Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | துணைப்பாடம்: உண்மை ஒளி: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: உண்மை ஒளி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku

   Posted On :  13.07.2022 04:26 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு

துணைப்பாடம்: உண்மை ஒளி: கேள்விகள் மற்றும் பதில்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு : துணைப்பாடம்: உண்மை ஒளி: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

(இயல் 2 : விரிவானம் : உண்மை ஒளி)


பாடநூல் மதிப்பீட்டு வினா

‘உண்மை ஒளி' படக்கதையைக் கதையாகச் சுருக்கி எழுதுக. 

முன்னுரை :

சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த துறவிகள் ஜென் துறவிகள். அவர்களின் சிந்தனைக் கதையே ஜென் கதைகள். அக்கதைகளுள் ஒன்று 'உண்மை ஒளி.' 

குருவும் சீடர்களும் :

ஜென் குருவிடம் சிலர் பாடக் கற்றுக் கொண்டு இருந்தனர். ஒரு நாள் உண்மை ஒளி எது? என்பதைப் பற்றிப் பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். பசி, தாகம், தூக்கம் ஆகியவை அனைத்து உயிர்களுக்கும் ஒன்றே. இரவு பகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்று குரு சொல்லிக் கொடுத்தார். பிறகு சீடர்களிடம், ”இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது” என்று எப்படி அறிவீர்கள்? என்றார். 

உண்மை ஒளி :

அதற்கு சீடன் ஒருவன், “தொலைவில் தெரிவது குதிரையா? கழுதையா? என்பதைக் காணக்கூடிய அளவு வெளிச்சம் நான் அறிவேன்” என்றான். மற்றொருவன், “தொலைவில் தெரிவது ஆலமரமா? அரசமரமா? என்பதைக் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்ததை நான் அறிவேன்” என்றான். இவை எல்லாம் தவறு என்றார் குரு. ஒரு மனிதரைக் காணும் போது என் உடன் பிறந்தவர் என்று எப்போது உணர்கிறீர்களோ, அப்போது தான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள் என்றார் குரு. 

குருவை ஏமாற்றிய திருடன் :

ஒரு நாள் குரு குதிரையில் அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்பட்டுச் செல்கின்றார். சாலையோரத்தில. ஒருவன் மயங்கிக் கிடந்தான். குரு அவனிடம் தண்ணீர் கொடுத்து' நீ யார்?' என்று கேட்க, அவன் ‘பக்கத்து ஊர் செல்ல வேண்டும். பசியால் மயங்கி விழுந்துவிட்டேன்.' என்றான். குரு இரக்கம் கொண்டு அவனை குதிரை மீது அமரச்செய்தார். குதிரையை அடித்து அவன் வேகமாகச் சென்று விட்டான். அவன் திருடன் என்பதையும், தான் ஏமாற்றப்பட்டதையும் அறிந்தார். 

திருடனுக்கு அறிவுரை :

குதிரை வாங்க குரு குதிரைச் சந்தைக்குச் சென்றார். அங்கு அந்தத் திருடன் குதிரையை விற்றுக் கொண்டிருந்தார். குரு யாரிடமும் எதையும் சொல்லாதே! என்றார். அதற்கு திருடன், இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கின்றாரோ? என்று மனதில் நினைத்தான். அதற்கு குரு, நான் ஏமாந்து போனது தெரிந்தால் உண்மையில் சாலையில் மயக்கம் அடைந்து யார் கிடந்தாலும் அவருக்கு யாரும் உதவ மாட்டர்கள் என்றார்.குருவின் பெருமையை நினைத்து தலைகுனிந்தான் திருடன்.

முடிவுரை :

ஒருவரை ஏமாற்றுவது மற்றவர்களுக்குச் செய்யும் உதவியைக்கூட தடுக்கும் என்பதை இக்கதை மூலம் அறியமுடிகின்றது.



கற்பவை கற்றபின்


1. ஜென் கதைகளில் வேறு சிலவற்றை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.

மன நிறைவு 

ஓர் ஊரில் செல்வன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் அளவுக்கதிகமாகச் செல்வம் இருந்தது. வேலையாட்கள் நிறைய பேர் இருந்தனர்.ஆனால் அவனால் மனம் நிறைவுடன்வாழ முடியவில்லை . ஒரு நாள் அந்த ஊருக்கு ஜென் துறவி ஒருவர் வந்தார். அவரிடம் செல்வந்தன் தனக்கு மனநிறைவுக்கு வழி சொல்ல வேண்டினான். துறவி மூன்று கல்லைச் செல்வந்தனைத் தூக்கத் செய்து மலை மீது அவனால் ஏறமுடியவில்லை. மிகவும் கனமாக உள்ளது, என்னால் தூக்க முடியவில்லை என்றான். துறவி ஒருகல்லைத் தூக்கிப் போடச் சொன்னார். இதே போலவே ஒவ்வொரு முறையும் கூற ஒவ்வொரு கல்லாய் தூக்கிப் போடச் சொன்னார். இறுதியில் துறவி இப்போது பாரம் குறைந்ததா? என்றார். செல்வந்தரும் ,ஆம்! என்றார். உன்னிடம் உள்ள அளவில்லாத செல்வம்தான் பாரம். அதனை ஏழைகளுக்கு கொடுத்துவிட பாரம் குறைந்து உன்மனம் நிறைவடையும் என்றார். அவனும் அப்படியே செய்து மன நிறைவு அடைந்தேன்.


2. ‘உண்மை ஒளி' படக்கதையைக் நாடகமாக நடித்துக் காட்டுக.



Tags : Term 3 Chapter 2 | 7th Tamil பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 3 Chapter 2 : Oppuravu olluku : Supplementary: Unmai Oli: Questions and Answers Term 3 Chapter 2 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு : துணைப்பாடம்: உண்மை ஒளி: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு