் உயிர் தொழில்

நாகரீகம் என்ற பெயரில் இன்று யாரும் உழவுத் தொழில் செய்ய முன்வருவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒருவர் கட்டாயம் உழவுத் தொழில் செய்தல் வேண்டும். உழவுத் தொழில், அரசுப் பணிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட வேண்டும் உழவுத் தொழிலில் சிறந்து விளங்கும் உழவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளும் பரிசுத் தொகையும் கொடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் வேலை விருப்பப் பட்டியலில் உழவுத்தொழிலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே உழவுத் தொழில் நிச்சயம் சிறக்கும்.



கற்பவை கற்றபின்

 

 

உமது பகுதியில் நடைபெறும் ஏதேனும் ஒரு தொழிலின் பல செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.

விடை

மண்பாண்டத் தொழில் :

குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களிலிருந்து களிமண்ணை எடுத்து வருவர், பெரிய பள்ளம் தோண்டி அதில் களிமண்ணை நிரப்பி தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊற வைப்பர். பிறகு அதனுடன் மெல்லிய மணல் சாம்பல் ஆகியவற்றைக் கலந்து பயன்படுத்துவார்கள். பிறகு பானை செய்யும் சக்கரத்தில் வைத்து வேண்டிய வடிவங்களில் அதை உருவாக்குவார்கள். உரிய வடிவம் வந்ததும் அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடுத்து காய வைப்பர்.

ஓரளவுகாய்ந்ததும், தட்டுப்பலகை கொண்டுதட்டி பானையின் அடிப்பகுதியில் இருக்கும் ஓட்டையை மூடி பானையை முழுமையாக்குகின்றனர். பிறகு உருட்டுக்கல் கொண்டு தேய்த்து பானையைப் பளபளபாக்குகின்றனர். பிறகு வண்ணங்களையும், ஓவியங்களையும் தகுந்தாற்போல வரைகின்றனர்.

 

Tags : by Takadur yathirai padal | Chapter 6 | 8th Tamil தகடூர் யாத்திரைப் பாடல் | இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam : Poem: Valam peruguka: Questions and Answers by Takadur yathirai padal | Chapter 6 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : கவிதைப்பேழை: வளம் பெருகுக: கேள்விகள் மற்றும் பதில்கள் - தகடூர் யாத்திரைப் பாடல் | இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்