Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | மாணவர்கள் செயல்பாடு

மின்னோட்டவியல் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர்கள் செயல்பாடு | 7th Science : Term 2 Unit 2 : Electricity

   Posted On :  09.05.2022 11:15 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : மின்னோட்டவியல்

மாணவர்கள் செயல்பாடு

7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 :மின்னோட்டவியல் : மாணவர்கள் செயல்பாடு கேள்விக்கான பதில்கள்

செயல்பாடு :1

உனது உலர்ந்த தலைமுடியைச் சீப்பால் சீவு, சீப்பால் தலையை சீவிய உடன் அதை சிறு காகிதத் துண்டின் அருகில் கொண்டு வரும் போது, நீ என்ன காண்கிறாய்?


பிளாஸ்டிக் நாற்காலியில் இருந்து நீ எழுந்தவுடன் நீ அணிந்திருக்கும் நைலான் சட்டை நாற்காலியுடன் ஒட்டிக்கொண்டு பட பட என ஒலியை எழுப்புகிறது, இவ்வொலி உருவாக காரணம் என்ன? 

நமது கையில் தேய்க்கப்பட்ட பலூன் எந்த வித தொடுவிசையும் இன்றி சுவற்றில் ஒட்டிக் கொள்கிறது, இவை அனைத்திற்குமான காரணம் நீ அறிவாயா? 

மேற்காண் அனைத்து செயல்பாடுகளிலும், ஓர் பொருளின் பரப்பின் மீது மற்றொரு பொருளின் பரப்பை தேய்க்கும் போது, அவை மின்சுமை அடைகிறது


1 மில்லி ஆம்பியர் (mA) = 10-3 ஆம்பியர் 

அதாவது 1/1000 ஆம்பியர் ஆகும் 

1 மைக்ரோ ஆம்பியர் (µA) = 10-6 ஆம்பியர் 

அதாவது 1/1000000 ஆம்பியர் ஆகும்


செயல்பாடு : 2

வீட்டில் நாமே மின்சாரம் தயாரிக்கலாமா? 

தேவையானவை

1. துத்தநாக மற்றும் தாமிர மின்வாய்கள் 

2. மின் விளக்கு 

3. இணைப்புக் கம்பிகள் 

4. எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப்பழம் 


செய்முறை

• படத்தில் காட்டியுள்ளபடி ஓர் சுற்றை உருவாக்கவும். 

•  சுற்றில் எலுமிச்சைப்பழம் இணைக்கப்படும் போது மின்விளக்கின் பொலிவினை உற்று நோக்கவும், 

• மற்ற பழங்களைப் பயன்படுத்தி சோதனையைத் திரும்ப செய்யவும், பட்டியலிடப்பட்ட வெவ்வேறான பழங்களை சுற்றில் மாற்றி இணைக்கப்படும் போது மின்விளக்கின் பொலிவில் ஏதேனும் வேறுபாட்டை கவனித்தாயா?

 எந்தப் பழம் சுற்றில் இணைக்கப்படும் போது அதிகப் பொலிவை கொடுக்கிறது? ஏன்? (உனக்கு இதற்கான காரணம் தெரியவில்லையெனில் உனது ஆசிரியரிடம் இருந்து மிகச் சரியான காரணத்தைக் கண்டறியவும்). 

காரணம் கண்டறிதல் 

மேற்காண் செயல்பாட்டில் எது மின்விளக்கை பொலிவுறச் செய்தது. மின்விளக்கின் பொலிவில் ஏன் வேறுபாடு காணப்பட்டது? காரணம் என்னவெனில் மின்விளக்குடன் இணைக்கப்பட்ட பழங்கள் வெவ்வேறு அளவிலான மின்னாற்றலை உருவாக்கியதுதான். 

மிகச் சிறிய அளவிலான மின்னோட்டத்தை மிகக் குறைந்த காலத்திற்கு உருவாக்கும் மூலங்கள் மின்கலன்கள் அல்லது மின் வேதிகலன்கள் என அழைக்கப்படுகின்றன, மின்கலன்கள் வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றுபவையாகும்.


செயல்பாடு : 3 

நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். நான் சோர்ந்து போகப்போகிறேன். நீங்கள் என்னை எழுப்ப விரும்பினால் எனக்கு என்ன முதலுதவி அளிப்பீர்கள்? 

மின்சுற்றில் இணைப்பதன் மூலம் இரண்டாம் நிலை கலத்தில் முதலுதவி அளிப்பேன்


செயல்பாடு : 4 

மின்சாவியினை உருவாக்குவோமா

நாமே நம் மின்சுற்றினுக்கு மின்சாவியை உருவாக்குவோம். 10 செ.மீ நீளமுள்ள நீளமான இரும்புத் தகட்டை எடுத்துக் கொள், படத்தில் காட்டியுள்ள படி இருமுறை மடித்துக்கொள், மரக்கட்டையின் வளைவு வழியே ஓர் ஆணியைச் செருகு, மரக்கட்டையின் மற்றொரு முனையில் ஆணியினை பயன்படுத்தி தகட்டின் மற்றொரு முனையை அமை, இரும்புத் துண்டானது முதல் ஆணியைத் தொடாவண்ணம் அதன் மேல் பொருத்தி மரக்கட்டையின் மறுமுனையில் இரும்புத் துண்டு மற்றொரு முனையை ஆணியின் உதவியால் சொருகு, தற்போது மின்சாவியானது தயாராகிவிட்டது. 


உனது மின்சாவியினை சோதிக்க நீ விரும்புகிறாயா? அவ்வாறு செய்ய முதலில் படத்தில் காட்டப்பட்டுள்ள படி மின்சுற்றை அமைக்கவும், மின்சுற்றினை திறக்கவும் மூடவும் மின்சாவியினை நீ எவ்வாறு பயன்படுத்தவாய்?

 மின்சாவியின் உலோகத்துண்டானது ஆணி மீது அழுத்தியவுடன் மின்விளக்கு ஒளிர்ந்தாலும் அழுத்துவது நிறுத்தப்பட்டவுடன் மின்விளக்கு ஒளிர்வது நின்றுவிட்டால் நீ உருவாக்கிய தொடுசாவியானது வேலை செய்கிறது என்பது பொருள், நீ உருவாக்கிய தொடுசாவியானது எளிய சாவியாகும், உனது வீடுகளிலும் பள்ளிகளிலும் மின்சாவிப்பலகையில் வேறுபட்ட மின்சாவிகளை நீ பார்த்திருப்பாய். 

சாவிகளானது அவற்றின் பயன்பாடு கையாளும் விதம் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும், ஆனால் அவை அனைத்தும் ஒரே தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது, மின்சாவியானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளை உலோகத் தகட்டுடன் உள்ளகத்தே இணைக்கப்பட்ட ஓர் இயங்கு சாதனமாகும், பொதுவாக பயன்படுத்தப்படும் மின்சாவிகளானது கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


நமது உடலில் இயற்கையாக உருவாகும் மின் சைகைகளின் துலங்களாக அனைத்து தசைகளும் இயங்கும்


குறுக்கு மின்சுற்று

உன் வீட்டருகில் அமைந்திருக்கும் மின்கம்பங்களில் சில நேரங்களில் உருவாகும் தீப்பொறியை நீ கண்டு இருக்கிறாயா? அந்த மின்சார தீப்பொறி உருவாக காரணம் உனக்கு தெரியுமா? இது மின் பாதையில் ஏற்படும் குறுக்கு மின்சுற்றினால் உருவாகிறது, குறுக்குச் சுற்று என்பது இரு மின்னோட்டம் செல்லும் கடத்திகளுக்கு இடையே ஏற்படும் மிகக் குறைந்த மின்தடையினால் ஏற்படும் மின்சுற்று, குறுக்கு மின்சுற்று ஆகும்.

வெல்டிங் செய்தல், குறுக்கு மின் சுற்றின் விளைவாக உருவாகும் வெப்பத்தின் நடைமுறைப் பயன்பாடே ஆகும்.


தாமிரத்தாலான மின் கடத்திகள், மிக குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, தாமிரக் கம்பிகள் வீட்டு மின் சுற்றுகளில் பயன்படுத்துகின்றன. இவ்வகை கம்பிகள் அதிக மின் தடையைக் கொண்டுள்ள பொருட்களால் சூழப்பட்டு இருக்கும். இந்த பொருட்கள் பொதுவாக நெகிழ்வான பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன.


சிம் கார்டுகள், கணினிகள், மற்றும் ATM கார்டுகள் எதனால் உருவாக்கப் பட்டுள்ளன என்று உனக்குத் தெரியுமா? 

சிம் கார்டுகள், கணினிகள், மற்றும் ATM கார்டுகளை பயன்படுத்தப்படும் சிப்புகளானது சிலிகான் மற்றும் ஜெர்மேனியம் போன்ற குறைக்கடத்திகளால் ஆக்கப்பட்டிருக்கும். ஏனெனில், அவற்றின் மின் கடத்துத்திறன் மதிப்பானது, நற்கடத்திகள் மற்றும் காப்பான்களுக்கும் இடையில் அமையப்பெற்றிருக்கும்.


செயல்பாடு :5

தேவையானவை

* இரும்பு ஆணி 

* மின்கல அடுக்கு, மின் அவிழ்பான்மற்றும் மின் கம்பி 

சுமார் 75 செ.மீ  நீளமான ஓர் காப்பிடப்பட்ட நெகிழும் தன்மை கொண்ட ஓர் கம்பியும் 8 முதல் 10 செ.மீ நீளம் கொண்ட ஓர் இரும்பு ஆணியையும் எடுத்துக் கொள், ஆணியைச் சுற்றி கம்பிச் சுருள் போல் கம்பியை மிகவும் நெருக்கமாக சுற்றிக் கொள், படத்தில் காட்டியுள்ளபடி மின்கலத்துடன் கம்பியின் திறந்த முனைகளை இணை, ஆணியின் முனைக்கருகில் சில குண்டூசிகளை வை, தற்போது பாயும் மின்னோட்டத்தை செலுத்தும் போதும் நிறுத்தும் போதும் என்ன நிகழ்கிறது?

மின்சாவியானது மூடிய நிலையில் உள்ள போது ஆணியின் முனைகளில் குண்டூசிகள் ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும்,

மின்சாவியானது திறந்த நிலையில் மின்னோட்டம் பாய்வது நிறுத்தப்பட்டவுடன் கம்பிச் சுருள் தனது காந்தத் தன்மையை இழந்துவிடுகிறது,

மின்னோட்டம் பாயும் திசையைப் பொறுத்து கம்பிச் சுருளின் இரு முனைகளிலும் மின்முனைவுகள் மாற்றமடையும்




Tags : Electricity | Term 2 Unit 2 | 7th Science மின்னோட்டவியல் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 2 Unit 2 : Electricity : Student Activities Electricity | Term 2 Unit 2 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : மின்னோட்டவியல் : மாணவர்கள் செயல்பாடு - மின்னோட்டவியல் | இரண்டாம் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : மின்னோட்டவியல்