Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | துணைப்பாடம்: இந்திய வனமகன் (நேர்காணல்): கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: இந்திய வனமகன் (நேர்காணல்): கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu

   Posted On :  13.07.2022 02:55 am

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு

துணைப்பாடம்: இந்திய வனமகன் (நேர்காணல்): கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : துணைப்பாடம்: இந்திய வனமகன் (நேர்காணல்): கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 2 : விரிவானம் : இந்திய வனமகன்)



பாடநூல் மதிப்பீட்டு வினா 

ஜாதவ்பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்? 

முன்னுரை:

அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஜாதவ்பயேங். இந்திய வனமகன்' என்று இவர் அழைக்கப்படுகிறார். பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள மிகப்பெரிய தீவில் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கினார். அதனை எப்படி உருவாக்கினார்? என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. 

மரம் வளர்க்கும் எண்ணம்:

1979ல் பிரம்மபுத்திரா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. மரங்கள் இல்லாத தீவில் பாம்புகள் கரை ஒதுங்கின. சில பாம்புகள் இறந்தன. பல பாம்புகள் வெப்பம் தாங்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இக்காட்சி ஜாதவ்பயேங்கை மிகவும் பாதித்தது. ஊர்ப் பெரியவர்கள் ‘தீவில் மரங்கள் இல்லாததுதான் காரணம்' என்றனர். அவரிடம் தீவு முழுவதும் மரம் வளர்க்கும் எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. ஊர் மக்களிடம் தீவில் மரம் வளர்க்கலாம் என்று அவர் கூறிய போது, அதனை யாரும் ஏற்கவில்லை. 

விடா முயற்சி:

ஜாதவ்பயேங் தீவில் விதைகளை விதைக்கத் தொடங்கினார். நன்கு பராமரித்தார். ஆனால் அவைகள் முளைக்கவில்லை. வனத்துறை அறிவுறுத்தலால் மூங்கில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார். அவை நன்கு வளர ஆரம்பித்தது. அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.மூங்கிலைத் தவிர வேறு எந்த மரமும் இத்தீவில் வளரவில்லை. அசாம் வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவர்களின் அறிவுறுத்தலின்படி மண்புழுவுடன் சிவப்புக் கட்டெறும்பை அத்தீவு மண்ணில் விட்டார். சிறிது சிறிதாக மண்ணின் தன்மை மாறி பசும்புல்லும் மரங்களும் வளரத் தொடங்கின. 

புதிய காடு உருவானது:

மரங்களில் விளைந்த பழங்களை உண்டு, அதன் கொட்டைகளை விதையாகச் சேமித்து வைத்து விதைத்தார். கால்நடைகளை வளர்த்து அதன் சாணங்களை மரங்களுக்கு உரமாக்கினார். மழை பெய்யாத காலங்களில் பானை பெரிய மூங்கில் துணை கொண்டு சொட்டு சொட்டாக நீரினை மரங்களுக்குவிட்டார். மரங்கள் பெருகி வளர்ந்து, அத் தீவு பெருங்காடானது.யானைகள், பாம்புகள், கழுகுகள், காண்டாமிருகங்கள், புலிகள் முதலிய காட்டு விலங்குகள் வரத்தொடங்கின. 

முடிவுரை:

ஜாதவ்பயேங் போல நாமும் காட்டை உருவாக்க முயல்வோம். அதற்கு அடையாளமாக நம் வீட்டைச் சுற்றி மரங்களை நட்டு, அவை நன்கு வளரும் வரை காக்க வேண்டும். இந்திய வனமகன் வழியில் நாமும் செல்வோம்.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!

காட்டினை உருவாக்குவோம்!


கற்பவை கற்றபின்


உங்கள் பள்ளி அல்லது நீங்கள் வாழும் பகுதியில் மரக்கன்று ஒன்றை நடுங்கள். அதனை நாள்தோறும் பாதுகாத்து வாருங்கள். அதன் விவரங்களைப் பதிவேட்டில் பதிவு செய்யுங்கள்.



Tags : Term 1 Chapter 2 | 7th Tamil பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 1 Chapter 2 : Aninilal kaadu : Supplementary: Indiya vanamagan (nearkaanal): Questions and Answers Term 1 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு : துணைப்பாடம்: இந்திய வனமகன் (நேர்காணல்): கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு