Home | 3 ஆம் வகுப்பு | 3வது தமிழ் | துணிந்தவர் வெற்றி கொள்வர்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 6 | 3 ஆம் வகுப்பு தமிழ் - துணிந்தவர் வெற்றி கொள்வர்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 3rd Tamil : Term 1 Chapter 6 : Thunithavar vetri kolvar

   Posted On :  29.06.2022 02:10 am

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6 : துணிந்தவர் வெற்றி கொள்வர்

துணிந்தவர் வெற்றி கொள்வர்: கேள்விகள் மற்றும் பதில்கள்

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6 : துணிந்தவர் வெற்றி கொள்வர்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

பயிற்சி


வாங்க பேசலாம்

1. போட்டி நடந்த இந்த வகுப்பறையில் நீ இருந்ததிருந்தால் என்ன செய்திருப்பாய்?

முயற்சி செய்திருப்பேன்.


2. பளு தூக்குதல் போன்ற கடினமான வேலைகளை ஆண் பெண்  இருவராலும் செய்ய முடியுமா? உனது கருத்து என்ன? வகுப்பறையில் கலந்துரையாடுக.

ராஜசேகர் : பளுதூக்குதல், மல்யுத்தம் போன்ற போட்டிகளில் ஆண்கள்  தான்  சாதிக்க  முடியும். 

சசிரேகா : ஏன் எங்களால் முடியாது? கர்ணம் மல்லேஸ்வரி, மீராபாய் சானு, போன்றோர் உலக போட்டிகளில் தங்கம் வென்று சாதித்துள்ளனரே! 

கார்த்திகா : சுரேகா யாதவ் புனே முதல் மும்பை வரை ரயிலை ஓட்டினார்; சுசேதா கடேதங்கர் கோபி பாலைவனத்தைக் கடந்தார். அவனி சதுர்வேதி என்ற பெண்மணி முதல் இந்திய போர் விமானியானார்.  உஜ்வாலா  பாட்டில் என்ற பெண்மணி  இந்தியாவில் முதன் முதலில் கப்பலோட்டிய மாலுமி. 

விமலா : விண்வெளிக்கே  இந்தியப் பெண்ணான கல்பனா சாவ்லா சென்றாரே

நந்தகோபால் : இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக அத்தனை  வேலைகளையும் பெண்களும் செய்ய முடியும்.



படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்


சரியான விடையைத் தெரிவு செய்வோமா? 

1. வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) வகுப்பு + அரை                                              

ஆ) வகுப்பு + அறை

இ) வகு + அறை                                                     

ஈ) வகுப் + அறை

விடை : ஆ) வகுப்பு + அறை


2. இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள் ________.

அ) மகிழ்ச்சி                        

ஆ) மதிப்பு     

இ) அவமதிப்பு                      

ஈ) உயர்வு

விடை : இ) அவமதிப்பு


3. பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் __________.

அ) சிறிய                                                            

ஆ) நிறைய           

இ) அதிகம்                                                        

ஈ) எளிய

விடை : அ) சிறிய


4. வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல் ________.

அ) சாதனை                                                      

ஆ) மகிழ்ச்சி

இ) நன்மை                       

ஈ) தோல்வி

விடை : ஈ) தோல்வி


5. மண்ணைப்பிளந்து  என்ற  சொல்லைப்  பிரித்து எழுதக்  கிடைப்பது _______.

அ) மண் + பிளந்து                         

ஆ) மண்ணைப் + பிளந்து

இ) மண்ணை + பிளந்து                                                      

ஈ) மன் + பிளந்து

விடை : ஆ) மண்ணைப் + பிளந்து



வினாக்களுக்கு விடையளி

1. மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி என்ன?

பெட்டியைத் தூக்கி வரும் போட்டியே ஆசிரியர் அறிவித்தது. 


2. மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்காததற்குக் காரணங்கள் யாவை?

பெட்டி உருவ அளவில் பெரியதாக இருந்ததால் போட்டியில் மாணவர் பலர் பங்கேற்கவில்லை. 


3. கவியரசியின் வெற்றிக்குக் காரணம் என்ன?

 கவியரசியின் வெற்றிக்குக் காரணம் முயற்சியாகும்.



பாடப்பொருளை வரிசைப்படுத்துவோமா?

1. இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர். 

2. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினார். 

3. தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள். 

4. ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார். 

5. அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.

விடை :

1. ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார். 

2. அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.

3. இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர். 

4. தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள். 

5. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினார். 



பழத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்கலாமா?




எ.கா:

1. ஆசிரியர் 

2. அதிசயம்

3. போட்டி

4. பெட்டி

5. பெயர் 

6. சரி 

7. பெரிய                                   

8. ஆதி

9. சிரி

10. அடி

 

பொருத்தமான எதிர்ச்சொல் சாவியைக் கொண்டு பூட்டைத் திறப்போமா?




இணைந்து செய்வோம்

மாணவர்களுக்கு வேண்டிய குணங்களைக் கொண்ட மீன்களுக்கு மட்டும் வண்ணமிடுக.




மொழியோடு விளையாடு

அம்புக்குறியுடன் கூடிய சுழல் அட்டையில் மொழி முதல் எழுத்துகளை எழுதிக் கொள்ள வேண்டும்.  மாணவர்களை வட்ட வடிவில் அமர  வைத்து  இந்த அட்டையினைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும்  அம்புக்குறியினை  வேகமாகச் சுற்றி விடுவர். அம்புக்குறி எந்த எழுத்தில் நிற்கிறதோ, அந்த எழுத்தில் தொடங்கும் ஏதேனும் ஒரு சொல்லை அந்த  மாணவர்  கூறவேண்டும். இவ்வாறே அனைத்து  மாணவரையும் பங்கேற்கச் செய்தல் வேண்டும். பயன்படுத்திய பின்பு எழுத்துகளை மாற்றி  மீண்டும் பயன்படுத்த வேண்டும்.


ம - மஞ்சள், மட்டை, மருந்து, மணல்,

ந - நட்பு, நண்பன், நன்மை 

இ - இமயம், இன்பம், இனிமை, இட்லி.

உ - உண்மை, உழைப்பு, உறுதி, உலகம் 

அ - அம்மா, அன்பு, அமைதி, அழகு 

எ - எறும்பு, எண்ணிக்கை, எட்டு, எலி 

த - தம்பி, தட்டு, தயிர், தக்காளி 

க - கம்பி, கட்டிடம், கதவு, கட்டில் 

ப - படம், பட்டம், பம்பரம், பம்பாய் 

ஆ - ஆசிரியர், ஆலயம், ஆகாயம், ஆனந்தம்

 


கலையும் கைவண்ணமும்

பயன்படுத்திய மற்றும் உபயோகமற்ற பொருள்களைக் கொண்டு பல்வேறு உருவங்கள் செய்து மகிழ்க.



செயல் திட்டம்

“முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்பது போன்று தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏதேனும் ஐந்து பொன்மொழிகள் மற்றும் பழமொழிகளை எழுதித்  தொகுத்து  வருக.

பழமொழிகள் / பொன்மொழிகள்

1. முடியும் என்றால் முயற்சி செய்; முடியாது என்றால் பயிற்சி செய்.

2. நேரத்தை, வீணாக்கும்போது 

  கடிகாரத்தைப் பார்

  ஓடுவது முள் அல்ல

  உன் வாழ்க்கை. 

3. முயற்சி இல்லாத இடத்தில் எதுவும் விளங்காது.

4. நல்ல காரியங்கள் தாமாக வந்து சேர்வதில்லை.

5. எதுவும் தாமாக வருவதில்லை, எல்லாவற்றையும் தேடியே ஆக வேண்டும்.

 


Tags : Term 1 Chapter 6 | 3rd Tamil பருவம் 1 இயல் 6 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 1 Chapter 6 : Thunithavar vetri kolvar : Thunithavar vetri kolvar: Questions and Answers Term 1 Chapter 6 | 3rd Tamil in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6 : துணிந்தவர் வெற்றி கொள்வர் : துணிந்தவர் வெற்றி கொள்வர்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 6 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6 : துணிந்தவர் வெற்றி கொள்வர்