Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | இலக்கணம்: மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் | 11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall

   Posted On :  09.08.2023 07:55 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ்

இலக்கணம்: மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ் : இலக்கணம்: மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 8

இனிக்கும் இலக்கணம்

மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

மாணவர்கள் பள்ளியில் பயில்கின்றபோதே கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். இத்திறன்கள் எதிர்காலத்தில் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அமையும் வகையில் தமிழ்மொழியைக் கற்பதோடு நில்லாமல் தமிழ்சார்ந்த பிரபணிகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். இந்நிலையில் அச்சுப்படி குறியீடுகளை அறிந்து பிழைத்திருத்தம் செய்யும் இப்பயிற்சியானது மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கு உதவும்.

நூல்களையோ, இதழ்களையோ வெளியிடும்போது பிழையின்றி அச்சிடவேண்டும். எழுத்துப்பிழைகள், தொடர்ப்பிழைகள். மயங்கொலிப் பிழைகள் ஒருமை பன்மைப் பிழைகள் ஆகியவை நிறைந்த செய்திகள், படிப்போர்க்குத் தவறான கருத்தை அளித்து,  குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எனவே, நூல்கள் அல்லது இதழ்களை அச்சிடுவதற்கு முன்னர் அச்சுப்படி திருத்துபவர் அப்பாணியின்போது பிழைகளைத் திருத்துவதற்குப் பின்பற்றும் முறைகளையும் திருத்தக் குறியீடுகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.

அச்சுப்படி திருத்துபவரின் பணிகள்

மூலப்படியில் (Original Copy) உள்ளபடியே செய்திகள் அச்சாகியுள்ளனவா? என்று ஒவ்வொரு வரியையும் படித்துக் கவனித்தல் வேண்டும்.

செய்தியின் உள்ளடக்கம், புள்ளிவிவரங்கள், எண்கள்அட்டவணைகள் முதலியன  விடுபட்டுள்ளனவா என்பதை மூலப்படியோடு ஒப்பீட்டுக் கவனித்தல் இன்றியமையாதது. ஏனெனில், புள்ளி விவரங்கள் மாறினால் செய்தியின் பொருளில் முரண்பாடு ஏற்படும்.

அச்சுப்படி திருத்துவோர் செய்தியின் உருவையோ உள்ளடக்கத்தையோ மாற்றுதல் கூடாது.

பிழை ஏற்பட்ட சொல்லின்மீது எழுதுதல் கூடாது. ஒரு வரியின் இடப்பக்கப் பாதியில் பிழை இருந்தால் இடப்பக்க ஓரமும் வலப்பக்கப் பாதியில் பிழை இருந்தால் வலப்பக்க ஓரமும் திருத்தம் தருதல் அச்சிடுவோர்க்குப் பயனுடையதாக அமையும்.

பிழைகளை ஓரம்வரை கோடிழுத்துக் காட்டும்போது, மேலும் கீழும் உள்ள வரிகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

ஒரு வரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிழைகள் இருந்தால் பிழைகளைக் குறிக்கும் கோடுகளைத் தெளிவாகக் காட்டல் வேண்டும்.

ஒரு சொல்லில் பிழைகள் பல இருந்தால் அச்சொல்லையே நீக்கிவிட்டுச் சரியான சொல்லைத் தெளிவாகப் பக்க ஓரத்தில் தருதல் வேண்டும்.

எண்ணின் (Number) இடையில் பிழையிருந்தால் அந்தத் தொகையை முழுவதுமாகப் பிழையின்றி எழுதிக்காட்டுதல் நல்லது.

அச்சுப்படியில் இருக்கும் வண்ணத்திற்கு மாறான வண்ணமுடைய மையால் திருத்துதல் வேண்டும். இது பிழைகளைத் தெளிவாகக் கண்டறிய உதவும்.

 

குறியீடுகள் இடுதல்

அச்சுப்படியில் இருக்கும் பிழைகளைத் திருத்த உலக அளவில் பொதுவான திருத்தக் குறியீடுகள் என்று சில உண்டு. அத்தகைய திருத்தக் குறியீடுகளை அச்சுப்படி திருத்துவோர் முதலில் படித்தறிதல் வேண்டும். பிழையிருக்கும் இடத்தில் ஒரு சிறு கோட்டினால் குறித்து, அந்த வரிக்கு நேராகப் பக்கத்தின் ஓரப்பகுதியில் (Mar- gin) குறியீடுகளைப் பொருத்தமாக இட்டுப் பிழையின் திருத்தத்தைக் குறிப்பிடுதல் வேண்டும். ஒரே வரியில் பல தவறுகள் வந்தால் அவற்றை வரிசைப்படி பக்க ஓரத்தில் சிறு சாய்வான கோடிட்டுத் திருத்தத்தைக் குறிப்பிடுதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு

பாரதியார் கேலிச்சித்திரத்தை விகடச்சித்திறம் என்று குரிப்பார். /லி / /றி

 

திருந்தக் குறியீடுகளின் பிரிவுகள்

பிழைகள் உள்ள அச்சுப்படியைத் திருத்துவதற்குக் கையாளப்படும் திருத்தக் குறியீடுகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை:

1. பொதுவானவை (General)

2. நிறுத்தக்குறியீடுகள் தொடர்பானவை (Punctuations)

3. இடைவெளி தரவேண்டியவை (Spacing)

4. இணைக்க வேண்டியவை (Alignment)

5. எழுத்து வடிவம் (Type/Font) என்பவையாகும்.

1. பொதுவானவை

குறியீடு  குறியீட்டுப் பொருள்

Dt - அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக.

Λ - சொல்லையோ எழுத்தையோ இந்தக் குறிப்பிட்ட இடத்தில் சேர்த்துக் கொள்க.

[ - புதிய பத்தி (New Paragraph) தொடங்குக.

எடுத்துக்காட்டு

 பாரதி தம்மைப் போலவே பிறரை/ /யும் நேசிக்கும் பண்பாளர்.

2. நிறுத்தக் குறியீடுகள்

குறியீடு குறியீட்டுப் பொருள்

,/ - கால் புள்ளியைச் சேர்க்கவும்

;/ - அரைப் புள்ளியைச் சேர்க்கவும்

./ - முற்றுப்புள்ளி இடவும்.

?/ - வினாக்குறி அடையாளம் இடவும்.

!/ - வியப்புக் குறியைச் சேர்த்துக் கொள்ளவும்.

:/ - முக்காற்புள்ளி சேர்க்கவும்.

எடுத்துக்காட்டு

சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / சான்றோர் அவை / . / , / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி ,/ போன்ற அமைப்புகள் செய்துள்ளன.

3. இடைவெளி தரவேண்டியவை

குறியீடு குறியீட்டுப் பொருள்

 - சொற்களை அல்லது எழுத்துகளைச் சேர்க்கவும். இடைவெளி விட வேண்டாம்.

# - பத்திகளுக்கிடையில் வரிகளுக்கிடையில் சொற்களுக்கிடையில் இடைவெளி தருக.

எடுத்துக்காட்டு

தமிழ்/இதழ்களில் தமிழ்/ஆண்டு /# /# திங்கள், நாள் ஆகியவற்றை முதன்  முதலாக குறித்தவர் பாரதியார். /

4. இணைக்க வேண்டியவை


எடுத்துக்காட்டு

.

5. எழுத்து வடிவம்

குறியீடு குறியீட்டுப் பொருள்

Unbold - வழக்கமான எழுத்தில் மாற்றுக

Bold - தடித்த எழுத்தில் மாற்றுக

Trs - சொற்கள், எழுத்துகளை இடம் மாற்றுக

I.c. - எழுத்துருவைச் சிறியதாக ஆக்குக

எடுத்துக்காட்டு - 1

(சிலப்பதிகாரம்) (மணிமேகலை)/ B/B/ ஆகிய இரண்டும் தமிழ்மொழியில் தோன்றிய இரட்டைக்காப்பியங்கள்.

எடுத்துக்காட்டு - 2

உள்ளத்துள்ளது கவிதை - /இன்ப உருவெடுப்பது கவிதை trs/

திருத்தக்குறியீடுகளின் தமிழ்ப்பெயர்கள்

Apostrophe ( ' ) – எழுத்துக்குறை

Semicolon (;) - அரைப்புள்ளி

Colon  (:) - முக்காற்புள்ளி

Colondash (:-) - வரலாற்றுக்குறி

Ditto mark (..) - மேற்படிக்குறி

Dash (-) - இடைக்கோடு

Bar (/) - வெட்டுக்கோடு

Brackets (()) – பிறைக்கோடு

Double Brackets ( { } ) - இரட்டைப்பிறைக்கோடு

Large Brackets ( [ ] ) - பகரஅடைப்பு

Tags : Chapter 8 | 11th Tamil இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall : Grammar: Meipu tirutha kuriedugal Chapter 8 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ் : இலக்கணம்: மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் - இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ்