Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | உரைநடை: சட்டமேதை அம்பேத்கர்: கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: சட்டமேதை அம்பேத்கர்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel

   Posted On :  17.07.2023 07:14 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்

உரைநடை: சட்டமேதை அம்பேத்கர்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : உரைநடை: சட்டமேதை அம்பேத்கர்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்.

அ) இராதாகிருட்டிணன்

ஆ) அம்பேத்கர்

இ) நௌரோஜி

ஈ) ஜவஹர்லால் நேரு

[விடை : ஆ) அம்பேத்கர்]

 

2. பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

அ) சொத்துரிமையை

ஆ) பேச்சுரிமையை

இ) எழுத்துரிமையை

ஈ) இரட்டை வாக்குரிமையை

[விடை : ஈ) இரட்டை வாக்குரிமையை]

 

3. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம்

அ) சமாஜ் சமாத சங்கம்

ஆ) சமாத சமாஜ பேரவை

இ) தீண்டாமை ஒழிப்புப் பேரவை

ஈ) மக்கள் நல இயக்கம்

[விடை : அ) சமாஜ் சமாத சங்கம்]

 

4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ------ வழங்கியது.

அ) பத்மஸ்ரீ

ஆ) பாரத ரத்னா

இ) பத்மவிபூசண்

ஈ) பத்மபூசன்

[விடை : ஆ) பாரத ரத்னா]

 

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் புத்தரும் அவரின் தம்மமும்

2. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் சுதந்திரத் தொழிலாளர் கட்சி

3. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் இலண்டன் சென்றார்.

 

குறுவினா

1. அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக்கொண்டார்?

விடை

அம்பேத்கர் சதாராவில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார். இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப்பருவத்திலேயே பல அவமதிப்புகளுக்கு ஆளானார். மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார்.

 

2. தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கொண்ட பணிகள் இரண்டினை எழுதுக.

விடை

தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கண்ட பணிகள் :

(i) அம்பேத்கர் இந்தியச் சமூக அமைப்பில் நிலவிய சாதியமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார்.

(ii) ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை 1927ஆம் ஆண்டு துவங்கினார். சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் இவர் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

(iii) 1930ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.

 

3. வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?

விடை

வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது: என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன் என்று அம்பேத்கர் கூறினார்.

 

சிறுவினா

1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?

விடை

இந்திய அரசியல் அமைபச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் :

(i) 15-08-1947 அன்று இந்தியா விடுதலை பெற்றது. ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

(ii) 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது.

(iii) இக்குழுவில் கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி. கைதான் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-இல் ஒப்படைத்தது.

(iv) அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு, அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்குப் பொருந்தும் சட்டக்கூறுகளை. இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது.

(v) அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்தது. இது மிகச்சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது.

 

2. அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி குறித்து எழுதுக.

விடை

அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி :

(i) 1935ஆம் ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

(ii) ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைக் பாதுகாக்கத் தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்.

(iii) சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டார்.

(iv) அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றி பெற்றனர்.

 

நெடுவினா

பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக.

விடை

பூனா ஒப்பந்தம் :

(i) ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

(ii) இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

(iii) இதன் விளைவாக 1931ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபத்து நான்காம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

(iv) அதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.

 

சிந்தனை வினா

பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

விடை

பாகுபாடில்லாத க கள் சமூகம் உருவாக நமது கடமைகள் :

நாம் வாழும் சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பங்குண்டு. நாம் பேசும் சொற்கள், செய்யும் செயல்கள் மற்றவரைப் பாதிக்காமலும், துன்புறுத்தாமலும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு பெயர்களுடனும் வெவ்வேறு கடமைகளுடன்தான் வாழ்கிறோம். வீட்டில் மகன் அல்லது மகள், பள்ளியில் மாணவன், அலுவலகத்தில் தொழிலாளி அல்லது முதலாளி, சமுதாயத்தில் குடிமகன் எனப் பல்வேறு வேடங்களைத் த தரித்துக் கொண்டுள்ளோம். தரித்துள்ள வேடத்தில் தவறின்றி நடந்துகொள்ள வேண்டும்.

தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், தன்னோடு வாழ்பவர்களுக்கும் உண்டான உரிமைகளைப் பேணி வாழ்வதற்கு அவன் முன் வர வேண்டும். அவ்வாறு வாழும்போது சமுதாயத்தில் மனித நேயம் தழைத்துவிடும். மனித நேயம் பேணப்பட்டால் உரிமைகள் பேணப்படும். சமூகச் சீர்குலைவு இருக்காது. ஒழுக்கக்கேடு, அச்சம் நிறைந்த சூழ்நிலை இவையெல்லாம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.

ஆண், பெண் வேறுபாடுகளும், உயர்ந்தவர். தாழ்ந்தவர் என்று பாகுபாடின்றி இருக்க வேண்டும். இரு பாலரும் சம உரிமை பெற்று வாழ்ந்தால், பாகுபாடில்லாத மக்கள் சமூகம் நீ உருவாகும்.

 


கற்பவை கற்றபின்



1. சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

விடை

சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்கள் :

1. பெரியார்

2. காந்தியடிகள்

3. நெல்சன் மண்டேலா

4. அம்பேத்கர்

5. முத்துலெட்சுமி ரெட்டி

6. மூவலூர் இராமாமிர்தம்

7. பாரதியார்

8. பாரதிதாசன்

9. அயோத்திதாசர்

 

2. அம்பேத்கரின் பண்புகளாக நீங்கள் உணர்ந்தவற்றை எழுதுக.

விடை

இளமையில், இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப்பருவத்தில் பல அவமதிப்புகளுக்கு ஆளானவர். அதனால் அவர் பள்ளியையோ கல்வியையோ வெறுக்காமல் தொடர்ந்து படித்து இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம், பாரிஸ்டர் பட்டம் என்று முன்னேறி மிகச்சிறந்த சான்றோனாக உயர்ந்தார்.

இதில் அவருடைய கடுமையான உழைப்பு தெரிகிறது. நூலகத்திற்கு முதல் ஆளாய்ச் சென்று இறுதி ஆளாய் வருவார் என்று கூறும்போது அவருடைய உயர்வுக்கு இந்த நூலகமே தூணாக இருந்துள்ளது. தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார்.

அம்பேத்கர் நான்வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெயவம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை என்று கூறியுள்ளார். அதன்படியே அவர் நல்லறிவு பெற்றும், சுயமரியாதையுடனும் நன்னடத்தையுடனும் வாழ்ந்து காட்டினார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார். அப்போராட்டத்தோடு அவர் நிற்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காகவும் பாடுபட்டார்.

அம்பேத்கரின் கருத்துகள் :

(i) கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து. அது உனக்கு பயன் தரும்.

(ii) கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்.

(iii) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.

அம்பேத்கர் கல்வியாளராக பொருளாதார நிபுணராக, தத்துவவாதியாக, வரலாற்றாளராக, அரசியல் செயற்பாட்டாளராக, சட்ட அமைச்சராக இருந்து தன் பன்முக ஆற்றலால் மக்களுக்குத் தொண்டாற்றியவர்.

Tags : Chapter 9 | 8th Tamil இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel : Prose: Sattamethai Ambedkar: Questions and Answers Chapter 9 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : உரைநடை: சட்டமேதை அம்பேத்கர்: கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்