Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | பாடல் : கடல்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - பாடல் : கடல்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 5th Tamil : Term 1 Chapter 3 : Iyarkai

   Posted On :  20.07.2023 02:05 am

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை

பாடல் : கடல்: கேள்விகள் மற்றும் பதில்கள்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை : பாடல் : கடல்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக!

1. பெருமை + கடல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

அ) பெருமைகடல்

ஆ) பெருங்கடல்

இ) பெரியகடல்

ஈ) பெருமைக்கடல்

[விடை : ஆ) பெருங்கடல்]

 

2. கருங்கடலே என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கருமை + கடலே

ஆ) கருங் + கடலே

இ) கரும் + கடலே

ஈ) கரு + கடலே

[விடை : அ) கருமை + கடலே]

 

3. 'திரை' என்ற சொல்லின் பொருள்.

அ) மலை

ஆ) அலை

இ) வலை

) சிலை

[விடை : ஆ) அலை]

 

4. மழை பெய்வதற்குக் காரணமாக இருப்பது

அ) வானம்

ஆ) பூமி

இ) கடல்

ஈ) நெருப்பு

[விடை : இ) கடல்]

 

ஆ. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

எ.கா. எல்லை – அல்லும்

விடை

பொங்கு எங்கும்

மலையை விலைகொள்

கடலே கடலே

திரைகளோ நிரைதாமோ?

 

இ. முதலெழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.

எ.கா. அல்லும் அலுப்பும்

விடை

மலையை மகர

விலைகொள் விளையாடற்

மழைக்கு மதித்து

கடலே கடலே

 

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. கடல் நமக்கு அளிக்கும் வளங்கள் யாவை?

விடை

மீன்கள், முத்துகள், சிப்பிகள்.

 

2. பாடலின் பொருளை உம் சொந்த நடையில் எழுதுக.

விடை

பெருங்கடலே! நீ இரவு பகல் உறங்காது அலைவீசி, ஓய்வில்லாமல் இருக்கின்றாய்.

அலைகள் குதிரைகள் அணிவகுத்து வருவது போல் உள்ளது.

அலையோசையா? இடியோசையா? என ஐயம் எழுகின்றது.

அலைகள், மீன்கள், சிப்பிகள், முத்துகள் ஆகியவற்றைக் கொண்டது கடல்.

பூமியில் மழை பெய்யவும், மழைநீரைத் தேக்கும் கலமாகவும் கடல் விளங்குகின்றது. ஆகவே, உன் பெருமைகளைச் சொல்ல வல்லவர்கள் யாரும் இல்லை.

 

உ. சிந்தனை வினா

எல்லையறியாய் பெருங்கடல் என்று கூறக் காரணம் என்ன? வகுப்பறையில் கலந்துரையாடுக.

விடை

கடல் எல்லையற்றது. அதற்கு இதுதான் முடிவு என்று கூறமுடியாது. அது விரிந்து பரந்துள்ளது. எனவே எல்லையறியாய் பெருங்கடல் என்று கவிஞர் கூறியிருக்கின்றார்.

 


கற்பவை கற்றபின்

 

பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டுக.

 

கடலைப் பற்றி இப்பாடல் மூலம் நீ அறிந்த செய்திகளை உன் சொந்த நடையில் கூறுக.

விடை

கடல் மிகவும் அழகாக இருக்கும். கடலில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. கடலில் கப்பல்கள் செல்லும். சங்கு, முத்து, மீன்கள் ஆகிய எண்ணிலடங்கா உயிரினங்கள் வாழ்கின்றன. கடலில் அலை வீசிக் கொண்டே இருக்கும். மழையாக பெய்யும் நீரான இறுதியில் கடலையேச் சென்றடையும்.

 

கடலைப் பற்றி நீ அறிந்த பாடல்களை வகுப்பறையில் பாடி மகிழ்க.

விடை

கடல்

அலைவதால் உனக்கு அலைகடல் பேரோ? நிலையிலா

உலகின் நிகழ்வுகளைக் காட்டிடவே அலைகிறாய்

போலும் அங்குமிங்கும்! ஆட்டமிட்டு விலையிலா

பொருள்களை விளைத்திடும் கடல் தாய்!

முத்துடன் பவளமெனக் கத்துகடல் அளித்திடுமே!

சத்தமிடும் சங்கீதக் கடலுக்கு வந்தனமே!

முத்தமிடும் தரைதனையே முழுதாடை கடலென்பார்

வித்தகரின் பாடலைப் போல் விலையேது கடலுக்கே!

Tags : Term 1 Chapter 3 | 5th Tamil பருவம் 1 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 1 Chapter 3 : Iyarkai : Poem: kadal: Questions and Answers Term 1 Chapter 3 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை : பாடல் : கடல்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை