Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | துணைப்பாடம்: தலைக்குள் ஓர் உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: தலைக்குள் ஓர் உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 3 : Udalai Ombhomin

   Posted On :  12.07.2023 03:03 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின்

துணைப்பாடம்: தலைக்குள் ஓர் உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் : துணைப்பாடம்: தலைக்குள் ஓர் உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.

விடை

முன்னுரை :

உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளைதான். அதன் செயல்பாடுகள் விந்தையானவை; புதிரானவை. அவற்றைப் பற்றிக் காண்போம்.

இடப்பாகக் செயல்:

மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பகுதியின் அதிகப்படியான பாதிப்பினால்தான் என்று கூறுவார்கள்.

இடது பாதிதான் பேச, எழுத, கணக்கிட தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சினைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெல்லாம் இடதுபகுதி பார்த்துக் கொள்கிறது. நம் மொழி அறிவும் இடது பகுதியைச் சார்ந்ததே.

வலப்பாகச் செயல்:

இடது பாதி அண்ணன் என்றால் வலதுபாதி தம்பி போன்றது. இந்தப் பாதியால்தான் நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் வலது பாதியில்தான். வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம். வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்களாக, பாடகர்களாக, நடனக் கலைஞர்களாக, இசைக்கருவிகளைக் கையாளுபவர்களாக, கலைத் திறன்கள் பெற்றவர்களாகத் திகழ்வர். இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்களாக, கணக்கு ஆசிரியர்களாக, இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்களாகத் திகழ்வர்.

முடிவுரை:

இடதும் வலதும் கலந்து இருப்பவர்களும் உண்டு. நன்முறையில் கல்வி கற்றால் உடலியக்கம் மற்றும் மன இயக்கத்திற்குக் காரணமான மூளை, நம் செயல்பாடுகளைத் தூண்டி நம்மை உயர்வடையச் செய்யும்.

 



கற்பவை கற்றபின்

 

 

மூளையின் செயல்கள் குறித்துப் பிற நூல்களிலிருந்து தகவல்களைத் திரட்டி எழுதுக.

விடை

மூளை நாம் பார்க்கும், கேட்கும், உணரும் செயல்களைச் சேமித்து கொள்கிறது.

பதிய வைத்தல் :

இதுவே நிகழ்வுகளை நமது நினைவகத்தில் சேமிக்கும் தலம் ஆகும். அதாவது, நமது புலங்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகியவை நமது சுற்றுப் புறத்திலிருந்து தகவல்களை சேகரித்து மூளைக்கு அனுப்புகின்றன. உதாரணம் : நமது கண் ஒரு நபரை முதல் முறையாக காணும் பொழுது அவரின் நிறம், உருவம், உயரம் போன்ற தகவல்களை மூளைக்கு அனுப்பும்.

இந்தத் தகவல்கள் நமது மூளையில் நியூரோன்கள் எனும் நரம்பு செல்கள் வழியாகக் கடத்தப்படும். இந்தத் தகவல்கள் ஒரு நரம்பு செல்லில் இருந்து மற்றொரு நரம்பு செல் வழியாக பாயும். அதாவது இரு செல்களின் இடைவெளியைக் கடக்கும் பொழுது ஒரு வகை வேதியியல் மூலக்கூறு வெளிப்பட்டு இரு நரம்பு செல்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தும். இந்த இணைப்பிற்கு சினப்சே என்று பெயர்.

இந்த இணைப்பு உறுதியாகும் பொழுது அந்த நபரைப் பற்றிய நினைவு உங்கள் மூளையிலிருந்து அகலாது. இந்த இணைப்பு உறுதியாவது ஒரு முறை பார்த்தவுடன் நிகழ்ந்துவிடாது. ஒரு நபரை மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவரைப் பற்றிய தகவல் நம் நரம்பு செல்களில் உறுதியான இணைப்பாக பதிய வைக்கப்படும். இந்த இணைப்பு எந்த அளவுக்கு உறுதி ஆகிறதோ அந்த அளவுக்கு அந்த நபரைப் பற்றிய நினைவையும் நாம் மறக்காமல் இருப்போம்.

இது அனைத்து விதமான நினைவுகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு நினைவுகளுக்கும் ஓர் தனி இணைப்பு நம் மூளையில் உருவாகும். இவ்வாறு தான் நாம் படிக்கும் பாடம், கேட்கும் விஷயம், பார்க்கும் படம் அனைத்துமே நம் மூளையில் பதிய வைக்கப்படும். மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலம் நாம் படித்த பாடமானது ஒரு உறுதியான நரம்பு செல் இணைப்பாக மாறி மறக்காமல் இருக்கிறது.

Tags : Chapter 3 | 8th Tamil இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 3 : Udalai Ombhomin : Supplementary: Thalaikul or ulagam: Questions and Answers Chapter 3 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் : துணைப்பாடம்: தலைக்குள் ஓர் உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின்