மாவட்ட நிருவாகம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 3rd Social Science : Term 2 Unit 3 : District Administration

   Posted On :  19.05.2022 01:33 am

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 : மாவட்ட நிருவாகம்

வினா விடை

3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 : மாவட்ட நிருவாகம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
மாவட்ட நிருவாகம் ( இரண்டாம் பருவம் அலகு 3 : 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் )

மதிப்பீடு 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

1. மாவட்ட நிருவாகத்தின் தலைவர் __________ ஆவார்.

அ) மாவட்ட ஆட்சியர் 

ஆ) நீதிபதி 

இ) காவல்துறைக் கண்காணிப்பாளர்

விடை : அ) மாவட்ட ஆட்சியர் 


2. அரசாங்க மருத்துவமனைகளுக்கு __________ பொறுப்பாளர் ஆவார். 

அ) காவல்காரர்கள் 

ஆ) மருத்துவ அலுவலர்கள் 

இ) ஓட்டுநர்கள்

விடை : ஆ) மருத்துவ அலுவலர்கள் 


3. காவல்துறை __________ பாதுகாக்கிறது. 

அ) உடல்நலம்

ஆ) வனம்

இ) சட்டம் மற்றும் ஒழுங்கு

விடை : இ) சட்டம் மற்றும் ஒழுங்கு 


4. __________ மாவட்டத்தின் கல்வித்துறையின் செயல்பாட்டை கண்காணிப்பார். 

அ) வன அலுவலர் 

ஆ) முதன்மைக் கல்வி அலுவலர் 

இ) மருத்துவ அலுவலர்

விடை : ஆ) முதன்மைக் கல்வி அலுவலர் 


5. மாவட்டத்தில் சுகாதாரத்தைப் பேணுவதற்கு __________ அறிவுரை வழங்குவார் 

அ) மருத்துவ அலுவலர் 

ஆ) வன அலுவலர்  

இ) வருவாய்த் துறை அலுவலர்

விடை : அ) மருத்துவ அலுவலர்



II. சரியா / தவறா எழுதுக. 

1. மாவட்ட ஆட்சியர் UPSC நடத்தும் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

[ விடை : சரி

 

2. ஆசிரியர், நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பதனைக் கண்காணிப்பார்.

[ விடை: தவறு


3. முதன்மைக் கல்வி அலுவலர் கல்வித்துறையைக் கண்காணிப்பார். 

[ விடை : சரி


4. காவல் அலுவலர்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்குப் பொறுப்பாளர்கள் ஆவர்.

[ விடை: தவறு


5. வனத்துறை அலுவலர் வனத்துறைக்குப் பொறுப்பாளர் ஆவார். 

[ விடை : சரி ]



III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

1. மாவட்ட நிருவாகத்தின் தலைமை யார்?

மாவட்ட ஆட்சியர். 


2. மாவட்ட ஆட்சியர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?

இந்திய ஆட்சிப்பணி (I.A.S.) அதிகாரிகள் U.P.S.C (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 

இந்த இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். 


3. மாவட்டத்திலுள்ள ஏதேனும் மூன்று துறைகளின் பெயர்களை எழுதுக.

காவல்துறை 

மருத்துவத்துறை 

வனத்துறை மற்றும்

கல்வித்துறை 


4. மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை யார் பாதுகாக்கிறார்கள்?

காவல்துறை அதிகாரிகள். 


5. மருத்துவ அலுவலரைப் பற்றி எழுதுக.

மருத்துவ அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொறுப்பாளர்கள் ஆவர். 

அவர்கள் சுகாதாரத்தைப் பற்றியும், உடல்நலத்தைப் பற்றியும் அறிவுரை வழங்குவார்கள்.



செயல் திட்டம்.

மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு துறைகளின் பெயர்களை எழுதி வருக.

சுகாதாரத்துறை

பொதுப்பணித்துறை 

காட்டு இலாகாத்துறை

கல்வித்துறை 

அஞ்சல்துறை 

போக்குவரத்துத்துறை



செயல்பாடு 

I. விடுபட்ட இடங்களைக் குறிப்புகளைக் கொண்டு நிரப்புக. 

மாவட்டத்தின் நிருவாகத் தலைமை - மாட் ட்சியர் 

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பவர் - காலர் 

உடல்நலம் குறித்த அறிவுரை வழங்குபவர் - ருத்துவர் 

அறநெறிகளைப் போதிப்பவர் -சிரியர் 


II. சரியா / தவறா எழுதுக.

1. மாவட்ட ஆட்சியர் இயற்கைப் பேரிடரின்போது தக்க நடவடிக்கைகள் எடுப்பார். [ சரி ] 

2. மாவட்ட ஆட்சியர் உள்ளாட்சி அமைப்புகளை மேற்பார்வையிடமாட்டார். [ தவறு ] 

3. காவல்துறைக் கண்காணிப்பாளர் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யமாட்டார். [ தவறு ] 

4. மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைகளின் தலைமைகளோடு இணைந்து மாவட்ட நிருவாகம் அமைதியாக நடைபெற பணியாற்றுவார். [ சரி ]



சிந்தனை செய்

1. காவலர்களின் சில கடமைகளைக் கூறுக.

திருடர்களிடமிருந்து மக்களைக் காத்தல். 

சாலை விபத்துகளிலிருந்து மக்களைப் பாதுகாத்தல். 

வாகனங்களின் போக்குவரத்தை முறைப்படுத்துதல்.

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்தல். 


2. மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்டத்தின் கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறது.

பள்ளிகளை ஆய்வு செய்தல். 

சிறந்த ஆசிரியர்களைக் கௌரவித்தல். 

தனியார் நிர்வாகப் பள்ளிகளுக்கு ஊதியம் வழங்கப் பரிந்துரைத்தல்.

கல்வியின் தரத்தை ஆய்வு செய்தல். 

மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்குதல்.




Tags : District Administration | Term 2 Chapter 3 | 3rd Social Science மாவட்ட நிருவாகம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
3rd Social Science : Term 2 Unit 3 : District Administration : Questions with Answers District Administration | Term 2 Chapter 3 | 3rd Social Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 : மாவட்ட நிருவாகம் : வினா விடை - மாவட்ட நிருவாகம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 : மாவட்ட நிருவாகம்