Home | 3 ஆம் வகுப்பு | 3வது தமிழ் | உண்மையே உயர்வு: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 1 | 3 ஆம் வகுப்பு தமிழ் - உண்மையே உயர்வு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 3rd Tamil : Term 2 Chapter 1 : Unmaiya uyarvu

   Posted On :  02.07.2022 12:32 pm

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : உண்மையே உயர்வு

உண்மையே உயர்வு: கேள்விகள் மற்றும் பதில்கள்

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : உண்மையே உயர்வு: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்
பயிற்சி

வாங்க பேசலாம்

1. சுமப்பதற்கு எளிதானது பஞ்சுமூட்டையா? உப்பு மூட்டையா? குழுவில் கருத்தைப் பகிர்க.

• சுமப்பதற்கு எளிதானது பஞ்சு மூட்டை ஆகும். ஏனெனில் அதன் எடை   குறைவு  

• உப்பு மூட்டை சுமப்பதற்கு மிகவும் கடினம். ஏனெனில் அதன் எடை  அதிகம்.


2. கதைப்பாடலில் உள்ள கருத்துகளை உம் சொந்த நடையில் கூறுக.

உரிமையாளர் ஒருவர் தம் கழுதையின் மீது தினமும் உப்பு மூட்டை ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பொழுது ஒருநாள் உப்பு மூட்டை அருகிலுள்ள ஓடையில் விழுந்தது. மீண்டும் அம்மூட்டையை கழுதையில் ஏற்றியபோது அதன் எடை குறைந்திருந்தது. அதனைக் கண்ட கழுதை மறுநாளும் அவ்வாறே உப்பு மூட்டையை ஓடையின் அருகில் வந்ததும் நீரில் தள்ளியது. கழுதையின் சூழ்ச்சியை அறிந்துகொண்ட அதன் உரிமையாளர் மறுநாள் பஞ்சுமூட்டையை கழுதையின்மேல் ஏற்றினார். அந்த ஓடையின் அருகில் வந்ததும் மூட்டையை கீழே தள்ளியது. மீண்டும் மூட்டையை கழுதையின் மேல் தூக்கி வைத்தபோது அதன் எடை அதிகமானது. உரிமையாளரை ஏமாற்ற நினைத்த கழுதை ஏமாந்து போனது.

நீதி : உழைப்பே  உயர்வு  தரும்.



படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. 'சுமந்து' - இச்சொல்லின் பொருள் _____________ 

(அ) தாங்கி 

(ஆ) பிரிந்து

(இ) சேர்ந்து

(ஈ) விரைந்து

விடை: அ) தாங்கி 


2. 'வேண்டுமென்று’ - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________ 

(அ) வேண்டு + மென்று

(ஆ) வேண்டும் + என்று 

(இ) வேண் + டுமென்று

(ஈ) வேண்டி + என்று

விடை: ஆ) வேண்டும் + என்று 


3. 'நினைத்தது' - இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் _____________ 

(அ) மறந்தது

(ஆ) பேசியது 

(இ) எண்ணியது

(ஈ) வளர்ந்தது

விடை: அ) மறந்தது


இப்பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?


வந்தது      - விழுந்தது 

போய்விடும் – கொண்டிடும்

எண்ணினார் - ஏற்றினார் 

தள்ளிடும்   - சென்றிடும்


சிறு வட்டத்தில் உள்ள எழுத்தில் முடியும்படி சொல் உருவாக்குக.


1. குடை  

2. தடை 

3. உடை  

4. ஓடை

5. எடை

6. கடை


படக்குறியீடுகளைக் கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கலாமா?



1. புன்னகை

2. அழுகை

3. சினம்

4. கவலை  

5. சிந்தனை

6. பயம்


மீண்டும் மீண்டும் சொல்லலாமா?

கூவுற கோழி கொக்கரக் கோழி

கொக்கரக் கோழி கொழு கொழு கோழி

கொழு கொழு கோழி கொத்தற கோழி

தோணி மேலே கோணி

கோணி மேலே அணில்

அணில் கையில் கனி



மொழியோடு விளையாடு

சொற்களைக் கூறுவோம் கைகளைத் தட்டுவோம் 



மாணவர்களை வட்டமாக நிற்கச் செய்க. உப்பு, உடை, உண்டியல், போன்று 'உ' எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கூறினால் மாணவர்கள் ஒருமுறை கையைத் தட்டவேண்டும். கழுதை, கடை, கண் போன்ற 'க' என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கூறினால் இருமுறை கையைத் தட்டவேண்டும். இவை அல்லாத சொற்களைக் கூறினால் கைகளைத் தட்டக்கூடாது. இவ்வாறு எழுத்துகளை மாற்றி விளையாடிப் பார்க்கலாம்.


செயல்திட்டம்

எளிய கதைப்பாடல்களைத் தேடிப் படித்து வந்து வகுப்பில் கூறுக.

ஆட்டு மந்தை ஒன்றிடம்                               

அருமை நண்பன் போலவே 

காட்டு ஓநாய் வந்ததே

கனிந்த வார்த்தை உரைத்ததே                                     

அன்பு மிக்க தோழரே

அடியேன் உங்களிடம் வேண்டுகிறேன் 

என்றும் உங்கள் நண்பனாய் 

இருக்கவே விரும்பி வந்தேனே!       

என்னை உங்கள் காவல்நாய்

குரைத்து குரைத்து விரட்டுதே 

உங்கள் காவல் நாயை விரட்டினாய்                                                      

கஷ்டங்கள் யாவும் தீர்ந்திடுமே

ஆவலோடு நாமெல்லாம் அருமை

நண்பர்கள் ஆகி விடலாமே

உண்மை என்று நம்பிய

ஆடுகள் எல்லாமே உண்மையாக  

காவல் காத்த நாயை 

ஓட ஓட விரட்டியதே

காவல் இல்லா ஆடுகளை

ஒவ்வொன்றாய் அடித்து தின்றதே!




Tags : Term 2 Chapter 1 | 3rd Tamil பருவம் 2 இயல் 1 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 2 Chapter 1 : Unmaiya uyarvu : Unmaiya uyarvu: Questions and Answers Term 2 Chapter 1 | 3rd Tamil in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : உண்மையே உயர்வு : உண்மையே உயர்வு: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 1 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : உண்மையே உயர்வு