Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | நேரத்தை மணிகளில் கணக்கிடல்

காலம் | இரண்டாம் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு கணக்கு - நேரத்தை மணிகளில் கணக்கிடல் | 3rd Maths : Term 2 Unit 4 : Time

   Posted On :  20.06.2022 04:23 am

3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 4 : காலம்

நேரத்தை மணிகளில் கணக்கிடல்

கடிகாரத்தில் 1 முதல் 12 வரையான எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். கடிகாரத்தில் இரண்டு முள் இருக்கும்.

அலகு 4

காலம்




நேரத்தை மணிகளில் கணக்கிடல் 

வகுப்பறையில்

குழந்தைகள்: வணக்கம் அய்யா.

ஆசிரியர் : வணக்கம் குழந்தைகளே. ரம்யா பள்ளிக்கு நீ எந்த நேரத்தில்   வந்தாய்?

ரம்யா : 8 மணிக்கு வந்தேன், அய்யா.

ஆசிரியர் : நீ எவ்வாறு நேரத்தைக் கணக்கிட்டாய்? 

ரம்யா : என் அம்மா கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைச் சொல்வார்கள். 

ஆசிரியர் : உனக்குக் கடிகாரம் பார்த்து நேரம் சொல்லத் தெரியுமா? 

ரம்யா : எனக்குத் தெரியாது அய்யா.

ஆசிரியர் : குழந்தைகளே! இன்று நாம் கடிகாரம் பார்த்து நேரத்தைக்  கணக்கிட கற்றுக் கொள்வோமா? 

கடிகாரத்தை உற்று நோக்குங்கள். 

கடிகாரத்தில் 1 முதல் 12 வரையான எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். கடிகாரத்தில் இரண்டு முள் இருக்கும்.


பெரிய முள் நிமிட முள் ஆகும். அது நேரத்தை நிமிடங்களில் காட்டும்.


சிறிய முள் மணி முள் ஆகும். அது நேரத்தை மணிகளில் காட்டும்.

நிமிடமுள் 12-இல் இருக்கும் போது, மணி முள் மணியைக் குறித்துக்காட்டுகிறது.


5 மணி 


கடிகாரத்தின் சிறிய முள் 5 இல் உள்ளது. 

கடிகாரத்தின் பெரிய முள் 12 இல் உள்ளது. 

எனவே, நேரம் 5 மணி ஆகும். 

இதனை நாம் 5:00 மணி என எழுதுகிறோம்.

ஒரு மணி நேரம் கழித்து.

6 மணி 


கடிகாரத்தின் சிறிய முள் 6 இல் உள்ளது. 

கடிகாரத்தின் பெரிய முள் 12 இல் உள்ளது. 

எனவே, நேரம் 6 மணி ஆகும். 

இதனை நாம் 6:00 மணி என எழுதுகிறோம்.


செயல்பாடு 1

மணி முள் இருக்கும் இடத்தைப் பார்த்து நேரத்தைக் கீழே உள்ள கட்டங்களில் எழுதவும்.



செயல்பாடு 2 

கொடுக்கப்பட்டுள்ள நேரத்தைக்காட்டப் பின்வரும் கடிகாரங்களில் முட்களை  வரைக.



செயல்பாடு 3

கீழே குறிப்பிட்டுள்ள நேரத்தைக் காட்டும் சரியான கடிகாரத்தை []குறியிடவும் 




Tags : Time | Term 2 Chapter 4 | 3rd Maths காலம் | இரண்டாம் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 2 Unit 4 : Time : Reading time correct to the hour Time | Term 2 Chapter 4 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 4 : காலம் : நேரத்தை மணிகளில் கணக்கிடல் - காலம் | இரண்டாம் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : இரண்டாம் பருவம் அலகு 4 : காலம்