Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | துணைப்பாடம்: காலம் உடன் வரும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: காலம் உடன் வரும்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam

   Posted On :  15.07.2023 05:57 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்

துணைப்பாடம்: காலம் உடன் வரும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : துணைப்பாடம்: காலம் உடன் வரும்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

'காலம் உடன் வரும்' - கதையைச் சுருக்கி எழுதுக.

விடை

முன்னுரை :

காலம் உடன் வரும் எனும் சிறுகதையை எழுதியவர் கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் ஆவார். நெசவுத் தொழிலில் ஏற்படும் இன்னல்களையும் நெசவாளர்களின் ஏழ்மை நிலையினையும் காட்டுவதாக இக்கதை அமைகிறது.

சுப்ரமணியத்தின் கவலை :

அனந்திகா நிறுவனத்திற்கு வழக்கமாக வெள்ளக்கோயில் தினேஷ் துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத் துணிகளை அனுப்பி வைப்பார்கள். ஒருநாள் துணி அனுப்புவது தாமதமாகிறது. தறி நெய்ய ஆள் கிடைப்பதில்லை. அதனால் துணி நெய்ய தாமதமாகிறது என்று எவ்வளவு சொல்லியும் அனந்திகா நிறுவனம் நாளைக்குள் கட்டாயம் துணிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்கிறது.

வழக்கமாகப் பாவு இணைக்கும் ரங்கன் ஊருக்குச் சென்று விட்டதால், அங்கு யாரும் இல்லை. மாணிக்கம் ஓட்டும் ஒரே ஒரு தறியில்தான் பாவு இருக்கிறது. அந்தப் பாவும் சற்று நேரத்தில் தீர்ந்து விடும். என்ன செய்வது என்று தெரியாமல் சுப்ரமணியம் மிகவும் கலங்கிப் போனார்.

நண்பன் ரகுவின் உதவி :

நண்பர் ரகு துணியகத்தில் கட்டாயமாகப் பாவு இணைப்பவர் யாராவது இருப்பார்கள். அங்கே போய் பார்க்கலாம் என்று ரகுவினுடைய தறிப்பட்டறைக்குச் செல்கிறார். பதற்றத்துடன் வந்த சுப்பிரமணியத்தை ரகு நெருங்கினார். அதற்குள் சுப்பிரமணியன் பாவு இணைக்க ஆள் வேண்டும். உடனடியாக யாரையாவது அனுப்பி உதவுங்கள் என்றார்.

அதற்கு ரகு மாயழகுவின் மனைவி ஒச்சம்மா பாவு இணைக்கும் 5 வேலையை நன்கு செய்வாள். ஆனால் இந்த இரவில் அவன் எப்படி அனுப்புவான் என்கிறார். இரட்டைச் சம்பளம் தருகிறேன் என்றார். ரகு தான் சொன்னதாகச் சொல்லி ஒச்சம்மாவை அழைத்துச் செல் என்கிறார். சுப்பிரமணி மாயழகு வீட்டிற்குச் செல்கிறார்.

மாயழகும் ஒச்சம்மாவும் :

ஒச்சம்மா உசிலம்பட்டி பக்கம் கிருஷ்ணாபுரம் மாயழகு வெள்ளி மலை அடிவாரத்தில் கோம்பைத் தொழுவு. திருமணமான பிறகு நிலையாக ஓரிடத்தில் வாழ வேண்டும் என்பதற்காக வெள்ளகோவில் வந்தனர். தன் குழந்தைகளைப் படிக்க வைக்க,தறி ஓட்டுவதைத் தவிர பிற தறி வேலைகள் அனைத்தையும் கற்றாள்.

பாவு பிணைத்தல் :

ரகு அனுப்பியதாகவும் தன் பிரச்சனையையும் சுப்பிரமணியம் எடுத்துரைக்கிறார். மாயழகு தன் மனைவி ஒச்சம்மாவை அவருடன் அனுப்புகிறார். தூங்கிக்கொண்டு இருக்கும் தன் கைக்குழந்தையுடன் செல்கிறாள். ஒச்சம்மா வர மாணிக்கத்தின் பாவு தீர்ந்து விடுகிறது. அங்கிருந்த பாவினைச் சரிசெய்து இருக்கும் வேளையில் குழந்தை விழித்துக் கொள்கிறது. குழந்தையைத் தூங்க வைத்தபடியே பாவை இணைக்கிறாள். வேலை முடிந்ததும் இரட்டைச் சம்பளத்தோடு சுப்பிரமணியம் அவளின் வீட்டிற்குக் கொண்டுபோய் சேர்க்கிறார்.

முடிவுரை :

இரவு பகல் பார்க்காமல் தன் வறுமையின் காரணமாகத் தறி பட்டறையில் வேலை செய்பவர்கள் வேலை செய்கின்றனர் என்பதை கதை மூலம் அறிய முடிகிறது.

 


கற்பவை கற்றபின்

 

 

1. காலம் உடன் வரும் - கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக்காட்டுக.

 

2. காலம் உடன் வரும் கதையில் இடம்பெற்றுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

விடை

ஆங்கிலச் சொற்கள் - தமிழ்ச்சொற்கள்

டெக்ஸ் - ஜவுளியகம் அல்லது துணியகம்

போன் - தொலைபேசி

லாரி – சரக்குந்து

டெம்போ - விசை வேக உந்து

கார் - மகிழுந்து

ஷிப்ட் - முறை

பீம் - தறிக்கட்கடை

டிசைன் - வடிவமைப்பு

ஜக் கார்டுகள் - சித்திர நெசவு

பெட்ஷீட் - படுக்கை விரிப்பு

டீ - தேநீர்

டேப் - ஒலிப்பேழை

டாட்டா - போய் வருக

Tags : Chapter 6 | 8th Tamil இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 6 : Vaiyam pugal vanigam : Supplementary: Kalam udan Varum: Questions and Answers Chapter 6 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் : துணைப்பாடம்: காலம் உடன் வரும்: கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 6 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம்