Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: விடுதலைத் திருநாள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

மீரா | இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: விடுதலைத் திருநாள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu

   Posted On :  15.07.2023 07:54 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு

கவிதைப்பேழை: விடுதலைத் திருநாள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : கவிதைப்பேழை: விடுதலைத் திருநாள்: கேள்விகள் மற்றும் பதில்கள் - மீரா : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வானில் முழுநிலவு அழகாகத் ……………… அளித்தது.

அ) தயவு

ஆ) தரிசனம்

இ) துணிவு

ஈ) தயக்கம்

[விடை : ஆ) தரிசனம்]

 

2. இந்த ……………. முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

அ) வையம்

ஆ) வானம்

இ) ஆழி

ஈ) கானகம்

[விடை : அ) வையம்]

 

3. 'சீவனில்லாமல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) சீவ + நில்லாமல்

ஆ) சீவன் + நில்லாமல்

இ) சீவன் + இல்லாமல்

ஈ) சீவ + இல்லாமல்

[விடை : ஆ) சீவன் + நில்லாமல்]

 

4. 'விலங்கொடித்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) விலம் + கொடித்து

ஆ) விலம் + ஓடித்து

இ) விலன் + ஒடித்து

ஈ) விலங்கு + ஓடித்து

[விடை : ஈ) விலங்கு + ஓடித்து]

 

5. காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) காட்டைஎரித்து

ஆ) காட்டையெரித்து

இ) காடுஎரித்து

ஈ) காடுயெரித்து

[விடை : ஆ) காட்டையெரித்து]

 

6. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) இதந்தரும்

ஆ) இதம்தரும்

இ) இருத்திரும்

ஈ) இதைத்தரும்

[விடை : அ) இதந்தரும்]

 

குறுவினா

1. பகத்சிங் கண்ட கனவு யாது?

விடை

இந்தியா அந்நியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே பகத்சிங் கண்ட கனவு ஆகும்.

 

2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

விடை

முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் ஆட்சியை இருண்ட ஆட்சி என மீரா குறிப்பிடுகிறார்.

 

சிறுவினா

இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

விடை

(i) முந்நூறு ஆண்டுகள் அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டினோம்.

 

(ii) அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளிக்கின்றாள்.

 

சிந்தனை வினா

நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?

விடை

(i) நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாள் விழாவில் பலகலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த வேண்டும்.

(ii) நம்மைப் பெற்றெடுத்த தாயை எவ்வாறு போற்றுவோமோ, அதேபோல் நம் தாய்நாட்டின் பெருமையையும் பழமையையும் மாணவர்கள் அறியும்படி உரையாற்ற வேண்டும்.

(iii) நாம் அடிமைகளாய் இருந்ததைக் கூறி அடிமைத்தளையை நீக்கியவர்களின் தியாகத்தைக் கூறும் வகையில் சிறு நாடகம் நடத்த வேண்டும்.

(iv) சாதி, மத பேதங்களினால் நாம் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

(v) நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும். தேசிய சின்னங்கள், தேசியக் கொடி, தேசியப்பாடல் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும். நாட்டிற்குச் சேவை செய்ய எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஊர்க்காவல் படை, மாணவர் தேசியப்படை ஆகியவற்றில் பங்காற்றல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விடுதலை நாளைக் கொண்டாடலாம்.

 

கற்பவை கற்றபின்

 

நீங்கள் விரும்பும் விழா ஒன்றனைப் பற்றி ஒரு பத்தி அளவில் எழுதுக.

விடை

நான் விரும்பும் விழா குடியரசு நாள் விழா.

குடியரசு நாள் அன்று பள்ளியில் காலையில் கொடியேற்றுவார்கள். நான் காலையில் பள்ளிக்குச் செல்வேன். பள்ளியில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பேன். விழாத் தலைவர், பள்ளி முதல்வர் மற்றும் என் நண்பர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆற்றும் உரையைக் கேட்பேன்.

பிறகு விழா முடிவில் நாட்டுப்பண் பாடியதும் இனிப்புகள் வழங்கப்படும். இனிப்புகளைப் பெற்றுக் கெண்டு வீட்டிற்குச் செல்வேன். அங்கு தொலைகாட்சியில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதையும் மெரினா கடற்கரை சாலையில் காவல்துறையினரின் அணிவகுப்பையும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பேன்.

அந்நன்னாளில் வீரதீர செயல்கள் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அன்று மாலை மெரினா கடற்கரைக்குச் சென்று நீரில் விளையாடிவிட்டு வருவேன். இக்காரணங்களால் எனக்குக் குடியரசு நாள் மிகவும் பிடிக்கும்.

Tags : by Meera | Chapter 7 | 8th Tamil மீரா | இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 7 : Paarukkulle nalla Nadu : Poem: Viduthalai thirunaal: Questions and Answers by Meera | Chapter 7 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு : கவிதைப்பேழை: விடுதலைத் திருநாள்: கேள்விகள் மற்றும் பதில்கள் - மீரா | இயல் 7 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு