உணவு | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 3rd Science : Term 2 Unit 1 : Food

   Posted On :  28.05.2022 02:54 am

3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : உணவு

வினா விடை

3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : உணவு : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா? தவறா?, ஓரிரு வாக்கியங்களில் விடையளி, பொருத்துக, ஓரிரு வாக்கியங்களில் விடையளி , வரையறு, சிந்தித்து விடையளி, மாணவர்கள் செயல்பாடு, செயல் திட்டம்

உணவு (3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1)


மதிப்பீடு 

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. 

1. ரொட்டி, கோதுமை மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை __________ மிகுந்தவை. 

அ) கொழுப்பு

ஆ) கார்போஹைட்ரேட் 

இ) புரதம்

ஈ) நார்ச்சத்து 

விடை : ஆ) கார்போஹைட்ரேட் 


2. சரிவிகித உணவில் __________ அடங்கியுள்ளன. 

அ) கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் 

ஆ) புரதம், கொழுப்பு மற்றும் தாதுஉப்புகள் 

இ) நார்ச்சத்து மற்றும் நீர் 

ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும் 


3. கேரட்டில் __________ உள்ளது. 

அ) வைட்டமின்-K

ஆ) வைட்டமின்-A 

இ) வைட்டமின்-E

ஈ) வைட்டமின்-D 

விடை: ஆ) வைட்டமின்-A 


4. உங்களுடைய உடலுக்குக் கெடுதல் தரக்கூடியது எது? 

அ) பச்சைக் காய்கறிகளை உண்பது 

ஆ) காய்கறிகளை நறுக்குவதற்கு முன் கழுவுவது 

இ) கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது 

ஈ) பருப்பு வகைகளை அதிகம் உண்பது

விடை: இ) கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது 


5. படத்தின் அடிப்படையில் இராமனுக்கு எந்த வேளை உணவை உண்பது அதிகம் பிடிக்கும்?

 அ) காலை உணவு   

ஆ) மதிய உணவு     

இ) இரவு உணவு

விடை: ஆ) மதிய உணவு



ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. உடல் கட்டுமானத்திற்கு உதவும் உணவுப் பொருள்களில் அதிகமாகக் __________ காணப்படுகிறது.

விடை : புரதம் 

2. உடல் சீராக இயங்குவதற்கு உதவுவது __________ ஆகும். 

விடை: தாது உப்புகள் 

3. உடல் வளர்ச்சிக்கும் கட்டுமானத்திற்கும் பயன்படுவது __________

விடை: சரிவிகித உணவு

4. முளைகட்டிய தானியங்களில் __________ அதிகமாகக் காணப்படுகிறது. 

விடை: புரதம் 

5. ஒரு நாளின் இரண்டாவது உணவு வேளையை __________ என அழைக்கிறோம்.

விடை: மதிய உணவு



இ. பொருத்துக. 

1. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு - உடல் வளர்ச்சிக்கு உதவுதல் 

2. வைட்டமின்கள்  - உடல் செயல்களை ஒழுங்குபடுத்துதல் 

3. புரதம் - ஆற்றல் தரும் உணவு 

4. தாது உப்புகள் - நோய் எதிர்ப்பு சக்தி 


விடை : 

1. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு - ஆற்றல் தரும் உணவு 

2. வைட்டமின்கள் - நோய் எதிர்ப்பு சக்தி 

3. புரதம் - உடல் வளர்ச்சிக்கு உதவுதல் 

4. தாது உப்புகள் - உடல் செயல்களை ஒழுங்குபடுத்துதல்



ஈ. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

1. உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் எத்தனை? அவை யாவை? 

உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் 5 அவை:

• கார்போஹைட்ரேட் 

• புரதங்கள்

• கொழுப்புகள் 

• உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்) 

• தாதுஉப்புகள் 


2. சிவா 6 வயது நிரம்பியவன். அவனுக்கு அதிக அளவு புரதம் தேவைப்படுகிறது. அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

• புரதங்கள் உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுப்பொருட்கள் எனப்படுகின்றன. 

• அவை திசுக்களின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் புதுப்பித்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

• எனவே சிவாவுக்கு அதிக அளவு புரதம் தேவைப்படுகிறது.


3. சரிவிகித உணவு என்றால் என்ன?

• நாம் உண்ணும் உணவில் அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான அளவில் கலந்திருந்தால் அதை சரிவிகித உணவு என்கிறோம். 

• இதில் நார்ச்சத்தும் நீரும் அடங்கும்.

• இது நம் உடல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவுகிறது. 


4. ஒரு நாளைக்கு எந்தெந்த வேளைகளில் உணவு உண்ண வேண்டும்?

ஒரு நாளைக்கு காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் உணவு உண்ண வேண்டும். 


5. சில பாரம்பரிய உணவு வகைகளை எழுதுக.

கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, வரகு மற்றும் கம்பு போன்ற இயற்கையில் கிடைக்கும் பாரம்பரிய உணவு வகைகள் ஆகும். 


6. வீட்டுத்தோட்டத்தின் பயன்கள் ஏதேனும் மூன்றினை எழுதுக.

• இது மிக எளிமையான முறை ஆகும். 

• வீணாகும் நீர் இதனால் மறுசுழற்சி செய்யப்படுகிறது. 

• பணத்தை சேமிக்கலாம். 

• காய்கறிகள் தரமானதாகவும் நல்ல சத்தானதாகவும் இருக்கும்.



உ. செயல்திட்டம்

உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் அடங்கிய படத்தொகுப்பைத் தயார் செய்க. 




ஆயத்தப்படுத்துதல்

அ) தவிர்க்கப்பட வேண்டிய உணவுப் பொருள்கள் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

ஆ) சத்தான உணவுப் பொருள்கள் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இ) குறைந்த அளவே உண்ண வேண்டிய உணவுப் பொருள்கள் மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.


எழுதுவோமா!


ஆற்றல் அளிக்கும் உணவுப் பொருள்கள்

1. அரிசி

2. கோதுமை

3. உருளைக்கிழங்கு

4. ரொட்டி

உடலைப் பாதுகாக்கும் உணவுப் பொருள்கள்

1. கீரை வகைகள்

2. ஆரஞ்சு

3. நெல்லிக்காய்

உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுப் பொருள்கள்

1. மீன்

2. முட்டை

3. கொட்டைகள்

4. முளை கட்டிய தானியங்கள்


நிரப்புவோமா!

அ. பின்வரும் உணவுப் பொருள்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் யாவை? 

1. சாதத்தில் கார்போஹைட்ரேட் ஊட்டச்சத்து காணப்படுகிறது. 

2. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு ஊட்டச்சத்து காணப்படுகிறது. 

3. முட்டையில் புரத ஊட்டச்சத்து காணப்படுகிறது. 

4. அத்திப்பழத்தில் தாது உப்புகள் ஊட்டச்சத்து காணப்படுகிறது. 

5. கேரட்டில் வைட்டமின் (உயிர்ச்சத்து) ஊட்டச்சத்து காணப்படுகிறது. 


ஆ. பின்வரும் அட்டவணையைப் பூர்த்தி செய்க.



கண்டறிவோமா!

இடம் மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி வார்த்தைகளைக் கண்டறிந்து கட்டத்தில் வட்டமிடுக. (ஒரு வார்த்தை உங்களுக்காக காட்டப்பட்டுள்ளது) 

றிய்காக   -  காய்கறி

உர்சயிச்த்து   -  உயிர்ச்சத்து 

கப்தாஉபுள்து  -  தாது உப்புகள் 

ல்பா  -  பால் 

ர்நீ  -  நீர்

ய்நெ  -  நெய்

சிரிஅ  -  அரிசி

ட்முடை  -  முட்டை 

ன்மீ  -  மீன்


நாம் செய்வோமா!

உங்கள் மதிய உணவு வகையைப் பட்டியலிடுக.

ஊட்டச்சத்துகளுக்கு ஏற்றவாறு உங்கள் உணவுப்பட்டியலை வகைப்படுத்தி, அது சரிவிகித உணவா என்பதைக் கண்டறிக.


புரதம்

முட்டை 

கார்போஹைட்ரேட்

அரிசி 

உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாது உப்புகள் 

கேரட், வாழைப்பழம் 

கொழுப்பு 

மாமிசம்



நிரப்புவோமா!

உங்கள் நண்பர்கள் எந்தெந்த உணவை உண்ண விரும்புகிறார்கள் என்று கேட்டு, அட்டவணையைப் பூர்த்தி செய்க. 




பதிலளிப்போமா!

படங்களில் உள்ள பல்வேறு செயல்களை உற்றுநோக்கி, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

1. எந்தெந்த செயல்கள் உடல் நலத்திற்கு ஏற்றவை? 

2, 4 மற்றும் 5. 

2. எந்தெந்த செயல்கள் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல? 

1 மற்றும் 3.



விடையளிப்போமா!

தமிழ்நாட்டின் சில முக்கிய உணவு வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்கு ஏற்ற உணவு வகைகளை எடுத்து எழுதுக. 

(அல்வா, முறுக்கு, பலாப்பழம், வாசனைப் பொருள்கள், கடலை மிட்டாய், மாம்பழம், தேனீர்) 

1. மணப்பாறை முறுக்கு 

2. நீலகிரி  :  தேயிலை 

3. பண்ருட்டி  :  பலாப்பழம் 

4. கொல்லிமலை  :  வாசனைப் பொருள்கள் 

5. திருநெல்வேலி  :  அல்வா 

6. கோவில்பட்டி  :  கடலைமிட்டாய் 

7. சேலம்  :  மாம்பழம்



கலந்துரையாடுவோமா! 

1. படங்களை உற்றுநோக்கு. இதில் யாருக்கு அதிக சத்தான உணவு தேவைப்படுகிறது? ஏன்?

ஆ-வுக்குச் சத்தான உணவு தேவைப்படுகிறது. 

காரணம்: 

அ-வுக்கு மன உழைப்பு (மூளை சார்ந்தது). 

ஆனால் ஆ-வுக்கு உடல் உழைப்பு. எனவே சத்தான உணவு தேவைப்படுகிறது. 


2. உங்களது பெற்றோர்கள் அனைத்துப் பண்டிகைகளுக்கும் ஒரே மாதிரியான உணவு வகைகளையே சமைக்கிறார்களா? இல்லையெனில், எந்தெந்த விழாக்களுக்கு என்னென்ன உணவு வகைகளைத் தயாரிக்கிறார்கள் என்பதைப் பட்டியலிடுக. 




நாம் செய்வோமா! 

அ) கீழ்க்காணும் வட்டங்களில் பராம்பரிய உணவிற்கு ‘பச்சை' வண்ணமும் நவீன கால உணவிற்கு ‘சிவப்பு' வண்ணமும் தீட்டுக. 

கேழ்வரகு கூழ் - ப

பீட்சா - சி    

தினை

கேழ்வரகுக் களி – ப

சாமை சோறு - ப

கம்பு – ப

பரோட்டா - சி  

நூடுல்ஸ் - சி

கேழ்வரகு அடை – ப

பர்கர் - சி

பிரியாணி - சி

வறுவல் – சி

ப - பாரம்பரிய உணவு; சி - நவீன கால உணவு



Tags : Food | Term 2 Chapter 1 | 3rd Science உணவு | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு அறிவியல்.
3rd Science : Term 2 Unit 1 : Food : Questions with Answers Food | Term 2 Chapter 1 | 3rd Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : உணவு : வினா விடை - உணவு | இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 1 : உணவு