Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 2 : Uyirin osai

   Posted On :  21.07.2022 04:23 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை

கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 2 : உயிரின் ஓசை : திறன் அறிவோம்

 

பாடநூல் வினாக்கள் - பலவுள் தெரிக.

1. "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" - பாரதியின் இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை?

) உருவகம், எதுகை

) மோனை, எதுகை

) முரண், இயைபு

) உவமை, எதுகை

[விடை: மோனை, எதுகை]

 

2. செய்தி 1- ஒவ்வொர் ஆண்டும் ஜீன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

செய்தி 3 - காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்களே!

அ) செய்தி 1 மட்டும் சரி

ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி

இ) செய்தி 3 மட்டும் சரி

ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி

[விடை: ) செய்தி 1,3 ஆகியன சரி]

 

3. “பாடு இமிழ் பனிக்கடல் பருகிஎன்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

() கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

() கடல்நீர் குளிர்ச்சி அடைதல்

() கடல்நீர் ஒலித்தல்

() கடல் நீர் கொந்தளித்தல்

[விடை : கடல்நீர் ஆவியாகி மேகமாதல்]

 

4. "பெரிய மீசை" சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

() பண்புத்தொகை

() உவமைத் தொகை

() அன்மொழித்தொகை

() உம்மைத்தொகை

[விடை: () அன்மொழித்தொகை]

 

5. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

) கொண்டல் - 1. மேற்கு

) கோடை - 2. தெற்கு

) வாடை - 3. கிழக்கு

) தென்றல் - 4. வடக்கு

அ) 1, 2, 3, 4

ஆ) 3, 1, 4, 2

இ) 4, 3, 2, 1

ஈ) 3, 4, 1, 2

விடை :

) கொண்டல் - 3. கிழக்கு

) கோடை - 1. மேற்கு

) வாடை - 4. வடக்கு

) தென்றல் - 2. தெற்கு

 

குறுவினா

 

1. "நமக்கு உயிர் காற்று

காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

வெட்டி எறியாமல் நட்டு வைப்போம்” - இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக் கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

மரங்கள் வளர்ப்போம்; உயிர்கள் வாழ தூய்மையான காற்றைப் பெறுவோம்.

மண் வளத்தைக் காக்க மரங்களை வளர்ப்போம்.

 

2. வசன கவிதை - குறிப்பு வரைக.

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்.

 

3. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்கள் விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

தண்ணீர் குடி - தண்ணீர் + + குடி = தண்ணீரைக்குடி இரண்டாம் வேற்றுமைத் தொகை

நாம் நாள்தோறும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

• தயிர்க்குடம் - தயிரையுடைய குடம் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை - பூமிகா தயிர்க்குடத்திலிருந்து தயிரை எடுத்து தின்றாள்.

 

4. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

தம்பி அழாதே! அப்பாவும் அம்மாவும் சீக்கிரமாக வந்து விடுவார்கள். வரும் போது உனக்கு தின்பண்டமும் விளையாட்டுப் பொருள்களையும் வாங்கி வருவார்கள். இப்போது உனக்கு என்ன வேண்டும் வாங்கித் தருகிறேன் வா.

 

5. மா அல் - பொருளும் இலக்கணக் குறிப்பு தருக.

மா அல் என்பதன் பொருள் திருமால்

மா அல் என்பதன் இலக்கணக்குறிப்பு செய்யுளிசையளபெடை

 

சிறுவினா

 

1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான் இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்..... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு "நீர்" தன்னைப் பற்றி பேசினால் 'உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

நான் தான் நீர். நான் நிலப்பரப்பில் நான்கில் மூன்று பங்கு ஆவேன். கடலாக, ஆறாக, குளமாக, அருவியாக இருக்கிறேன். மக்களுக்கு உணவாகவும் அமிழ்தமாகவும் இருக்கிறேன். நான் இல்லை என்றால் உலகம் இல்லை. விண்ணிலிருந்து நான் மழையாகப் பிறப்பேன். சிரிக்க வைத்தால் உலகிற்கு வளத்தை அழிப்பேன். மரத்தை அழித்து அழவைத்தால் வெள்ளமாக வந்து உலகை அழிப்பேன்.

 

2. சோலைக் (பூங்கா) காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

சோலைக்காற்று - நண்பா! நான் மக்களுக்கு இதமான காற்றைத் தருகிறேன். உன்னால் முடியுமா?

மின்விசிறிக் காற்று - முடியும் நண்பா! நான் மெதுவாகவும் வேகமாகவும் சுழன்று காற்றைத் தருகிறேன்.

சோலைக்காற்று - நானும் உன்னைப் போல் வீசுவேன்.

மின்விசிறிக் காற்று - நானும் எந்நேரமும் சுழன்று பயன் தருவேன்.

சோலைக்காற்று - நீ ஓரிடத்திலிருந்து நிலையாக வீசினால் உன்னை இயக்க ஒருவர் தேவை. மின்சாரம் தடைப்பட்டால் மனிதர்கள் உன்னை இயக்க முடியாது.

மின்விசிறிக் காற்று - மனிதர்கள் உன்னை விரும்புகிறார்களா? என்னால் யாருக்கும் எந்த வித தீங்கும் ஏற்படாது.

சோலைக்காற்று - ஆம். நான் மக்களுக்கு குளிர்ந்த காற்றைத் தருகிறேன். நான் ஒன்றும் மனிதர்களுக்குத் தீங்கு செய்ய நினைப்பதில்லை.

மின்விசிறிக் காற்று - நான் வீடு கட்டி வாழ்பவர்களுக்கு வீட்டிற்கு அணிகலனாக இருக்கிறேன்.

சோலைக்காற்று - ஆமாம். நாம் இருவருமே மக்களின் துன்பத்தைப் போக்கி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகுக்கிறோம்.

மின்விசிறிக் காற்று - ஆம். நாம் இருவரும் என்றும் மக்களுக்கு இதமான காற்றளிப்போம். நன்றி!

 

3. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளை குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

மல்லிகைப்பூ

• இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

மல்லிகை என்னும் பூ (மல்லிகை சிறப்புப் பெயர், பூ - பொதுப் பெயர்)

பறித்த பூங்கொடி : பெயரெச்சத் தொடர்

பறித்த - யெரெச்சம்,

பூங்கொடி என்ற பெயருடன் வந்துள்ளது.

பூங்கொடி : உவமைத் தொகை

• பூ போன்ற கொடி

ஆடு மாடு : உம்மைத்தொகை

• ஆடும், மாடும் - உம் சொல் மறைந்துள்ளது

தண்ணீர் தொட்டி : இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

தண்ணீரை உடைய தொட்டி என்று விளக்கம் தரும்.

குடிநீர் : வினைத்தொகை

• மூன்று காலங்களும் மறைந்து வந்துள்ளன (குடிக்கும் நீர், குடிக்கின்ற நீர், குடித்த நீர் )

குடிநீர் நிரப்பினாள் : இரண்டாம் வேற்றுமைத் தொகை

குடிநீர் நிரப்பினாள்

மணியைப் பார்த்தாள் : இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

 

4. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

குறிப்பு :

இலைகளில் சொட்டும் நீர் - உடலில் ஓடும் மெல்லிய குளிர் - தேங்கிய குட்டையில் சளப்தளப் என்று குதிக்கும் குழந்தைகள் ஓடும் நீரில் காகிதக் கப்பல்.

மழை நின்றவுடன் மர இலையிலிருந்து சொட்டும் நீர் தேனடையிலிருந்து விழும் துளியினைப்போல் சொட் சொட் என விழுந்தது. நும் உடலில் ஒடும் (வருடும்) மெல்லிய குளிர் காற்று, மயிலிறகால் தம் உடலை வருடுவது போல் இருந்தது. தேங்கிய குட்டையில் குழந்தைகள் "சளப்தளப் என்று மிதிக்கும் காட்சி பல வகையான மீன்களும் தவளைகளும் தாவிக் குதிக்கும் போது ஏற்படும் ஓசையைப் போன்று இருந்தது. அமைதியான நதியானது தன் நீரோட்டத்தில் சிறுசிறு கட்டைகளை இழுத்து வரும் காட்சி போன்று குழந்தைகள் ஒடும் நீரில் காகிதக் கப்பல்களை விடும் காட்சி இருந்தன.

 

நெடுவினா


1. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்தியைத் தொகுத்து எழுதுக.

மழைமேகம் :

அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்போது மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்த திருமாலின் உருவத்தைப் போன்று அமைந்தது பெரிய மழைமேகம்.

மழைப்பொழிவு :

ஒலி முழங்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப்பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுந்து மலையைச் சூழ்ந்து விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

தெய்வ வழிபாடும் நற்செயல் கேட்டலும் :

• காவலுடைய ஊர்ப்பக்கம், முதுபெண்கள் சென்றனர்

•  நறுமணம் கொண்ட பூக்களைச் சுற்றி, யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் ஆரவாரிக்கும்.

• யாழிசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு

நாழி கொண்ட, நறுவீ முல்லை"

மலர்ந்த முல்லைப்பூவோடு நாழியளவு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவித் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பார்.

தலைவியே வருந்தாதே

• சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்.

• குளிர் தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள் "புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்டு எம் இடையர் ஒட்டி வர இப்போது வந்து விடுவர் வருந்தாதே" என்றாள்''

• "இன்னே வருகுவர், தாயர் என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்

முது பெண்கள் தலைவியிடம் "நின் தலைவன் பகைவரை வென்று திரைப் பொருளோடு வருவது உறுதி மனத்தடுமாற்றம் கொள்ளாதே" என்ற நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினார்.

 

2. "புயலிலே ஒரு தோணி'' கதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன.

முன்னுரை :

தமிழர்கள் புலம் பெயர்ந்த நிகழ்வைப் பற்றிக் கூறும் முதல் புதினம் புயலிலே ஒரு தோணி. தமிழர்கள் இந்தோனேசியாவில் இருந்தபோது தென்கிழக்காசியப் போர் மூண்டது. இந்நிலையில் மலேசியா, இந்தோனேசியப் பகுதியில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பே இப்புதினமாகும். இப்புதினத்தின் ஒரு பகுதியான "கடற்கூத்து" பகுதியை பின்வருமாறு காணலாம்.

வருணனை :

கொளுத்தும் வெயில் இமை நேரத்தில் மறைந்தது. மேகங்கள் பொதிந்து கும்மிருட்டாய் ஆகியது. காற்றைக் காணோம் ஒரே இறுக்கம். இடி முழக்கத்துடன் மின்னல் கீற்று வானைப் பிழந்தது. வானம் உடைந்தன. வெள்ளம் கொட்டியது. சூறாவளி ஆடிக்குதித்து கொக்கலித்தன. வானுடன் கடல் கலந்து விட்டது. மழை தெரியவில்லை. திடுமென அமைதி. வானும் கடலும் பிரிந்து தென்பட்டன. வானும் கடலும் வளியும் மழையும் மீண்டும் ஒன்று சேர்ந்து கூக்குரல் இட்டது. வான் பிளந்து தீ கக்கியது.

அடுக்குத் தொடர்கள்

• தொங்கன் நடு : நடுங்கித் தாவிக் குதிகுதித்தது.

தொங்கன் குதித்து விழுந்து நொறுநொறு என்று நொறுங்கியன.

• சுழன்று கிறுகிறுத்து கூத்தாடியது.

ஒலிக்குறிப்புச் சொற்கள்

• தொங்கன் தாவி விழுந்து, சுழல்கிறது

• சிலு சிலு மரமரப்புப் ஙொய்ங் புய்வ நொய்ங் புய்வ் என இடி முழங்க சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றது.

தோணி படும் பாடு

வான், கடல், வயி, மழை ஆகிய நான்கும் சேர்ந்து கப்பலை நொறு நொறுவென நொறுக்கியன. கப்பல் மூழ்கி நீந்துகிறது. கப்பலில் உள்ள பொருட்களெல்லாம் கடல் நீரில் மிதந்தன.

முடிவுரை

கடலில் கப்பலின் போராட்டம் மிக அழகாக, வருணனைகளோடும் அடுக்குத் தொடர்களோடும் ஒலிக் குறிப்புகளோடும் இக்கட்டுரையுள் தெளிவாகவும் கற்பனை நயத்துடன் கூறியுள்ளார் ஆசிரியர்.

 

3. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

வளரும் விழி வண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளந் தென்றலே - வளர்

பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

- கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரைசெய்க.

"நான் என்றும் நிரந்தரமானவன் அழிவதில்லை'' என்ற சொற்றொடருக்குச் சொந்தமானவர் கவியரசு கண்ணதாசன். திரையிசைப் பாடல்களில் குழந்தை, பெண், கவலை, இயற்கை முதலிய பொருள்களில் "இனிமையாகவும் சுவையாகவும் பாடி மக்களின் மனதில் என்றும் அழியாப் புகழினைப் பெற்றுள்ளார்.

தவமும் காற்று :

மலர்ந்து மலராத பாதி மலரையும் விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் தவழும் காற்றை கவிஞர் நதியில் ஆடி அசைந்து துள்ளிக்குதித்து வருகிறது என்றும், மரங்களிலும், செடிகளிலும் காற்றானது ஈரமான தலையைச் சீவிக் கொண்டே அழகுடன் வருகிறது என்றும் தலை சீவிய காற்று இளமையான தென்றலாக இனிமை தருகிறது என்றும் தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றி வளர்ந்ததாக நம் கண் முன்னே படைத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்.

கவிதை நயம்

கவிஞர் மோனை, எதுகை, முரண், இயைபு, அணி, சொல் பொருள், சந்த நயங்களை வெளிப்படுத்தியுள்ளர். மலர்ந்தும் மலராத பாதி மலராக விழிகளுக்கு உவமையாகக் கூறப்படுகிறது. ஆகையால் இக்கவிதையில் உவமையணி இடம் பெற்றுள்ளது.


Tags : Chapter 2 | 10th Tamil இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 2 : Uyirin osai : Questions and Answers Chapter 2 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை