Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 5th Tamil : Term 2 Chapter 3 : Tholil, vanigam

   Posted On :  22.07.2023 04:22 am

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆழ்வோம்

 

கேட்டல்

 எளியஇனிய ஓசைநயமிக்க பாடல்களைக் கேட்டு மகிழ்க.

 உழவு வேலை நடைபெறும் இடங்களில் பாடப்படும் பாடல்களைக் கேட்டு மகிழ்க.

 

பேசுதல்

 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்என்னும் தலைப்பில் 5 மணித்துளி பேசுக.

விடை

அனைவருக்கும் வணக்கம்!

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று மகாகவி பாரதியார் உழவினை உயர்த்திப் பாடியுள்ளார்உழவர்கள் சேற்றில் கால் வைக்கவில்லையென்றால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது’ இது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய முதுமொழிஇவ்வாறு உழவர்களுக்கும்உழவுத்தொழிலுக்குப் பாடுபட்ட காளைமாடுகளுக்கும்வந்தனை செய்யும் விழாவே அறுவடைத் திருவிழா.

இவையனைத்துமே உழவுத்தொழிலின் இன்றியமையாமையைப் பற்றிக் கூறுகிறதுஆனால் இன்று நாகரிகம்நகரமயமாக்கல் என்றுசொல்லிக்கொண்டு விவசாய நிலங்களை அழித்து வீடுகளாக்கிவிட்டோம்இதனால் விளைநிலங்கள் குறைந்துவிட்டனவிவசாயமும் குறைந்துவிட்டதுஇப்படியே இந்நிலை தொடர்ந்தால் நம் நிலை என்னவாகும் எனச் சிந்திக்க வேண்டும்உண்ண உணவுஉடை இவற்றை நமக்களிப்பதே உழவுத்தொழில்தான்இவையிரண்டும் நமக்கு அடிப்படைத் தேவைகள்அடிப்படைத் தேவையைக்கூட நம்மால் நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையே உண்டாகும்.

படித்த இளைஞர்கள் சேற்றில் கால் வைப்பதை இழிவாக எண்ணாமல் பெருமையுடன் செயலாற்ற வேண்டும்உழவுத்தொழிலை மேன்மையடைய செய்ய வேண்டும்இந்த உலகமே உழவர்களின் பின்தான் சுற்றுகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்நன்செய்புன்செய் நிலங்களுக்கேற்ப மழையின் அளவிற்கேற்ப பயிர் செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவமழைக்காலங்கள் மாறியதால்வேளாண்மைத் தொழில்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனஇம்மாற்றங்களை நமக்கேற்றதாக மாற்றிக் கொண்டு அதற்கேற்ற பயிர்களை விளைவிக்க வேண்டும்.

தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு” என்று உழவரின் மாண்பினைப் போற்றுகிறது குறட்பாஉழவர்கள் பிறருக்கு அன்னமிடுவார்கள்ஒருபோதும் பிறரைச் சார்ந்து இருக்கமாட்டார்கள்அப்படிப்பட்ட உழவர்களையும் உழவுத்தொழிலையும் மதிப்போம்.

 

 நேர்மையாக வாழ்ந்தவர்களுள் யாரேனும் ஒருவரின் பண்புகளைப் பாராட்டிப் பேசுக.

விடை

அனைவருக்கும் வணக்கம்!

நேர்மையாக வாழ்ந்து புகழ்பெற்றவர் கக்கன்இவர் விடுதலைப் போராட்ட வீரர்தலைசிறந்த அரசியவாதியும் ஆவார்.

தமிழக அமைச்சரவையில் பத்தாண்டுகள் பணியாற்றியவர்ஐந்தாண்டுகள் லோக்சபா உறுப்பினராகவும் இருந்தவர்ஆனால் அவருக்கென்று ஒரு வீடுகூட இல்லைவாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வாழ்ந்தவர்அரசு பேருந்தில் பயணம் செய்தவர்.

பொதுவாழ்வில் தூய்மையும் நேர்மையும் செயல்திறனும் கொண்டு அரசுப் பணியை மக்கள் பணியாகச் செய்தவர்.

மதுரை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஓராசிரியர் பள்ளியை நிறுவ முதல் 6 உத்தரவைப் பிறப்பித்தார்.

ஒருமுறை மலேசிய அமைச்சர்கக்கனைச் சந்தித்தார்அப்போது கக்கனின் கையில் இருந்த பழைய பேனாவைப் பார்த்தார்.

உடனே தனது பேனாவை அவருக்குத் தந்தார்அந்தத் தங்கப் பேனாவை வாங்க மறுத்த கக்கன்அந்தத் தகுதி தனக்கு இல்லை என்றார்அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதில் வாங்கிக் கொண்டார்கக்கன்ஊழியரை அழைத்து அலுவலகப் புத்தகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்தார்.

இது அரசுக்கு அல்லஉங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்குத் தான் தந்தேன்’ என்று மலேசிய அமைச்சர் கூறியும் கக்கன் கேட்கவில்லைகக்கன் நான் அமைச்சராக இருப்பதால்தான் கொடுக்கிறீர்கள்இல்லையென்றால் கொடுப்பீர்களாமக்களுக்குத் தொண்டாற்ற பொறுப்பேற்றுள்ள நம்மைப் போன்றவர்கள் பரிசுப் பொருட்களைச் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளக்கூடாது” என்றார்மலேசிய அமைச்சர் உங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளாமல் அரசுப் பொருட்களோடு சேர்ப்பதாக இருந்தால் தரமாட்டேன்” என்று கூறினார்உடனே கக்கன் அந்தத் தங்கப்பேனாவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறித் திருப்பித் தந்துவிட்டார்.

இதைப்போல பல உதவிகளை நேர்மையாகச் செய்தவர் கக்கன் அவர்கள்.

 

படித்தல்

 செய்தித்தாளில் இடம்பெறும் வேளாண்மை பற்றிய செய்திகளை வகுப்பில் படித்துக்காட்டுக.

 உங்கள் பள்ளியில் நடைபெறும் விழாவுக்குத் துண்டு விளம்பரத்தாள் தயாரித்துஅனைவருக்கும் படித்துக்காட்டுக.


எழுதுதல்

1. சொல்லக் கேட்டு எழுதுக.

1. விதைத் திருவிழாவிற்குச் செல்வோம்.

2. இயற்கை வேளாண்மை அன்புடன் வரவேற்கிறது.

3. நீர்வளத்தைப் பெருக்குவோம்.

4. மண்ணின் ஊட்டச்சத்து நீர் மேலாண்மை

5. ஆர்வலர்களைச் சுண்டியிழுக்கும் அரங்குகள்

 

2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

 திருவிழா – திருவிழாவிற்குச் செல்வதென்றால் அனைவருக்கும் பிடிக்கும்.

 இரசாயன விதை – இரசாயன விதைகள் பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை கெடுகிறது.

 விளம்பரப் பலகை – விளம்பரப் பலகையைப் பார்த்துப் படித்தான் கந்தன்.

 பழங்காலம் – பழங்கால விவசாயத்தில் இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டன.

 

3. ஒருபொருள் தரும் பல சொற்களை எழுதுக.

 வயல் – செய்கழனி

 உழவு – ஏர்வேளாண்மை

 மகிழ்ச்சி – இன்பம்களிப்பு

 வீடு – மனைஇருப்பிடம்

 பேசு – சொல்செப்புவயல்

 

4. கீழ்க்காணும் உரைப்பகுதியைப் படித்துவினாக்களுக்கு விடை எழுதுக.

நீர்வளமும் நிலவளமும் உடைய தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பயிர்த்தொழில் சிறந்ததாகக் கருதப்பட்டதுமுற்காலத் தமிழர் தொழுதுண்டு வாழ விரும்பினார் அல்லர்உழுதுண்டே வாழவே விரும்பினார்கள்'சீரைத் தேடின் ஏரைத் தேடுஎன்றார் ஒரு புலவர்ஏர்த்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாததுதாய்முகம் காணாப் பிள்ளையும் மழை முகம் காணாப் பயிரும் செழிப்படைவதில்லைஆகவேதமிழ்நாட்டார் வானத்திலே தவழும் மேகத்தையே நோக்கி வாழ்ந்தார்கள்உயர்ந்து ஓங்கிய மலைகளில் மேகம் தவழக் கண்டால் தமிழர் உள்ளம் தழைக்கும்கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால் அவர் உள்ளம் துள்ளி மகிழும்.


1. பண்டைக்காலத்திலேயே சிறந்ததாகக் கருதப்பட்ட தொழில் எது?

விடை

பண்டைக்காலத்திலேயே சிறந்ததாகக் கருதப்பட்ட தொழில் பயிர்தொழில்.

 

2. முற்காலத் தமிழர் எப்படி வாழ விரும்பினர்?

விடை

முற்காலத் தமிழர் உழுதுண்டு வாழவே விரும்பினார்கள்.

 

3. ஏர்த்தொழில் இனிது நடைபெற எது தேவை?

விடை

ஏர்த்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாதது.

 

4. தமிழர் உள்ளம் துள்ளி மகிழக் காரணம் என்ன?

விடை

கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால் தமிழர் உள்ளம் துள்ளி மகிழும்.

 

5. மழையுடன் தொடர்புடைய சொற்களை எழுதுக.

விடை

மேகம்மின்னல்.

 

5. கீழ்க்காணும் பாடலைப் படித்து மகிழ்க.

நீர் மேலாண்மை ஆத்திசூடி

கலத் தூறிடு

ழ்துளை நீக்கு

ருகரை சமன்செய்

ராறு இணை

ப்புநீர் வடி

ற்றுநீர் பெருக்கு

ரிபொருள் சேமி

ரியைக் காத்தல் செய்

ம்பொறி அழுக்கறு

ன்றாக்கு நீர்நிலை

ங்கிடும் உலகெலாம்

ஒளடதம் நீர்

 

 

மொழியோடு விளையாடு

 

1. உழவுத் தொழிலுடன் தொடர்புடைய பழமொழிகளின் சொற்கள் இடம் மாறியுள்ளன. அவற்றை முறைப்படுத்தி எழுதுக.

1. பட்டம்தேடிஆடிப்விதை, – ஆடிப்பட்டம் தேடி விதை

2. தேடுஏரைத்தேடின்சீரைத் – சீரைத் தேடின் ஏரைத் தேடு.

3. உழுவதைஅகலவிடஉழுஆழ – அகல உழுவதைவிட ஆழ உழு.

 

2. கீழ்க்காணும் பாடலிலுள்ள தொகைச்சொற்களை விரித்து எழுதுக.

இருவினை அறிந்து கொள்வோமே!

முத்தமிழ் கற்றுத் தேர்வோமே!

நாற்றிசை தேடிச் செல்வோமே!

ஐந்திணை சுற்றி வருவோமே!

அறுசுவை உண்டு மகிழ்வோமே!

இருவினை – நல்வினைதீவினை

முத்தமிழ் – இயல்இசைநாடகம்

நாற்றிசை – கிழக்குமேற்குவடக்குதெற்கு

ஐந்திணை , – குறிஞ்சிமுல்லை மருதம்நெய்தல்பாலை

அறுசுவை – இனிப்புகசப்புபுளிப்புஉவர்ப்புதுவர்ப்புகார்ப்பு

 

3. குறிப்புகளைப் படித்துத் 'தைஎன முடியும் சொற்களை எழுதுக.


1. மெதுவாக ஊர்ந்து செல்லும் ஓர் உயிரி – நத்தை

2; பொதி சுமக்கும விலங்கு – கழுதை

3. பகலில் கண் தெரியாப் பறவை – ஆந்தை

4. காய்கனியில் இருக்கும் – விதை

 

4. கீழ்க்காணும் தொடரைப் பல தொடர்களாக மாற்றுக.

1. மணமலர் படம் வரைந்தாள்

அ) மணமலர் படம் வரைந்தாளா?

ஆ) மணமலரா படம் வரைந்தாள்?

இ) மணமலர் படம் வரை

ஈ) மணமலர் படம் வரைவாயா?

 

2. கதிரவன் வீட்டுக்குச் சென்றான்

அ) கதிரவன் வீட்டுக்குச் சென்றானா?

ஆ) கதிரவனா வீட்டுக்குச் சென்றான்?

இ) கதிரவா வீட்டுக்குச் செல்.

ஈ) கதிரவா வீட்டுக்குச் செல்வாயா?

 

5. புதிய சொற்களை உருவாக்குக.

1. விளையாட்டுத் திடல் – விளைவிளையாட்டுதிடல்விடல்விடுவிடுதிவில்.

2. பல்கலைக்கழகம் – பல்கலைகழகம்பல்கல்கலைபக்கம்பழக்கம்.

3. கவிதைத்திரட்டு – கவிதைதிரட்டுவிதைகவிதைவிரட்டுகட்டுவிட்டு.

 

6. பாடலைத் தொடர்ந்து பாடி மகிழ்க.

விடுகதையாம் விடுகதை

விடை காணும் விடுகதை

உயரமாக இருப்பானாம்

ஒரே இடத்தில் நிற்பானாம்

இளநீர்,தேங்காய் தருவானாம்

ஓலைக்கீற்றும் தருவானாம்

அவன் பெயர் என்ன?

தென்னை மரம் அவன்தானே

விடுகதையாம் விடுகதை

விடை :

பகலிலே துயிலுவானாம்

இரவிலே அலறுவானாம்

அவன் பெயர் என்ன?

ஆந்தை அவன்தானே.

விடுகதையாம் விடுகதை

செக்கச் சிவந்திருப்பாளாம்

வாலும் முளைத்திருக்குமாம்

சந்தைக்கு வந்திருப்பாளாம்

அவள் பெயர் என்ன?

மிளகாயாம் அவள் பெயர்.

விடுகதையாம் விடுகதை.

 

நிற்க அதற்குத் தக...


 உழவின் மேன்மையை அனைவருக்கும் உணர்த்துவேன்.

 இயற்கை உரங்களின் பயன்களைச் சொல்வேன்.

 மழைவளம் பெருக மரம் வளர்க்க உதவுவேன்.

 

செயல் திட்டம்


 உழவு தொடர்பான படம் ஒன்றை வரைந்து வண்ணம் தீட்டுக.

 உழவு தொடர்பான பாடல்களுள் ஐந்து எழுதி வருக.

 


கற்பவை கற்றபின்

 

 இரட்டைக்கிளவிகளைப் பயன்படுத்தித் தொடர்கள் எழுதுக.

விடை

சிலுசிலு எனக் காற்று வீசியது.

கமகம என மணந்தது முல்லை .

மளமள என வேலையைச் செய்.

 

 உரைப்பகுதிகளில் காணப்படும் அடுக்குத்தொடர்களைத் தொகுத்து எழுதுக.

விடை

திரும்பத் திரும்ப

வா வா

பாம்பு பாம்பு

போ போ

 

 அடுக்குத்தொடர்இரட்டைக்கிளவி வருமாறு கற்பனைக் கதையொன்றை எழுதுக.

Tags : Term 2 Chapter 3 | 5th Tamil பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 2 Chapter 3 : Tholil, vanigam : Tamil Language Exercise - Questions and Answers Term 2 Chapter 3 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம்