Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள் - பகுதி 2

இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் - பகுதி 2 | 9th Tamil : Chapter 3 : Ullathin sher

   Posted On :  29.08.2023 10:14 pm

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்

கேள்விகள் மற்றும் பதில்கள் - பகுதி 2

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

விரிவானம்

இயல் மூன்று

அகழாய்வுகள்


பாடநூல் வினாக்கள்

 

பலவுள் தெரிக

1. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று.

  ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.

  ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

  ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

  ) பட்டி மண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

விடை: ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

 

குறுவினா


1. தொல்லியல் ஆதாரங்கள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?

விடை:

● தொல்லியல் அகழாய்வு செய்தல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச்செதுக்கி ஆராய்தல் ஆகும். அகழாய்வு வரலாறு முழுமைபெற உதவுகிறது.

● அகழாய்வில் கிடைத்த பொருள்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமின்றி நம் வரலாற்றையும் உணர்த்துகின்றன.

 

சிறுவினா


1. வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க.

விடை:

●அறிவியல் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பழைய தலைமுறையைப் பற்றித்தெரிந்து என் செய்வது? செல்லிடப்பேசிக்குள்ளே உலகம் சுற்றும் வேளையில் அகழாய்வில் கிடைக்கும் செல்லாக்காசுகள் வந்தென்ன செய்ய முடியும் ? மடிக்கணினி மலைக்கவைக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு மண் ஓடுகள் இறந்தோரைச் சுமந்த மண்தாழிகள் கண்டறிந்து என்ன சாதிக்கமுடியும்? இவ்வாறு இருக்க, அகழாய்வு என்ன செய்ய இருக்கிறது?

●அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன. அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.

● ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டன.

●நம் முன்னோர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் அடிப்படையிலான பண்பாட்டு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். தமிழர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளே ஆவணங்களாகத் திகழ்கின்றன.

 

நெடுவினா

 

1. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

விடை:

மனிதன் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் பண்பாட்டு அளவில் சிறந்த வாழ்வை வெளிப்படுத்திய தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள தமிழகத்தின் தொன்மையான பகுதிகளைக் கொண்டும் மக்கள் பயன்படுத்திய பழமையான கருவிகளைக் கொண்டும் இசைக் கருவிகளைக் கொண்டும் அறிய முடிகிறது. அவற்றைப் பேணிக் காக்க வேண்டும். இது நம் கடமையாகும்.

பண்பாட்டுக் கூறு - ஏறுதழுவுதல்:

வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப் படுத்தப்படுபவை மாடுகள். முல்லை மற்றும் மருத நிலங்களில் கால் கொண்டு தமிழர் தம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து பண்பாடாகி உள்ளது ஏறுதழுவுதல். இது தமிழர்களின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு. இளைஞர்களின் வீரத்தைப் பெருமிதப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வு. முன்னோர் வழிநின்று இளந்தலைமுறையினர் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று ; காதலும் வீரமும் பழந்தமிழரின் பண்பாட்டுத் தடயங்கள். வீரமும் அன்பும் ஏறுதழுவுதலின் விளைநிலங்களாக விளங்குகிறது என்பதை வளரும் தலைமுறையினர்க்கு எடுத்துக்காட்ட ஒரு வாய்ப்பு .

பண்பாட்டுக்கூறு - அகழாய்வு:

அகழாய்வு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தல் ஆகும். ஆய்வு என்பது அறிவின் வெளிப்பாடு. நமது முன்னோர்கள் வாழ்ந்து பெற்ற பட்டறிவை வகைப்படுத்தி தொகுத்துப் பார்ப்பதற்குத் தொல்லியல் ஆய்வே பெருங்கல்வியாக அமைகின்றது. பண்பாட்டு எச்சங்களாகத் திகழும் இவ்வகையான ஆய்வுகளைக் கண்டு பயனடையலாம்.

பண்பாட்டுக்கூறு - திருவிழாக்கள்:

கி.பி. 2 ஆம் நூற்றாண்டோடு தொடர்புடைய புகார்நகரில் கொண்டாடப்பெற்ற இந்திரவிழா சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிறது. கோயில் விழாக்களில் பண்பாட்டுக் கூறுகளாக உள்ள ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதசுரம், பரதம், பொய்க்கால் குதிரை ஆட்டம் எனப்பல கலைகள் நடந்தேறுகின்றன. விழா நிகழ்ச்சியில் பட்டிமன்றம், தெருக்கூத்து நாடகங்களும் நடைபெறுகின்றன.

இத்தகைய பண்பாட்டுக் கூறுகளையும், கலைநிகழ்வுகளையும் பேணிப் பாதுகாத்து இளந்தலைமுறையினருக்கும் இனி வரும் தலைமுறையினருக்கும் காட்டுவது நம் கடமையாகும்.

 

 

கற்பவை கற்றபின்


1. இளைஞர்களிடையே பண்பாட்டினை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது குடும்பமா? சமூகமா? - என்னும் தலைப்பில் சொற்போர் நிகழ்த்துக.

 விடை:

சொற்போர்

கதாபாத்திரங்கள்

நடுவர் : கபிலன் - தமிழாசிரியர்,

குடும்பமே : அமுதா (மாணவி), சமூகமே : வாணன் (மாணவன்)

நடுவர் : அவையோருக்கு வணக்கம்!

 இன்று நம் இலக்கிய மன்ற விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் !

இன்றைய சூழலில் நம் இளைய சமுதாயத்துக்கு பல வாய்ப்புகள், வசதிகள் உலகைப்பற்றி அறிய பல வாயில்கள் உள்ளன, எனினும் பண்பாட்டைக் கற்றுக் கொடுப்பது எது என ஆராயும் போது ஒரு சொற்போர் நடத்த வேண்டும். மாணவர்களின் சிந்தனைகளை அறிய வேண்டும் என்ற அவா எழுந்தது! அதனால் உருவானதே இத்தலைப்பு. இப்போது குடும்பமே என சொற்போர் நிகழ்த்த வருகிறார்

அமுதா :  அனைவருக்கும் இனிய வணக்கம்...

ஐயா! "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்பார்கள் "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்பார்கள். பெற்றோர்களே முதல் ஆசான் இவற்றையெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கூற்றுகள் எல்லாம் அதனை உணர்த்துகிறது. ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து வரும் குடும்பச் சூழ்நிலைதான் பண்பாட்டினை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது அல்லவா! “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலேஎன்ற கவிஞனின் அடிகளைச் சான்றாக்கி நற்பண்பாட்டினை வளர்ப்பது குடும்பமே.... குடும்பமே... என்று கூறி என் சொற்போரை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்!

நடுவர் : ஆகா! அருமையான கருத்துகள் வாங்க வாணன்ஸ உங்கள் கருத்தை வலியுறுத்துங்கள் பார்க்கலாம்.

வாணன் : சமூகமே

ஐயா! அமுதா எந்த நூற்றாண்டில் இருக்கிறாள் என்றே தெரியவில்லை! நீங்களே சொல்லுங்கள்! ஒரு குழந்தை 3வயது வரைதான் இப்போதெல்லாம் குடும்ப பராமரிப்பில் இருக்குது! மூணு வயதிலே சமூகத்துக்கு வந்துடுது ஐயா....

தன் ஆசிரியரைப் பார்க்கிறது. தன் சக மாணவ, மாணவியரை பார்க்கிறார்கள். வண்டி ஓட்டும் ஓட்டுநர் முதல் ஆயா வரை அந்த குழந்தைக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

வளர்கிறான்... சமூகத்தின் பல செய்தி சாளரங்கள் திறக்கின்றன. தன்னையும் அறியாமல் அவற்றை ஆராய்கிறான்; நன்மை தீமை அறிகிறான்; அவன் மன வலிமையைப் பொறுத்து பண்பாட்டைக் காப்பவனாகவோ அல்லது மீறுபவனாகவோ மாறுகிறான்.எனவே சமூகமே பெரும்பங்கு வகிக்கிறது. நன்றி வணக்கம்!

நடுவர் : இருவருடைய உரையைக் கேட்கும் போது, பண்பாட்டைக் கற்றுக் கொடுப்பது குடும்பமாக இருந்தாலும் அதனை வளர்த்தெடுக்கும் பங்கு சமூகத்தையே சார்ந்தது... நன்றி வணக்கம்!

 

2. தொல்லியல் துறை சார்ந்த அலுவலர் ஒருவரிடம் நேர்காணல் நிகழ்த்துவதற்கான வினாப்பட்டியலை உருவாக்குக.

விடை:

ஐயா, வணக்கம்!

● தமிழகத்தில் தொன்மையான பகுதிகள் என்று எப்படி வரையறைப்படுத்துவது?

● கீழடி ஆய்வு எந்த வரலாற்றை அல்லது பின்புலத்தை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது என்பது பற்றி விளக்கிச் சொல்லுங்களேன்.

● ஐயா! இந்த பிராமி எழுத்துகள் என்பது எந்த மொழிக்குரியது?

●ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் மட்டும் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றன. ஏன் அங்குமட்டும் இது போன்ற தடயங்கள் அதிகமாக உள்ளன என்பதற்குக் காரணங்கள் ஏதேனும் உண்டா ?

● அறிவியல் மக்களுக்காகவே' என்ற கொள்கையை சற்று விளக்கிச் சொல்லுங்களேன்.

● மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இறப்புத் தடயங்கள் ஏதேனும் கிடைத்துள்ளதா?

●அகழாய்வு செய்யக் கூடிய இடங்களில் பெரும்பாலும் இறப்புப் பற்றிய தடயங்கள் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன என்று சொல்கிறார்கள் இதற்கான காரணத்தை விளக்கிச் சொல்ல முடியுமா?. கடலுக்குள் ஆய்வுகள் இதுவரை செய்யப்பட்டிருக்கின்றனவா? பூம்புகார் நகர கடல் பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வு போல் இன்றைய காலக்கட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டனவா? அப்படியானால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது என்னென்ன தடயங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

இதுவரையிலும் தாங்கள் கூறிய அகழாய்வு பற்றிய செய்திகள் பயனுறு வகையில் அமைந்திருந்தன.

 மிக்க நன்றி!

 

3. உங்கள் ஊருக்கு அருகில் உள்ள தொன்மையான இடத்தைப் பார்வையிட்டுக் குறிப்பு எழுதுக.

விடை:

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள தொன்மையான இடம் : வளவூர் குறிப்புகள்:

எங்கள் ஊருக்கு அருகில் 150 ஆண்டுகளுக்கு முன் கடல் கோளால் கொள்ளப்பட்ட வளவூர் என்ற ஊரை அகழாய்வு செய்தனர். நான் அங்கு சென்று பார்த்த போது மிகவும் வியந்து போனேன்.

அக்கால மன்னன் கட்டிய அரண்மனைப் பகுதி தெரிந்தது. மக்கள் வழிப்பட்ட தெய்வத்திருமேனி வியப்பிற்குரியதாய் அரிதான உலோகத்தால் செய்யப்பட்டிருந்தது. அக்கால போர்வீரர்கள் பயன்படுத்திய ஆயுதம் சிதைந்துபோன நிலையில் கிடைத்தது மக்களின் உடை, வாழ்விடம், பயன்படுத்திய அணிமணிகள் ஆடம்பரமாய் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருந்தன. பிறநாடுகளுடன் கடல் வாணிகம் மேற்கொண்டதற்கான சான்றுகளும் இருந்தன. நம் முன்னோர்களின் கடந்த காலத்தை எண்ணி வியந்தேன்.

 

இயல் மூன்று

கற்கண்டு

வல்லினம் மிகும் இடங்கள்


கற்பவை கற்றபின்


1. வல்லினம் மிகலமா?

) பெட்டிச் செய்தி

) விழாக் குழு

) கிளிப் பேச்சு

) தமிழ்த் தேன்

) தைப் பூசம்

) கூடக் கொடு

) கத்தியை விடக் கூர்மை

) கார்ப் பருவம்

 

2. தொடர் தரும் பொருளைக் கூறுக.

விடை:

) சின்னக்கொடி - சின்னம் வரையப்பட்ட கொடி

சின்ன கொடி - சிறிய கொடி

) தோப்புக்கள் - தோப்பிலிருந்து இறக்கிவரப்பட்ட கள்

தோப்புகள் - தென்னந்தோப்புகள் பலவுண்டு

) கடைப்பிடி - கொள்கையைக் கடைப்பிடிப்பது

கடைபிடி - வாணிகம் தொடங்கக் கடை பிடித்தார்

) நடுக்கல் - அடையாளமாக நடுவது; நடுக்கல் ஊன்றினோம்.

நடுகல் - நினைவுச் சின்னம்

) கைம்மாறு - செய்த உதவி

கைமாறு - கையில் உள்ள மாறு(விளக்குமாறு )

) பொய்ச்சொல் - நீ சொன்னது பொய்ச்சொல்

பொய் சொல் - பொய் சொல்வது தவறு

 

3. சிந்தனை வினா:

நாளிதழ்கள் சிலவற்றில் வல்லினம் மிகவேண்டிய இடத்தில் மிகாமல் எழுதி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு எழுதுவது மொழிக்கு வளம் சேர்க்குமா? வல்லினம் மிக வேண்டியதன் முக்கியத்துவத்தை எழுதுக.

விடை:

அதற்க்கு - தவறு

அதற்கு = அது + அன் + கு

அது (சுட்டுப்பெயர்) + அன் (சாரியை) + கு (வேற்றுமை உருபு )

அதன் + கு = அதற்கு - என்பதே சரி

வல்லொற்றுக்கு அருகில் இன்னொரு வல்லினம் மிகாது.

அதற்கு என்றே எழுத வேண்டும்

.கா: இந்தப் பொருள் வேண்டாம். அதற்குப் பதிலாக இதை வைத்துக்கொள்.

கடைபிடித்தல் - கடைப்பிடித்தல்

கடைபிடித்தல் - கடையைப் பிடித்தல்

கடைப்பிடித்தல் - பின்பற்றுதல்

 இதில் கடைபிடி என்பது கடையைப்பிடி என்று பொருள், அதே சொல்லில் வல்லினம் மிகுந்து கடைப்பிடி' என வரும் போது பின்பற்றுதல் என்னும் பொருள் தரும்.

 .கா: சேகர் புதிதாக வாணிகம் தொடங்கக் கடை பிடித்தார்.

நாங்கள் என்றும் தூய்மையைக் கடைப்பிடிப்போம். எனவே வல்லினம் இட்டு எழுதுவதில் கவனம் தேவை!

 

4. உரிய இடங்களில் வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

  பழங்கால மக்களின் நாகரிகம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அகழாய்வில் கிடைக்கின்றப் பொருள்களும் உறுதிபடுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் ஆய்வு நடைபெறுகின்ற இடங்களில் கீழடியும் ஒன்று .

கீழடியில் வாழ்ந்த மக்களில் பலர்ச் செல்வந்தர்களாக இருந்துள்ளனர் என்பதை அகழாய்வில் கிடைத்தப் பொருள்கள் நமக்கு உணர்த்துகின்றன. இங்குக் குறைவான எண்ணிக்கையில் தான் தங்கத்தினாலானப் பொருள்கள் கிடைக்கின்றன.

மேலும் இரும்பைப் பயன்படுத்தித் செய்தக் கோடரி, குத்தீட்டிகள், முதலான கருவிகளும் யானைத்தந்தத்தினால் செய்தது சீப்பு, மோதிரம், பகடை, காதணிகள். கண்ணாடிப் பொருள்களில் உருவாக்கிய மணிகள், வளையல், தோடுப் போன்றவையும் கிடைத்துள்ளன.

 

மொழியை ஆள்வோம்

 

படித்துச் சுவைக்க.

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ

தூங்காத கண்ணே உனைத் தூங்க வைப்பேன் ஆரிராரோ மாம்பழத்தைக் கீறி வயலுக்கு உரம் போட்டுத்

தேன் பார்த்து நெல்விளையும் செல்வந்தனார் புத்திரனோ!

வெள்ளித்தேர் பூட்டி மேகம்போல் மாடுகட்டி

அள்ளிப் படியளக்கும் அதிர்ஷ்டமுள்ள புத்திரனோ

முத்துச் சிரிப்பழகா முல்லைப்பூப் பல்லழகா

தொட்டில் கட்டித் தாலாட்ட தூக்கம் வருமோடா

கதிரறுக்கும் நேரத்திலே கட்டியுன்னைத் தோளிலிட்டால்

மதியத்து வெயிலிலே மயக்கமும் தான் வாராதோ

வயலிலே வேலை செய்வேன் வரப்பினிலே போட்டிடுவேன் வயலைவிட்டு ஏறுமுன்னம் வாய்விட்டு அழுவாயோ?

- நாட்டுப்புறப்பாட்டு, தகவலாளர்: வேலம்மாள்

 

பொன்மொழிகளை மொழி பெயர்க்க.

1. A nation's culture resides in the hearts and in the soul of its people -Mahatma Gandhi

நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

2. The art of people is a true mirror to their minds - Jawaharlal Nehru

மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி

3. The biggest problem is the lack of love and charity - Mother Teresa

அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது.

4. You have to dream before your dreams can come true - A.P.J. Abdul Kalam

உங்கள் கனவு நனவாகும் வரை, கனவு காணுங்கள்.

5. Winners don't do different things; they do things differently - Shiv Khera

வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும்வித்தியாசமாக செய்கிறார்கள்.

 

வடிவம் மாற்றுக

பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.

1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல் பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல்நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.

விடை:

4 தமிழ் மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.

2 டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ் மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

3 இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால் பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

1 உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கேதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது

 

மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

விடை:

. கா : மேலும் கீழும்:

ஆரிப் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் குமார் மேலும் கீழும் பார்த்தான்.

1. மேடும் பள்ளமும்:

சேரி மக்களின் வாழ்க்கை மேடும் பள்ளமும் கொண்டதாக இருக்கிறது.

2. நகமும் சதையும்:

மும்தாஜும் தமிழரசியும் நகமும் சதையும் போல இணைபிரியாத் தோழிகள்.

3. முதலும் முடிவும்:

இது போன்ற தவறுகள் முதலும் முடிவும் ஆக இருக்கட்டும் என்று ஆசிரியர் அவர்களிருவரையும் எச்சரித்தார்.

4. கேளிக்கையும் வேடிக்கையும்:

எங்கள் ஊர்த் திருவிழா கேளிக்கையும் வேடிக்கையும் நிறைந்ததாக இருந்தது.

5. கண்ணும் கருத்தும்:

அன்பழகன் கண்ணும் கருத்துமாகப் படித்துத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.

 

தொகுப்புரை எழுதுக.

பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

விடை:

தமிழ் இலக்கிய மன்ற விழா

இடம் : வித்யாபார்த்தி மேனிலைப் பள்ளி, சீலப்பாடி, திண்டுக்கல் -5. நாள் : திருவள்ளுவராண்டு , ஸ்ரீவிளம்பி வருடம், வைகாசி 23.

06.06.2018 புதன்கிழமை

 தொகுப்புரை:

திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி, வித்யாபார்த்தி மேனிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜாக்குலின் மேரி தலைமை தாங்கினார். பள்ளித் தாளாளர் டாக்டர். ஆர். கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட அளவில் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 12ஆம் வகுப்பு மாணவர் இன்ப வண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியங்களில் எவ்வாறு இன்பச்சுவை அமைந்து இருக்கிறது என்பது பற்றிப் பேசினார். முன்னிலை வகித்துப் பேசிய பள்ளித் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி முக்கூடற்பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களில் இன்பச் சுவையோடு நகைச்சுவையும் இருக்கிறது என்பது பற்றிப் பேசினார்.

தலைமை ஆசிரியர் தலைமை உரையில் இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற் போல் மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார்.

சிறப்புச் சொற்பொழிவாற்றிய திண்டுக்கல் .லியோனி அவர்கள், ஒன்பான் சுவைகளை விளக்கி நகைச்சுவை உணர்வோடு "இலக்கியத்தில் இன்பச்சுவை" எனும் தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார்.

நிறைவாக, இலக்கியமன்றச் செயலர் 12ஆம் வகுப்பு மாணவி அன்புச் செல்வி நன்றியுரை ஆற்றினார்.

 

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று காங்கேயம்' கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேயம் மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

வினாக்கள்:

1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.

) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?

) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது

) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது

) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?

விடை: காங்கேயம் இனக் காளைகள்

 

2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

) கர்நாடகம்

) கேரளா

) இலங்கை

) ஆந்திரா

விடை: ) இலங்கை

 

3. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன.

) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.

) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன.

) கண்டெடுக்க + பட்டு + உள்ளன.

) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன.

விடை: ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.

 

4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகைத் தொடர்?

) வினாத் தொடர் 

) கட்டளைத்தொடர் 

) செய்தித்தொடர் 

) உணர்ச்சித்தொடர்

விடை: ) செய்தித்தொடர்

 

மொழியோடு விளையாடு

 

பொருள் எழுதித் தொடரமைக்க.

கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை;

அலை : கடலலை - இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாவுள்ளது.

அழை :  வரவழைத்தல்  - என் நண்பர்களை வரவழைத்துள்ளேன்

கரை : ஆற்றின் ஓரம் - ஆற்றங்கரையில் தென்னை மரங்கள் செழித்து வளர்ந்து உள்ளன.

கறை:  படிவது கறை - சட்டையில் கறை படிந்துள்ளது.

குளவி :  பூச்சி வகைகளுள் ஒன்று - வாசல் நிலைப்படியில்

குளவி : கூடுகட்டியிருக்கிறது.

குழவி : குழந்தை - குழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்)

வாளை : மீன்களில் ஒருவகை - நீர் நிலைகளில் வாளை மீன் துள்ளிக் குதித்தது.

வாழை : வாழை மரம் - திருமணப் பந்தலில் வாழை மரங்கள் கட்டினர்.

பரவை : பரந்துள்ள கடல் - மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றூர் பரவை.

பறவை : பறப்பவை - காலைப் பொழுதில் பறவைகள் பாடும்.

மரை : மான், தாமரை - தாமரை நீர் நிலையில் மலரும்.

மறை : வேதம் - வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன.

 

அகராதியில் காண்க.

இயவை, சந்தப்பேழை, சிட்டம், தகழ்வு, பௌரி

இயவை : வழி, மூங்கில் அரிசி, துவரை, தோரை நெல், காடு சந்தப்பேழை : சந்தனப் பெட்டி

சிட்டம் : நூல் சிட்டம், எரிந்து கருகியது, பெருமை அறிவு, நீதி, உயர்ந்து

தகழ்வு : அகழ், அறிவு, உண்கலம்

பௌரி : பெரும் பண்வகை.

 

பொருள்தரும் வகையில் சொற்றொடர் உருவாக்குக.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு பொருள் தரும் வகையில் ஒரு சொல்லில் தொடரைத் தொடங்குக. அத்துடன் அடுத்தடுத்துச் சொற்களைச் சேர்த்து, புதிய புதிய சொற்றொடர்களை உருவாக்குக. இறுதித் தொடர் அனைத்துச் சொற்களையும் சேர்த்ததாக அமைய வேண்டும்.

காலங்களில் தெருவில் வைக்காதீர்கள் காப்புக் கம்பிகள் கவனக் குறைவுடன் ஆகியவற்றின் மீது காலை அறுந்த மழைக் மின்கம்பிகள்.

விடை:

1. வைக்காதீர்கள்

2. மழைக் காலங்களில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்

3. மழைக்காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது காலை வைக்காதீர்கள்

4. மழைக் காலங்களில் தெருவில் அறுந்த மின்கம்பிகள் காப்புக் கம்பிகள் மீது கவனக் குறைவுடன் காலை வைக்காதீர்கள்

 

குறுக்கெழுத்துப் புதிர்


 

இடமிருந்து வலம்

2. விழாவறை காதை குறிப்பிடும் விழா (6)

5. சரி என்பதற்கான எதிர்ச்சொல் தரும் எழுத்துகள் இடம் மாறியுள்ளது (3)

7. பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சிறுவர்களுக்கான போட்டிகளில் ஒன்று (7)

10. ஊழ் என்பதற்குத் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொல் (2)

13. மா + அடி - இதன் புணர்ந்த வடிவம் (3)

19. கொள் என்பதன் முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் (2)

 

வலமிருந்து இடம்

9. தூய்மையற்ற குருதியை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் (2)

11. ஆராய்ச்சி என்பதன் சொற்சுருக்கம் (3)

12. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் (5)

16. சல்லிக்கட்டு விளையாட்டுக்குரிய விலங்கு (2)

18. தனி + ஆள் - சேர்த்து எழுதுக. (4)

 

மேலிருந்து கீழ்

1. தமிழர்களின் வீர விளையாட்டு (7)

2. இவள் + - சேர்ந்தால் கிடைப்பது(3)

3. மரத்தில் காய்கள் .......... ஆகக் காய்த்திருந்தன (4)

5. உரிச்சொற்களுள் ஒன்று (2)

6. ............. சிறந்தது(2)

8. நேர்ததைக் குறிப்பிடும் வானியல் சொல் (2)

12. அகழாய்வில் கிடைத்த கொள்கலன்களுள் ஒருவகை (4)

15. காய் பழுத்தால் ............ (2)

 

கீழிருந்து மேல்

14. ஒருவர் பற்றி ஒருவர் பிறரிடம் இதை வைக்கக் கூடாது (3)

17. யா முதல் வரும் வினாப்பெயர் (2)

18. தகவிலர் என்பதற்கு எதிர்ச்சொல்லாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது (4)

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


விடை

1. பரதம் பாரதத்தின் பண்பாட்டுக் கலையாகும்.  

2. தமிழகத்தின் இசைக்கருவிகளுள் நாதசுரமும் ஒன்று. தவில் தோற் கருவிகளுள் ஒன்று.

3. தம்புரா சுருதி தவறாமல் இருப்பதற்கு இசைக்கப்படுவது.

4. பறை, தோல் கருவிகளுள் தொன்மையானது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் இசையில் நுண்ணிய வேறுபாடு உண்டு.

5. தமிழ்நாட்டுப் பெண்களில் எண்ணங்களை வாசல் முன் வெளிப்படுத்துவது. எரியும் குத்துவிளக்கு மங்கலம் சின்னங்களில் ஒன்று.

6. தமிழர்களின் காதலும் வீரமும் இருகண்கள், காளையை அடக்கி பெண்ணைத் திருமணம் செய்தனர். இஃது ஒரு பண்பாட்டு நிகழ்வு.

 

செயல்திட்டம்

தமிழ்நாட்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள் குறித்த செய்திகளை, நாளிதழ்களிலோ புத்தகங்களிலோ திரட்டிச் செய்திப் படத்தொகுப்பினை உருவாக்குக.

தொல்லியல் பற்றிய செய்திகள்:

  தேனி மாவட்டம், போடி, சி.பி.., கல்லூரி வரலாற்றுத்துறை மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியியல் துறை மூலம், இந்த ஆய்வு நடந்தது.

உதவி பேராசிரியர், மாணிக்கராஜ் கூறியதாவது:

  தே.கல்லுப்பட்டி அருகே, கவசகோட்டை கிராமத்தில், பண்ணைமேடு எனப்படும், அக்ரஹாரமேடு பகுதியில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில், ஆய்வு மேற்கொண்டோம். இதில், தமிழரின் தொன்மை எழுத்து வடிவமான, தமிழ், பிராமி எழுத்துக்கள் பொறித்த, கருப்பு, சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, சுடுமண் பொம்மைகள், மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

  பானை ஓடுகளில், கி.பி. 1 மற்றும் 2ம் நூற்றாண்டை சேர்ந்த, தமிழ் பிராமி எழுத்து வடிவம் இடம் பெற்றுள்ளது. தொடர் எழுத்துகள் கிடைக்காததால், முழுவதும் படித்து அறிய முடியவில்லை. இங்கு காணப்படும் செங்கல்கள், கீழடி அகழ்வாய்வு கட்டுமானத்தில் இருந்த செங்கல்களின் அமைப்பை போன்றே காணப்படுகிறது. துவாரங்கள் உள்ளது இதன் சிறப்பு. மற்றொரு பானை ஓட்டில், மீன் உருவம் பொறித்துள்ளது.

முதுமக்கள் தாழிகளின் மேற்கு பகுதியில் வட்டவடிவமான அலங்காரங்கள் மூன்று மற்றும் நான்கு அடுக்கில் பொறிக்கப்பட்டுள்ளது.

தாழியின் விளிம்பு பகுதியில் கயிறு போன்ற அலங்கார குறியீடுகள் காணப்படுகின்றன. இவை மண்பாண்டங்கள் சுடுவதற்கு முன் வரையப்பட்டவை என தெரிகிறது.

விரிவான தொல்லியியல் ஆய்வு மேற்கொண்டால், பண்டைய தமிழர்களின் சிறப்புகளையும், வாழ்வியல் முறை, நாகரீகத்தையும் பண்பாட்டு அடையாளங்களையும் வெளிக்கொணர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

நிற்க அதற்குத் தக

 

நான் பாராட்டுப் பெற்ற சூழல்கள்

) கூடுதலாக மீதம் கொடுத்த கடைக்காரரிடம் அந்தப் பணத்தை மீண்டும் அளித்தபோது.

) கட்டுரை ஏடுகளைக் கீழே தவறவிட்ட என் ஆசிரியருக்கு அதை எடுத்துத் தந்தபோது.

) நகரப் பேருந்து நிலையத்தில் வழிகேட்ட பெரியவருக்கு வழிகாட்டிய போது.

) பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது முதியவரின் பழுதாகி நின்ற இருசக்கர வாகனத்தைச் செய்த போது.

 

நிறைவுரை :

 வித்யானந்தன் எழுதிய இந்நூல் பல கலைச் சொற்களையும் விளக்குகின்றது.

 

வாழ்வியல்

இயல் மூன்று

திருக்குறள்


கற்பவை கற்றபின்

 

1. படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.


) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்.

) விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்

) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை.

விடை

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை.

 

2. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக

பாடல்

ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்

ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம் செய் - மாண்பற்ற

காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்

பாரதி சின்னப் பயல்.

(1893ல் பாரதியாரின் பதினோராவது வயதில் எட்டையபுரம் மன்னர் சமஸ்தானப் புலவர்கள் அவையில், அவரது கவித்திறனைப் புகழ்ந்து 'பாரதி' என்ற பட்டத்தைச் சூட்டினார்.)

குறள்

) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்.

) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

விடை:

) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

குறளுக்குப் பொருள்:

  நமக்கு நல்ல வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றெண்ணிஇவர்க்கு இத்தீங்கை செய்தால் எவர் நம்மை என்ன செய்ய முடியும்?” என்ற இறுமாப்புக் கொண்டு தீங்கிழைத்தவர்களையும் பொறுமைப் பண்பால் வெற்றி காண வேண்டும். (பொறையுடைமை : 8வது குறள்)

 

3. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக.


விடை : 1 - , 2 - , 3 –

 

4. தீரா இடும்பை தருவது எது?

) ஆராயாமை, ஐயப்படுதல்

) குணம், குற்றம்

) பெருமை, சிறுமை

) நாடாமை, பேணாமை

விடை: ) ஆராயாமை, ஐயப்படுதல்

குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

 தீரா இடும்பை தரும்

 

5. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.

) நுணங்கிய கேள்வியர் - நுட்பமான கேள்வியறிவு உடையவர்.

முகிலன் நுட்பமான கேள்வியறிவு உடையவனாக இருந்தான். அதனால் பெரியோரிடத்துப் பணிவான சொற்களில் பேசுகிறான்.

) பேணாமை - பாதுகாக்காமை.

அப்பாவின் நூலைப் பாதுகாக்காமையால் இனியன் பழைய பேப்பர் வியாபாரியிடம் போட்டுவிட்டான்.

) செவிச் செல்வம் - கேட்பதால் பெறும் அறிவு.

அறிஞர்களின் அறிவுரைகளைக் கேட்பதால் பெறும் அறிவு தக்க சமயத்தில் பேச்சுப் போட்டியில் பேசுவதற்கு பயன்பட்டது.

) அறனல்ல செய்யாமை - அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல்.

மலரவன் இளமையிலிருந்தே அறம் அல்லாத செயல்களைச் செய்யாதிருந்ததனால் தான், அமைதிக்கான விருது கிடைத்தது.

 

 குறுவினா

1. நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?

   தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம்போலத் தன்னை இகழ்பவரிடத்தும் பொறுமை காக்க வேண்டும்.

 

2. தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும் - இக்குறட்பாவின் கருத்தை விளக்குக.

   தான் இன்பம் அடைய வேண்டுமென எண்ணி இன்னொருவருக்குச் செய்யும் தீய செயல்களே பின்னர் அந்த இன்பத்தை நீக்கும். தீச்செயலை எவர் செய்தாரோ அவருக்கே துன்பத்தைத் தரும். தீ தொட்டால் தான் சுடும். தீயசெயல்கள் நினைத்த அளவிலே சுட்டெரிக்கும் ஆற்றல் உள்ளன. அதனால் தான் 'தீயினும் அஞ்சப்படும்' என்றார்.

 

3. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல் - இக்குறட்பாவில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.

    ஒற்றன் ஒருவன் மறைந்திருந்து கேட்டுத் தெரிந்த செய்தியை மற்றோர் ஒற்றனை அனுப்பி அறிந்து வரச் செய்ய வேண்டும் நம்ப வேண்டும் மன்னன், அவற்றை ஒப்பு நோக்கிய பின்பே, அதனை உண்மையென நம்பவேண்டும்..

 

4. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

 சொல் ஒன்று, செயல் வேறு என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நடந்து கொள்பவரின் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.

 

கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.

மௌனவிரதம் என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு மௌனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மௌனவிரதம் ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான். "எங்கள் வீட்டு அடுப்பை அணைத்துவிட்டேனா தெரியவில்லையே!”

பக்கத்திலிருந்தவன் "அடப்பாவி! பேசிட்டியே!” என்றான். உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்ன? நீயும்தான் பேசிவிட்டாய்!” என்றான். நான்காவது ஆள், “நல்லவேளை! நான் மட்டும் பேசவில்லை !" என்றான். இப்படியாக அவர்களின் மௌனவிரதம் முடிந்து போனது.

1. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

2. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து

அறனல்ல செய்யாமை நன்று.

3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

 பேதையின் பேதையார் இல்.

 

கதைக்குப் பொருத்தமான குறள்

 3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்.

விளக்கம்:

 கற்க வேண்டிய அறநூல்களைக் கற்றறிந்தும் அதன் உண்மைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியும் வாழ்கின்ற ஒருவன், தான் கற்றறிந்த ஒழுக்க நெறியில் வாழத் தவறினால் அவனைப் போன்ற அறிவிலிகள் உலகில் இல்லை.

எனவேசொல்வதைப் போல செய்ய வேண்டும் செய்வதையே சொல்ல வேண்டும்

திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சி செய்திகள்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல் திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப் திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.

 

கலைச்சொல் அறிவோம்

அகழாய்வு - Excavation

நடுகல் - Hero Stone

புடைப்புச் சிற்பம் - Embossed sculpture

கல்வெட்டியல் - Epigraphy

பண்பாட்டுக் குறியீடு - Cultural Symbol

பொறிப்பு - Inscription


தமிழகத்தில் அகழாய்வு நடைபெற்ற முக்கிய இடங்கள்


Tags : Chapter 3 | 9th Tamil இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 3 : Ullathin sher : Questions and Answers Part II Chapter 3 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : கேள்விகள் மற்றும் பதில்கள் - பகுதி 2 - இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்