Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | உரைநடை: பல்துறைக் கல்வி: கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: பல்துறைக் கல்வி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila

   Posted On :  12.07.2023 03:33 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில

உரைநடை: பல்துறைக் கல்வி: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : உரைநடை: பல்துறைக் கல்வி: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது -------------

அ) விளக்கு

ஆ) கல்வி

இ) விளையாட்டு

ஈ) பாட்டு

[விடை : ஆ) கல்வி]

 

2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ----------

அ) இளமை

ஆ) முதுமை

இ) நேர்மை

ஈ) வாய்மை

[விடை : அ) இளமை]

 

3. இன்றைய கல்வி -------- நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

அ) வீட்டில்

ஆ) நாட்டில்

இ) பள்ளியில்

ஈ) தொழிலில்

[விடை : ஈ) தொழிலில்]

 

நிரப்புக.

1. கலப்பில் வளர்ச்சி. உண்டென்பது இயற்கை நுட்பம்

2. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.

3. வாழ்விற்குரிய இன்பத் துறைகளில் தலையாயது காவிய இன்பம் ஆகும்.

 

பொருத்துக.

1. இயற்கை ஓவியம் அ) சிந்தாமணி

2. இயற்கை தவம் ஆ) பெரிய புராணம்

3. இயற்கைப் பரிணாமம் இ) பத்துப்பாட்டு

4. இயற்கை அன்பு ஈ) கம்பராமாயணம்

விடை

1. இயற்கை ஓவியம் இ) பத்துப்பாட்டு

2. இயற்கை தவம் அ) சிந்தாமணி

3. இயற்கைப் பரிணாமம் ஈ) கம்பராமாயணம்

4. இயற்கை அன்பு ஆ) பெரிய புராணம்

 

குறுவினா

1. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு. வி.க. கூறுவன யாவை?

விடை

இன்றைய கல்வி குறிப்பிட்ட பாடங்களை நெட்டுற (மனப்பாடம்) செய்து தேர்வில் தேறி, பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்கு ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது என்று திரு.வி.க. கூறுகிறார்.

 

2. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

விடை

தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.

 

3. திரு. வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.

விடை

இளங்கோவடிகள்

சேக்கிழார்

திருத்தக்கத்தேவர்

கம்பர்

திருஞானசம்பந்தர்

பரஞ்சோதி

ஆண்டாள்

 

சிறுவினா

1. தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு. வி.க. கூறுவனவற்றை எழுதுக.

விடை

கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது இயற்கை நுட்பம்.

தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு.

ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம் பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம் தேடுவோம் தமிழ்

கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்று திரு.வி.க. கூறுகின்றார்.

 

2. அறிவியல் கல்வி பற்றித் திரு. வி.க. கூறுவன யாவை?

விடை

உலக வாழ்விற்கு மிக இன்றியமையாதது அறிவியல்.

உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றைப் பற்றிய அறிவும், கோள் இயக்கம், கணிதம், அகத்திணை முதலிய அறிவும் நமக்கு வேண்டும்.

இந்நாளில் அத்தகைய அறிவு தேவை. புற உலகு ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.

நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி, இந்நாளில் உறுதி பெறலரிது.

இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை.

ஆகவே, அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞர்கள் உலகில் பரவ வேண்டும் என்று திரு. வி. க. கூறுகின்றார்.

 

நெடுவினா

காப்பியக் கல்வி குறித்துத் திரு. வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

விடை

(i) வாழ்விற்கு உரிய இன்பத் துறைகளில் காவிய இன்பமும் ஒன்று. அதுவே முதன்மையானது என்றும் கூறலாம்.

(ii) நாம் தமிழர்கள், நாம் பாட்டு இன்பத்தை நுகர வேண்டும். அதற்காகத் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே செல்ல வேண்டும். தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன.

(iii) இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரிய புராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்.

(iv) இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்திலும் வரும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.

(v) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். தமிழ் இன்பத்தில் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ ? தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று திரு. வி. க. காப்பியக் கல்வி பற்றிக் கூறுகிறார்.

 

சிந்தனை வினா

திரு. வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?

விடை

(i) திரு. வி. க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நான் அறிவியல் கல்வியைக் கற்க விரும்புகிறேன்.

(ii) காரணம் என்னவென்றால், தமிழ் மொழி அறிந்த எனக்கு அறிவியல் பற்றிய செய்திகளை மேலும் தெரிந்து கொள்ளவும், அறிவியலில் உள்ள பல புதுமையான செய்திகளைத் தமிழ்ப்படுத்தவும் அறிவியல் கல்வி கற்க விரும்புகிறேன்.

 


கற்பவை கற்றபின்


பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.


 

Tags : Chapter 4 | 8th Tamil இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila : Prose: Palturai kalvi: Questions and Answers Chapter 4 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : உரைநடை: பல்துறைக் கல்வி: கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில