Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | இலக்கணம்: வல்லினம் மிகா இடங்கள்

இயல் 4 | 9 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: வல்லினம் மிகா இடங்கள் | 9th Tamil : Chapter 4 : Ettutikum sendriduVeer

   Posted On :  19.08.2023 07:14 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

இலக்கணம்: வல்லினம் மிகா இடங்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் : இலக்கணம்: வல்லினம் மிகா இடங்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

தொழில்நுட்பம்

கற்கண்டு

வல்லினம் மிகா இடங்கள்



தோப்புக்கள் – தோப்புகள்

கத்தி கொண்டு வந்தான் - கத்திக்கொண்டு வந்தான்

மேற்கண்ட சொற்களில் வல்லினம் மிகும்போது ஒரு பொருளும் மிகாதபோது வேறொரு பொருளும் வருவதை அறியலாம். நாம் பேசும்போதும் எழுதும்போதும் பொருள் மயக்கம் தராத வகையில் மொழியைப் பயன்படுத்துவதற்கு வல்லினம் மிகா இடங்களை அறிவது இன்றியமையாததாகும்.

வல்லினம் மிகா இடங்கள்:

தற்கால உரைநடையில் வல்லினம் மிகா இடங்களாகக் கீழ்க்காண்பவற்றைக் கூறலாம்.

அது செய் இது காண் - அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

எது கண்டாய்? எவை தவறுகள்?  - இவ்வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

குதிரை தாண்டியது. கிளி பேசும் - எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.

அண்ணனோடு போ. எனது சட்டை. - மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது.

தந்தையே பாருங்கள். மகளே தா. - விளித் தொடர்களில் வல்லினம் மிகாது.

வந்த சிரிப்பு. பார்த்த பையன் - பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.

நாடு கண்டான். கூடு கட்டு - இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

வரும்படி சொன்னார். பெறும்படி கூறினார். - படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.

வாழ்க தமிழ் வருக தலைவா! - வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.

குடிதண்ணீர், வளர்பிறை, திருவளர்செல்வன் - வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

ஒரு புத்தகம், மூன்று கோடி - எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.

தாய்தந்தை, இரவுபகல் - உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.

அன்று சொன்னார். என்று தருவார். அவராவது தருவதாவது யாரடா சொல். ஏனடி செல்கிறாய்? கம்பரைப் போன்ற கவிஞர் யார்?  - அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

அவ்வளவு பெரியது. அத்தனை சிறியது. அவ்வாறு பேசினான். அத்தகைய பாடங்கள். அப்போதைய பேச்சு. அப்படிப்பட்ட காட்சி. நேற்றைய சண்டை. - அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது.

என்னோடு சேர். மரத்திலிருந்து பறி. குரங்கினது குட்டி. - மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது.

தமிழ் படி. (ஐ) கை தட்டு. (ஆல்) வீடு சென்றாள். (கு) கரை பாய்ந்தான். (இருந்து) - இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது.

தலைவி கூற்று. தொண்டர் படை - நிலைமொழி உயர்திணையாய் அமையும் தொடரில் வல்லினம் மிகாது.

உறு பொருள் நனி தின்றான். கடி காவல் - சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.

பார் பார் சலசல - அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது.

கருத்துகள் பொருள்கள் வாழ்த்துகள் - கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது. (மிகும் என்பர் சிலர்)

பைகள், கைகள் - ஐகார வரிசை உயிர்மெய் ஓரெழுத்துச் சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.

Tags : Chapter 4 | 9th Tamil இயல் 4 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 4 : Ettutikum sendriduVeer : Grammar: Vallinam Megha idenkal Chapter 4 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் : இலக்கணம்: வல்லினம் மிகா இடங்கள் - இயல் 4 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர்