Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: வருமுன் காப்போம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

கவிமணி தேசி்க வி்நாயகனார் | இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: வருமுன் காப்போம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 3 : Udalai Ombhomin

   Posted On :  11.07.2023 03:17 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின்

கவிதைப்பேழை: வருமுன் காப்போம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் : கவிதைப்பேழை: வருமுன் காப்போம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - கவிமணி தேசி்க வி்நாயகனார் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காந்தியடிகள் ----------- போற்ற வாழ்ந்தார்.

அ) நிலம்

ஆ) வையம்

இ) களம்

ஈ) வானம்

[விடை : ஆ) வையம்]

 

2. 'நலமெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____

அ) நலம் + எல்லாம்

இ) நலம் + எலாம்

ஆ) நலன் + எல்லாம்

ஈ) நலன் + எலாம்

[விடை : அ) நலம் + எல்லாம்]

 

3. இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) இடவெங்கும்

ஆ) இடம் எங்கும்

இ) இடமெங்கும்

ஈ) இடம்மெங்கும்

[விடை : இ) இடமெங்கும்]

 

வருமுன்காப்போம் - இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனை

எதுகை

இயைபு


 

குறுவினா

1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?

விடை

நடைப்பயிற்சியும், நல்ல காற்றும் நம்மை நோய் அணுகாமல் காப்பவை ஆகும்.

 

2. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?

விடை

அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள் என கவிமணி குறிப்பிடுகிறார்.

 

சிறுவினா

உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

விடை

(i) உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது. சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம்.

(ii) காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. அவர் உயிரைக் கவர எமனும் அணுகமாட்டான். எனவே, நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்தபிறகே குடித்தல் வேண்டும்! நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும்.

(iii) அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுவீர்கள். தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழவைக்கும். அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வருமுன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!

 

சிந்தனை வினா

நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?

விடை

(i) உடலின் வலிமைக்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் உடற்பயிற்சி அவசியமானது. உடற்பயிற்சியால் இரத்தவோட்டம் சீராகும்.

(ii) உடலின் கழிவுப் பொருள்கள் வெளியேறும். துணிவும், தெம்பும், சுறுசுறுப்பும் ஏற்படும், அதனால் விளையாட்டு, தண்டால், நீச்சல், உலாவுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.

(iii) நாம் வாழும் வீடும், சுற்றுப்புறமும் தூய்மையாய் இருக்க வேண்டும். காற்றும் கதிரொளியும் தாராளமாக உள்ளே புகும் வகையில் வீடும், உறங்கும் இடமும் அமைய வேண்டும்.

(iv) உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே, அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

 


கற்பவை கற்றபின்

 

 

1. 'தன் சுத்தம்' என்னும் தலைப்பில் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.

விடை


 

2. சுகாதாரம் பற்றிய பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.

(எ.கா.) சுத்தம் சோறு போடும்.

விடை

நோய்க்கிடங் கொடேல்.

கந்தையானாலும் கசக்கிக் கட்டு.

ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

காற்றுக்கு எதிரே துப்பினால் முகத்தில் விழும்.

காயம்படுமுன் கதறி அழாதே.

சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டான்.

ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனம் இருக்கும்.

ஆள்பாதி ஆடை பாதி.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

தீங்குகளின் உறைவிடம் சோம்பல்.

வருமுன் காப்பதே நலம்.

கூழானாலும் குளித்துக் குடி.

வீட்டின் சுத்தமே! நாட்டின் சுத்தம்!

சுத்தமிருந்தால் சுகம் உண்டு.

சுத்தமான காற்று சுகாதாரமான காற்று.


Tags : by KaviMani desika vinayaganar | Chapter 3 | 8th Tamil கவிமணி தேசி்க வி்நாயகனார் | இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 3 : Udalai Ombhomin : Poem: Varumun cappom: Questions and Answers by KaviMani desika vinayaganar | Chapter 3 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் : கவிதைப்பேழை: வருமுன் காப்போம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - கவிமணி தேசி்க வி்நாயகனார் | இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின்