Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu

   Posted On :  13.07.2022 03:21 am

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு

உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு : உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 3 : உரைநடை  உலகம் : தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்)


பாடநூல் மதிப்பீட்டு வினா 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம் ________

அ) தூத்துக்குடி

ஆ) காரைக்குடி 

இ) சாயல்குடி

ஈ) மன்னார்குடி

[விடை : இ. சாயல்குடி] 


2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் ________

அ) இராஜாஜி 

ஆ) நேதாஜி 

இ) காந்திஜி 

ஈ) நேருஜி 

[விடை : ஆ. நேதாஜி] 


3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்

அ) இராஜாஜி

ஆ) பெரியார்

இ) திரு.வி.க

ஈ) நேதாஜி

[விடை : அ. இராஜாஜி]


குறு வினா 

1. முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது? 

வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர். 

உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி.

- என்று முத்துராமலிங்கத்தேவரைப் பெரியார் பாராட்டியுள்ளார். 


2. முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடைவிதிக்கப்படக் காரணம் யாது? 

முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார். 

அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர். 

இதனால், அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்தது. 

மேலும், வாய்ப்பூட்டுச் சட்டம் முலம் மேடைகளில் அரசியல் பேசக் கூடாது என்று அவருக்குத் தடைவிதித்தது. 


3. முத்துராமலிங்கத்தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக. 

முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார். 

சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறை ஆற்றல் உடையவராக விளங்கினார்.


சிறு வினா 

1. நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.

நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார். 

  அவரைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.

முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று 06.9.1939 இல் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார். 

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர். 

விடுதலைக்குப் பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார் 


2. தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை? 

1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார். 

மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார். 

உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார். 

பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார். 


சிந்தனை வினா 

சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்? – 

உரிமைக்காகப் போராடுதல்

ஒழுக்கம் காத்தல்

மக்கள் நலம் காத்தல்

பிறர்நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல் 

பொதுநல வாழ்வு

பேச்சாற்றல்

மனித நேயம் 

சாதி, மத, இன, மொழி ஆகியன பாராமை

நாட்டுப் பற்று 

தியாக உணர்வு 

ஆகியன சிறந்த தலைவருக்குரிய பண்புகளாக நாங்கள் கருதுகின்றோம்.



கற்பவை கற்றபின்


நாட்டுக்கு உழைத்த சிறந்த பிற தலைவர்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதுக. 

காந்தியடிகள்: 

அகிம்சை வழியில் நாட்டு விடுதலைக்குப்பாடுபட்டவர். வெள்ளையனே வெளியேறு இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு முதலியன. 

நேதாஜி: 

இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து ஆங்கிலேயர்களை எதிர்த்தவர். 

வ. உ. சிதம்பரனார்: 

நம் நாட்டிற்காகச் சுதேசக் கப்பல் வாங்கியவர். நாட்டுமக்களுக்காக சிறையில் செக்கிழுத்தவர். 

ஜவஹர்லால் நேரு: 

காந்தியடிகளுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டவர். 

பூலித்தேவன்: 

ஆங்கிலேயரை எதிர்த்து தன்பகுதியை வென்றவர். விடுதலைப் போரின் முதல் முழக்கமிட்டவர். 

வீரபாண்டிய கட்டபொம்மன்: 

ஆங்கிலேயருக்கு வரி கொடுக்கமாட்டோம் என்று ஆங்கிலேயரை எதிர்த்தவர்.


Tags : Term 1 Chapter 3 | 7th Tamil பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu : Prose: Desiyam kaatha chammal pasumpon oo Muthuramalingathevar: Questions and Answers Term 1 Chapter 3 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு : உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு