Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu

   Posted On :  15.07.2023 03:28 am

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது

வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அரசரை அவரது -------- காப்பாற்றும்.

அ) செங்கோல்

ஆ) வெண்கொற்றக்குடை

இ) குற்றமற்ற ஆட்சி

ஈ) படை வலிமை

[விடை : இ) குற்றமற்ற ஆட்சி]

 

2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் --------- தகுதி அறிந்து பேச வேண்டும்.

அ) சொல்லின்

ஆ) அவையின்

இ) பொருளின்

ஈ) பாடலின்

[விடை : ஆ) அவையின்]

 

3. 'கண்ணோடாது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கண் + ஓடாது

ஆ) கண் + ணோடாது

இ) க + ஓடாது

ஈ) கண்ணோ + ஆடாது

[விடை : அ) கண் + ஓடாது]

 

4. 'கசடற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கச + டற

ஆ) கசட + அற

இ) கசடு + உற

ஈ) கசடு + அற

[விடை : ஈ) கசடு + அற]

 

5. என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) என்றாய்ந்து

ஆ) என்றுஆய்ந்து

இ) என்றய்ந்து

ஈ) என்அய்ந்து

[விடை : அ) என்றாய்ந்து]

 

குறுவினா

1. நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?

விடை

ஒரு செயலை இந்த வகையால், இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து, அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

 

2. சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?

விடை

எதையும் நன்கு ஆராய்ந்து, ஒருபக்கம் சாயாது நடுவு நிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சி ஆகும்.

 

3. அரசன் தண்டிக்கும் முறை யாது?

விடை

ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து, அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது, அரசன் தண்டிக்கும் முறையாகும்.

 

4. சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?

விடை

கேட்பவரைத் தன் வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பு ஆகும்.

 

பின்வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

பள்ளி ஆண்டுவிழா ஆலோசளைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைக்குழுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனை பரிந்துரைத்தனர். தலைமை ஆசிரியர் 'செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான். ஆனால் இது கலைக்குழுவிற்கான தலைவர் பதவி. நடனம், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுள்ள ஒருவரே இதற்குத் தகுதியானவர். எனவே என்னுடைய தேர்வு கலையரசன்' என்று நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள் அனைவரும் 'சிறந்த தேர்வு' என்று மகிழ்ந்தனர்.

அ) அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகை அறிந்த தூய்மை யவர்.

ஆ) இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து

அதனை அவன்கண் விடல்.

இ) ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.

விடை

ஆ) இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து

அதனை அவன்கண் விடல்.

Tags : Chapter 5 | 8th Tamil இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu : Valviyal: Thirukkural: Questions and Answers Chapter 5 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது : வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது