Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | உரைநடை: தமிழர் மருத்துவம் (நேர்காணல்): கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தமிழர் மருத்துவம் (நேர்காணல்): கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 3 : Udalai Ombhomin

   Posted On :  11.07.2023 03:21 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின்

உரைநடை: தமிழர் மருத்துவம் (நேர்காணல்): கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் : உரைநடை: தமிழர் மருத்துவம் (நேர்காணல்): கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்குத் ------ பயன்படுத்தினர்.

அ) தாவரங்களை

ஆ) விலங்குகளை

இ) உலோகங்களை

ஈ) மருந்துகளை

[விடை : அ) தாவரங்களை]

 

2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ----------- நீட்சியாகவே உள்ளது.

அ) மருந்தின்

ஆ) உடற்பயிற்சியின்

இ) உணவின்

ஈ) வாழ்வின்

[விடை : இ) உணவின்]

 

3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுன் ஒன்று

அ) தலைவலி

ஆ) காய்ச்சல்

இ) புற்றுநோய்

ஈ) இரத்தக்கொதிப்பு

[விடை : ஈ) இரத்தக்கொதிப்பு]

 

4. சமையலறையில் செலவிடும் நேரம் ------------ செலவிடும் நேரமாகும்.

அ) சுவைக்காக

ஆ) சிக்கனத்திற்காக

இ) நல்வாழ்வுக்காக

ஈ) உணவுக்காக

[விடை : இ) நல்வாழ்வுக்காக]

 

குறுவினா

1. மருத்துவம் எப்போது தொடங்கியது?

விடை

தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும், அவனுக்கு அருகில் கிடைத்த தாவர, கனிம, சீவப் பொருள்களைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்றிருப்பான். அப்போதே மருத்துவம் தொடங்கியது.

 

2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

விடை

• 45 நிமிடத்தில் 3 கி.மீ. நடைப்பயணம்.

• 15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி.

• 7 மணி நேர தூக்கம்.

• 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல்.

 

3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

விடை

மூலிகை, தாவர இலை, தாவர வேர், உலோகங்கள், பாஷாணங்கள், தாதுப்பொருட்கள் ஆகியன தமிழர் மருத்துவத்தில் மருந்துப்பொருட்களாகப் பயன்படுகின்றனவாகும்.

 

சிறுவினா

1. நோய்கள் பெருகக் காரணம் என்ன?

விடை

• மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.

• மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்.

• தன் உணவுக்காக வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற

• அலட்சியமான எண்ணம், மன அழுத்தம், எது கேளிக்கை? எது குதூகலம்? எது படிப்பு? எது சிந்தனை? என்ற புரிதல் இல்லாமை ஆகியவற்றைக் கூடுதல் காரணங்களாகச் சொல்லலாம்.

• நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக நாம் அறிவியல் அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்துவிட்டோம்.

• இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்துவிட்டோம். இதுவே இன்றைக்குப் பல நோய்கள் பெருக மிக முக்கியமான காரணம் ஆகும்.

 

2. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

விடை

• நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதை விட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

• சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

• விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.

• எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

• கணினித் திரையிலும், கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.

• இரவுத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. உரிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள். அதிகாலையில் விழித்தெழுங்கள் உங்களை எந்த நோயும் அண்டாது.

 

நெடுவினா

தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

விடை

(i) வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றனர் சித்தர்கள்.

(ii) வேர், தழையால் குணம் அடையாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

(iii) அந்தக் காலத்தில் எப்படி மூலிகைகளை மருந்தாகப் பார்த்தார்களோ அப்படியே தாதுப்பொருட்களையும், உலோகத்தையும் பார்த்தார்கள்.

(iv) அவற்றை மருந்துகளாக மாற்றும் வல்லமை சித்தமருத்துவத்தில் இருந்திருக்கிறது.

(v) ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும்; பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.

(vi) ஒரு கவளம் சோற்றை உடல் எப்படி எடுத்துக்கொள்கிறதோ, அப்படியே தான் சித்த மருத்துவத்தின் லேகியத்தையும், சூரணத்தையும் உடல் எடுத்துக்கொள்ளும்.

(vii) அதனால் உணவு எப்படி பக்கவிளைவுகளைத் தருவதில்லையோ அதே போலச் சித்த மருந்துகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

(viii) தமிழர் மருத்துவத்தின் சிறப்பு என்னவென்றால், தனித்துவமான பார்வை இதன் முதல் சிறப்பு; இரண்டாவது சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது.

(ix) மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.

(x) அதாவது நோய்நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின்படி நோயை மட்டுமன்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.

 

சிந்தனை வினா

நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?

விடை

இயற்கையோடு இணைந்து உண்ணல்:

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு. மக்கள் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்கங்களுமே அவர்களது உடல் நலத்தையும் உள நலத்தையும் தீர்மானிக்கின்றன. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக் கூடிய சஞ்சீவி மருந்தாகக் கருதப்படுகிறது.

உண்ணும் முறை :

எளிதில் செரிக்கக் கூடிய பழம், காய், பருப்பு, அரிசி, கோதுமை, பால் இவற்றையே குடல் ஏற்றுக் கொள்கிறது. நாச்சுவை கருதி உண்ணாமல், உடல் நலங்கருதி உண்ணுதலே நல்லது. உணவை விரைவாக விழுங்கக்கூடாது; நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும்.

பயிற்சிகள் :

தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஏழு மணிநேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீ ர் அருந்துவது அவசியம்.

தவிர்க்க வேண்டியன:

நோய்க்கு முதல் காரணம் உப்பு. இதனைக் குறைவாக சேர்த்தல் நன்று. உப்பு நிறைந்த பொருள்களான ஊறுகாய், அப்பளம், வடகம், கருவாடு, வறுத்த முந்திரிபருப்பு, வறுத்த உருளைச் சீவல், வாழைக்காய்ச் சீவல், புளித்த மோர் முதலியனவற்றை முழுவதுமாகத் தவிர்த்தல் வேண்டும். கொழுப்பு நிறைந்த இறைச்சிகள், முட்டையின் மஞ்சள் கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, பனிக்கூழ், இனிப்புக்கட்டி ஆகியவற்றை நீக்குதல் வேண்டும்.

சமச்சீர் உணவு :

உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே, அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

 


கற்பவை கற்றபின்

 

 

1. நீங்கள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களை எழுதுக.

விடை

(i) பல மருந்துகளின் பெயர்களை மருத்துவ நூல்களில் படிக்கின்றோம். ஆனால், அந்த மருந்துகளைப் பார்த்ததே இல்லை. மற்றவர்களுக்கும் தெரிவது இல்லை. அதைத் தெரிந்து கொண்டால் அந்த மருந்துகளின் பயன்பாட்டை நாங்கள் பயன்படுத்த வழி உண்டு. அதற்கு மருத்துவராக விளங்கும் நீங்கள் வழிவகை செய்ய முடியுமா?

(ii) வேதிக்கலப்பு இல்லாத உணவு இன்று குறைவு. அப்படி இருக்கும் போது நோய்கள் விரைவாகவே வந்து விடுகின்றன. இதிலிருந்து மீண்டுவர தாங்கள் கூறும் அறிவுரை யாது?

(iii) பழைய மருத்துவ தாவரங்களை மீட்டுருவாக்கம் செய்ய வழிவகை உள்ளதா?

(iv) நவீன மருத்துவத்தைத் தவிர்த்து நாட்டு மருத்துவத்திற்கு நுழைய அரசு மருத்துவமனையில் பழைய மருத்துவமுறைக்கு வழி உள்ளதா?

(v) தமிழர் மருத்துவத்தைப் பெரும்பாலான தமிழர்களே ஏற்றுக்கொள்ளாத போது, தமிழர் மருத்துவத்தை உலக அளவில் பறைசாற்றுவது எப்படி?

 

2. உங்கள் பகுதிகளில் கிடைக்கும் மூலிகைகளின் மாதிரிகளைத் திரட்டி அவற்றின் பயன்களை எழுதிக் காட்சிப்படுத்துக.


Tags : Chapter 3 | 8th Tamil இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 3 : Udalai Ombhomin : Prose: Tamilar maruthuvam (naerkanel): Questions and Answers Chapter 3 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் : உரைநடை: தமிழர் மருத்துவம் (நேர்காணல்): கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின்