ஊராட்சி மன்றம் | முதல் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 3rd Social Science : Term 1 Unit 3 : Panchayat

   Posted On :  18.05.2022 10:37 pm

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 3 : ஊராட்சி மன்றம்

வினா விடை

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 3 : ஊராட்சி மன்றம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
ஊராட்சி மன்றம் ( முதல் பருவம் அலகு 3 : 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்)

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு: 

1. ஊராட்சி என்பது __________ அரசில் அடங்கும். 

அ) மாவட்டம் 

ஆ) மாநிலம்

இ) கிராமம்

விடை: இ) கிராமம் 


2. பஞ்சாயத் ராஜ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் __________ 

அ) காமராசர்

ஆ) மகாத்மா காந்தி 

இ) நேரு

விடை: ஆ) மகாத்மா காந்தி 


3. மூன்றடுக்கு முறையின் அடிப்படை __________ ஊராட்சி. 

அ) மாவட்டம் 

ஆ) வட்டாரம்

இ) கிராமம்

விடை: இ) கிராமம் 


4. ஊராட்சி மன்றத் துணைத்தலைவரை யார் தேர்ந்தெடுப்பர்? 

அ) மக்கள் 

ஆ) வார்டு உறுப்பினர் 

இ) மாவட்ட ஆட்சியர்

விடை: அ) மக்கள் 


5. கிராம சபை உறுப்பினர் பணிக்காலம் __________ 

அ) 15 ஆண்டுகள் 

ஆ) 10 ஆண்டுகள் 

இ) 5 ஆண்டுகள்

விடை: 5 ஆண்டுகள் 


II. பொருத்துக: 

1. குடவோலை     - அ) வளர்ச்சித்திட்டம்

2. ஊராட்சி மன்றம் ஆ) கட்டாயப்பணி 

3. மரம் நடுதல்     - இ) பராம்பரிய தேர்தல் முறை 

4. தெருவிளக்கு    - ஈ) தன்னார்வ பணி 

5. கிராம சபை     - உ) 500க்கு மேல் மக்கள்


விடைகள்

1. குடவோலை     - இ) பராம்பரிய தேர்தல் முறை 

2. ஊராட்சி மன்றம் – உ) 500க்கு மேல் மக்கள் 

3. மரம் நடுதல்     - ஈ) தன்னார்வ பணி 

4. தெருவிளக்கு    – ஆ) கட்டாயப்பணி 

5. கிராம சபை     - அ) வளர்ச்சித்திட்டம்



III. விடையளி 

1. ஊராட்சி மன்றம் என்றால் என்ன? 

ஊராட்சி மன்றம் என்பது கிராம பஞ்சாயத்து ஆகும். 500 மற்றும் 500க்கு மேல் மக்களைக் கொண்டிருக்கும். 


2. குறிப்பு வரைக: ‘மூன்றடுக்கு முறை'

1. மாவட்ட அளவில் (ஜில்லா பரிஷத்) 

2. தாலுகா அளவில் (மண்டல் பரிஷத்/பஞ்சாயத்து சமிதி) 

3. கிராம அளவில் (கிராமப் பஞ்சாயத்து) 


3. ஊராட்சியின் கட்டாய பணிகளில் மூன்றினை எழுதுக. 

1. பொது கிணறு பராமரித்தல் 

2. குடிநீர் வழங்குவது

3. சிறிய பாலங்களைக் கட்டுதல் 


4. ஊராட்சியின் தன்னார்வ பணிகளில் மூன்றினை எழுதுக. 

1. சாலைகளின் ஓரங்களில் மரம் நடுதல். 

2. பொது அங்காடிகளை உருவாக்குதல்.

3. விளையாட்டு மைதானங்களை உருவாக்குதல். 


5. கிராம சபைக் கூட்டம் எப்போது நடைபெறும்? 

கிராம சபை கூட்டம் வருடத்திற்கு நான்கு முறை கூடவேண்டும். 

அந்த நாட்கள்: 

1. ஜனவரி 26

2. மே 1

3. ஆகஸ்ட் 15 

4. அக்டோபர் 2



செயல்பாடு விடையளிப்போம்

1. உங்கள் கிராம பஞ்சாயத்து தலைவரின் பெயரை எழுதுங்கள்.

எங்கள் கிராம பஞ்சாயத்து தலைவரின் பெயர் திரு. தமிழ்ச்செல்வன் 


2. உங்கள் கிராம பஞ்சாயத்தில் எத்தனை வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்? 

எங்கள் கிராம பஞ்சாயத்தில் 24 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.



செயல்பாடு நாம் எழுதுவோம்

உன் வகுப்பில் வகுப்பு தலைவரை குடவோலை முறையின் மூலம் தேர்ந்தெடு. 

என்னுடைய வகுப்பில் உள்ள மாணவர்களை அழைத்து தனி தாளில் அவர்கள் தலைவராக்க விரும்பும் மாணவனின் பெயரை எழுதச் சொல்லி ஒரு குடத்தில் போடச் சொல்வேன். 

பின்னர் யார் பெயர் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் எழுதிய தாளில் உள்ளதோ, அவரே வகுப்புத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.



சிந்தனை செய்

1. உனது கிராமத்தில் நூலகம் உள்ளதா? 

இல்லை. 


2. உனது கிராமத்தில் பூங்கா உள்ளதா? 

ஆம். சிறிய பூங்கா ஒன்று உண்டு. 


3. உனது கிராமத்தில் விளையாட்டு மைதானம் உள்ளதா? 

ஆம், சிறிய விளையாட்டு மைதானம் உள்ளது.


உனது கிராமம் ஏதாவது விருது வாங்கியுள்ளதா? 

என்னுடைய கிராமம் “தூய்மை கிராமம்” என்ற விருது பெற்றுள்ளது.



செயல்பாடு

செயல்திட்டம் 

உங்கள் பஞ்சாயத்தில் இருந்து கிடைக்கும் வசதிகளைப் பற்றி எழுதுக. 

போதிய குடிநீர் (வசதிகள்) கிடைத்தல். 

நல்ல சாலைகளும் பூங்காக்களையும் அமைத்தல்.

கிராம தூய்மையைப் பாதுகாத்தல்.

கிராம நூலகத்தைப் பராமரித்தல். 

சரியான மின்சாரம் வழங்குதல்.

கிராம (தூய்மை) பாதாளச்சாக்கடையை சரிசெய்தல். 

நீர் நிலைகளைச் சரிசெய்தலும் பாதுகாத்தலும். 

விளையாட்டுத் திடல்களைப் பராமரித்தல். 

உழவர் சந்தை போன்ற பொது அங்காடிகளைப் பராமரித்தல்.


Tags : Panchayat | Term 1 Chapter 3 | 3rd Social Science ஊராட்சி மன்றம் | முதல் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
3rd Social Science : Term 1 Unit 3 : Panchayat : Questions with Answers Panchayat | Term 1 Chapter 3 | 3rd Social Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 3 : ஊராட்சி மன்றம் : வினா விடை - ஊராட்சி மன்றம் | முதல் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : முதல் பருவம் அலகு 3 : ஊராட்சி மன்றம்